வச்சக்குறி தப்பாது 4


4

28 ஜூன் 1976

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது விமானம் ஓடுபாதையின் இறுதி வரை ஓடி வளைந்து பார்க்கிங் பேயில் வந்து நின்றது பார்க்கிங் பே அருகே ஒரு பெரிய

கட்டிடமும் அதன் அருகில் இரு கட்டிடங்களும் மட்டும் காணப்பட்டன ஏதோ ஒரு ராணுவ தளம் போன்று இருந்தது பயன்படுத்தி வெகுநாட்களான அல்லது பிரத்யேக விமானங்களுக்கு மட்டும் பயன்படும் விமான நிலையம் போன்று காணப்பட்டது பெரிய அளவில் ஆள் நடமாட்டமும் இல்லை

விமானம் தரையிறங்கியதும், அங்கு ஏகப்பட்ட ராணுவ ஜீப்கள் சுற்றிவளைத்து நின்றது

விமானிகள் அறையில் இருந்த ஒற்றைநாடி ஆசாமி வெளியே வந்தான்

‘‘நான் கீழே போய் கை காட்டினதும், ஒவ்வொருத்தரா கீழே அனுப்பு’’ என்று சாக்ஸ் ஆசாமியிடம் சொல்லிவிட்டு, துப்பாக்கியையும் அவனிடம் கொடுத்தான்

பின், விமானத்தின் கதவை திறந்தான் கீழே பல ராணுவ அதிகாரிகள் விமானத்தில் இருந்து இறங்குபவர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்

கீழே இறங்கிச் சென்ற ஒற்றைநாடி ஆசாமியை, விமான நிலையத்தில் தயாராக இருந்த ஒரு ஆப்ரிக்க ராணுவ அதிகாரி கைக்குலுக்கினார் அதைத் தொடர்ந்து இருவரும் ஏதோ பேசிக் கொண்டனர் பின்னர் அங்கிருந்தபடியே ஒற்றைநாடி ஆசாமி, மேலே இருந்த தனது சகாக்களிடம் அனைவரையும் கீழே அனுப்புமாறு சைகை காண்பித்தான்

அதை புரி்ந்துக் கொண்ட சாக்ஸ் ஆசாமி, விமானத்தில் இருந்த பயணிகளிடம், ‘‘நாம கீழே இறங்கப்போறோம் ஒவ்வொருத்தரா கீழே இறங்கிப்போங்க… உங்க உடைமைகளையும் எடுத்துக்கோங்க…’’ என்று கட்டளையிட்டான்

அதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்க தயாராகினர் ஒவ்வொருவராக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர் அவர்கள் அங்கிருந்த ஒரு கட்டிடத்துக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர் வழி முழுக்க துப்பாக்கி ஏந்திய ஆப்ரிக்க வீரர்கள் பாதுகாப்புக்கு நின்றனர்

அனைவரும் இறங்கிய பின்னர் கடைசியாக விமானிகள் இறங்கி வந்தனர்

எல்லோரும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் கீழ் இருந்த கட்டிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர் அப்போது பொழுது புலர்ந்து கொண்டிருந்தது

உள்ளே சென்றவுடன், ‘‘இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் மற்ற நாட்டினர் என்று மூன்று பிரிவாக பாஸ்போர்ட்களுடன் பிரிந்து நில்லுங்கள்’’ என்று ஒற்றைநாடி ஆசாமி உத்தரவிட்டான்

பயணிகளுக்குள் ஒருவித பதற்றம் எழ ஆரம்பித்தது கடத்தியுள்ளவர்கள் பாலஸ்தீனியர்கள் இதனால் இஸ்ரேலியர்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தால் இஸ்ரேலிய பெண்கள் தங்கள் குழந்தைகளையும், கணவரையும் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தனர்

‘‘இங்க என்ன சத்தம்… சொல்றது காதில விழல? பாஸ்போர்ட்டோ பிரிஞ்சு நில்லுங்க…’’ என்று சாக்ஸ் ஆசாமி கத்தினான்

பயணிகள் தத்தமது பாஸ்போர்ட்களுடன் பிரிந்து நிற்க ஆரம்பித்தனர் இதில் மொத்தம் 106 பேர் இஸ்ரேலியர்கள் இருந்தனர் மற்றவர்கள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டனர் கடத்தல்காரர்களின் ஒவ்வொரு செயலும் பயணிகளிடம் பெரும் பதற்றத்தை உருவாக்க ஆரம்பித்திருந்தது

எல்லோரும் பிரிக்கப்பட்ட பின்னர், ‘‘பார்த்துக் கொள்…’’ என்று போல் கண்களாலேயே சகாக்களுக்கு சைகை செய்துவிட்டு, ஒற்றைநாடி ஆசாமி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுர அறைக்கு சென்றான் அங்கு யாருடனோ மைக்கில் பேசினான்

அப்போது தூரத்தில் கார்கள் அணிவகுப்பு ஒன்று, அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது கார்களின் முன்புறம் உகாண்டா நாட்டு தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன

அந்த கார்களை பார்த்ததும், வீரர்கள் மட்டுமின்றி, கோபுரத்தில் இருந்த அதிகாரிகளும் பரபரப்பாயினர்

‘‘அதிபர் இடி அமீன் வந்து கொண்டிருக்கிறார்’’ ஒரு அதிகாரி தன்னையும் அறியாமல் கூறினார்

ஒற்றைநாடி ஆசாமியின் முகத்தில் புன்முறுவல் தெரிந்தது அங்கிருந்து கீழே இறங்கி, அவரை வரவேற்கும் விதமாக வாசலுக்கு சென்று நின்றான்

கார்கள் சரியாக விமான கட்டுப்பாட்டு கோபுரத்தின் கீழே வந்து நின்றன நடுநாயமாக இருந்த மெர்சிடஸ் காரில் இருந்து அதிபர் இடி அமீன் இறங்கினார்

நாட்டின் அதிபருக்குரிய தோரணை அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது அதிகார மமதை, கையில் இருந்த குச்சியை சுழற்றிக் கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது

இறங்கிய வேகத்தில் வேகமாக நடந்து வந்த இடி அமீன், ஒற்றைநாடி ஆசாமியின் கையை பிடித்து அழுத்தமாக குலுக்கினார்

‘‘பயணம் எப்படி இருந்தது?’’ என்றார் இடி அமீன்


‘‘மிகச்சிறப்பாக இருந்தது மிஸ்டர் பிரசிடென்ட்’’ என்றான் ஒற்றைநாடி ஆசாமி

‘‘பயணிகள் யாரும் பிரச்னை பண்ணவி்ல்லையே’’

‘‘இதுவரையும் யாராலும் எந்த தொந்தரவும் இல்லை ஒரு கர்ப்பிணிக்கு கருக்கலைந்ததால் அவரை பெங்காஜில இறக்கிவிட்டுட்டோம் மற்றபடி விமானத்தில எந்த பிரச்னையும் இல்லை’’

‘‘நம்ம டார்கெட் எத்தனை பேர் இருக்காங்க’’

‘‘மொத்தம் 106 இஸ்ரேலியர்கள் 12 பேர் விமானிகள் மற்றும் பணியாளர்கள் அவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வேற வெளிநாட்டினர்’’

‘‘முதல்கட்ட கோரிக்கையை அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா?’’

‘‘எஸ்… மிஸ்டர் பிரசிடென்ட் ஏற்கனவே ரெண்டு தடவை அவங்ககிட்ட பேசிட்டேன் தகவலையும் சொல்லிட்டேன் அவங்க அரசாங்கம் பேசிக்கிட்டு இருக்குன்னு சொன்னாங்க விரைவில நல்ல முடிவா சொல்றேன்னு சொல்லியிருக்காங்க’’

‘‘யார் உங்க கிட்ட டீலிங் பண்றாங்க?’’

‘‘டேன் சோம்ரான் என்பவர்’’

அதிபர் இடி அமீன் அருகில் இருந்த மற்றொரு ராணுவ உயரதிகாரியை பார்த்தார்

‘‘இஸ்ரேல் விமானப்படை பிரதிநிதி’’ என்று அவரது பார்வைக்கான விளக்கத்தை அளித்தார் அந்த அதிகாரி

‘‘ஓகே… எல்லாம் பிளான்படி நடக்கட்டும் எங்க வீரர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பாங்க… ஏதாவது பிரச்னையின்னா என்னை கான்டாக்ட் பண்ணலாம்’’ கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி கிளம்பினார் இடி அமீன்

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஒற்றைநாடி, அங்கிருந்த ராணுவ அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தான்

அந்த நேரத்தில், விமான கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்த அதிகாரி ஒருவர், ஒற்றைநாடி ஆசாமியை அவசரமாக கூப்பிடுவது தெரிந்தது

கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்த அதிகாரி கூப்பிடுவதை பார்த்ததுமே ஒற்றைநாடி ஆசாமிக்கு புரிந்தது டெல் அவிவிலிருந்து பேசுகிறார்கள் என்று

விரைந்து சென்ற ஒற்றைநாடி ஆசாமி, அதிகாரி கையில் இருந்த மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தான்

‘‘என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?’’

‘‘நீங்க சொல்லியிருக்க நிபந்தனைகள் சாதாரணமானது அல்ல இது நீதித்துறையிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம்; அடுத்த நாட்டு அரசுகளிடமும் பேச வேண்டிய அவசியம் இருக்கு அதனால நாங்க பேசிக்கிட்டிருக்கிறோம்’’ என்று டெல் அவிவிலிருந்து டேன் சோம்ரான் கணீர் குரலில் பேசினார்

‘‘தொடர்ந்து இப்படி இழுத்தடிக்கலாம்னு நினைக்காதீங்க… நாங்க தரையிறங்கிட்டோம்… 48 மணி நேரம் அதாவது 1ம் தேதி வரைக்கும் அவகாசம் தர்றோம் அதுக்கு முன்னாடி எங்க கோரிக்கைகளை நிறைவேத்தலேன்னா நாங்க… ஒவ்வொரு பயணிகளா சுட்டுக் கொல்ல ஆரம்பிச்சுடுவோம்’’ மிரட்டும் தொணியில் பேசினான் ஒற்றைநாடி

‘‘எங்களுடைய நடவடிக்கைகள் தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு நீங்க அவசரப்படாதீங்க எப்படியும் நல்ல செய்தியோட உங்கக்கிட்ட வர்றோம்’’

‘‘அத வேகமாக செய்யுங்க’’ என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்த ஒற்றைநாடி, நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடியே, பயணிகள் இருந்த அறைக்கு நடக்க ஆரம்பித்தான்

----------

டெல் அவிவ்

பிரதமர் அலுவலகம்

பிரதமர் இட்சாக் ராபின் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் ராணுவ அமைச்சர் சிமன் பெரஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், உலகின் தலைசிறந்த உளவுப்பிரிவான மொசாத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்

ஏசி ஓடிக்கொண்டிருந்தாலும், அறையில் பெரும் அமைதி நிலவியது நிசப்தத்தை கலைத்து பிரதமர் பேசினார்

‘‘இப்போ அவங்க எங்க தரையிறங்கியிருக்காங்…’’

பிரதமரின் கூட்டத்துக்காக வந்திருந்த டேன் சோம்ரான், ‘‘உகாண்டாவில இருக்கிற எண்டபேயில தரையிறங்கி இருக்காங்க சார்…’’ என்றார்

‘‘நம்மகிட்ட பணம் கேட்டு ஏமார்ந்துபோன உகாண்டா அதிபர் இடி அமீன் அவங்களுக்கு அடைக்கலம் குடுத்திருக்கார்’’ என்றார் டேன் சோம்ரான் ‘‘அப்புறம் அவங்களால பெங்காஜில தரையிறக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குடுத்த தகவலை வைத்து பார்க்கும்போது, கடத்தல்காரர்கள் 4 பேர் அவங்ககிட்ட மிஷின் கன்கள் மற்றும் கையெறி குண்டுகள் வச்சிருக்காங்கான்னு தெரியவந்திருக்கு சார்… மேலும், அவங்கள்ல ரெண்டு பேர் பாலஸ்தீனர்கள் 2 பேர் ஜெர்மனியர்கள்… இப்போதைக்கு அவங்களுடைய கோரிக்கை, சிறைகள்ல இருக்கிற கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்

குறுக்கிட்ட சிமன் பெரஸ், ‘‘நாம பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் மற்றும் எகிப்து அதிபர் மூலமாக அவங்கிட்ட பேசிப்பார்க்கலாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்’’

சற்று யோசித்த பிரதமர் இட்சாக் ராபின், ‘‘சரி… அதுக்கான தகவலலை அனுப்புங்க… அதேசமயம், இந்த முயற்சிகள் தோல்வி அடையும்பட்சத்தில், பயணிகளை வேறு வழியில காப்பாற்ற முடியுமான்னும் யோசிங்க…’’ என்றார்

‘‘அதுக்கான ஆலோசனை ராணுவ தலைமையகத்தில நடந்துகிட்டு இருக்கு சார்… விரைவில உங்கக்கிட்ட வர்றேன்’’ என்றார் சிமன் பெரஸ்

‘‘சரி… அடுத்தடுத்து எனக்கு தகவலை பாஸ் பண்ணுங்க’’ என்று கூறியபடி பிரதமர் எழுந்திருக்க, மற்றவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று   சற்றே தலைகுனிந்து வணக்கம் தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்து வெளியேறினார் இட்சாக் ராபின்

அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தன

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் மூலம் இஸ்ரேல் அரசு சார்பில் முறைப்படி பேசப்பட்டது அப்பாவி பயணிகள் கடத்தப்பட்டிருப்பதை அறிந்து அவரும் உதவ முன்வந்தார் இதேபோல், எகிப்து அரசும் தங்களுடைய ஆப்ரிக்க கூட்டமைப்பு மூலமாக உகாண்டா அரசு மற்றும் பாலஸ்தீன பிஎப்எல்பி தீவிரவாதிகள் அமைப்புடன் பேச ஒப்புதல் அளித்தனர்

யாசர் அராபத், தன்னுடைய அரசியல் ஆலோசகர் ஹானி அல் ஹாசனை இப்பணிக்கு நியமித்தார் அவர் பிஎப்எல்பி தீவிரவாத அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பயணிகளை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவது என்பது, மனிதாபிமானத்துக்கு புறம்பானது என்றும், இதனால் சர்வதேச சமுதாயத்தின் எதிர்ப்பைத்தான் சம்பாதிக்க முடியும் என்றும் எடுத்துக் கூறினார்

மறுபுறம், எகிப்து அரசும் தன்னுடைய வட்டாரத்தின் மூலம் உகாண்டா அதிபர் இடி அமீன் மற்றும் தீவிரவாத அமைப்பினரிடம் பேசியது ஆனால், தீவிரவாதிகள் எதற்குமே செவி சாய்க்காமல், தங்களுடைய கோரிக்கையிலயே உறுதியாக இருந்தனர்

இந்த விஷயம், டெல் அவிவ் ராணுவ தலைமையகத்தில் இருந்த சிமன் பெரஸூக்கு தெரியவந்தபோது அவரது முகம் சிவந்தது

‘‘தீவிரவாதிகளுக்கு நம்ம வழிதான் சரி…’’ என்று மேஜையில் ஓங்கி குத்தினார் சிமன் பெரஸ்

அந்த மேஜையில் பெரிய வரைபடத்தை பரப்பி வைத்து விவாதித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரிகள், சற்றே அதிர்ச்சியடைந்து அவரை பார்த்தனர் எல்லா நிலைமைகளையும் மிக லாவகமாக கையாள்பவர் என்ற பெருமையை பெற்றவர் அவர் அவரே இவ்வளவு கோபப்படுகிறாரே என்றுதான் அதிர்ச்சியுடன் அதிகாரிகள் அவரை பார்த்தனர்

சற்று சிந்தனையில் இருந்த சிமன் பெரஸ், அடுத்த விநாடி, ஒரு இடத்தை குறிப்பதற்காக பயன்படுத்தும் செஸ் காயின் போன்ற ஒரு பெரிய கட்டையை தூக்கி மேப்பில் வைத்தார் சிமன் பெரஸ்

மேப்பில் அவர் அந்த கட்டையை வைத்த இடம் எண்டபே

(தொடரும் 4)

No comments:

Post a Comment

Thanks