தப்பில்லையா?

தப்பில்லையா?


‘‘மாஸ்டர் நாம செய்றது தப்பில்லையா?. நாம தயாரிச்சிருக்கிற வைரச பயாலஜிக்கல் வெப்பனா மாத்தினா லட்சக்கணக்கான மக்கள் சாவாங்களே?’’ என்றான் யுவாங்.
‘‘வேற வழியில்லை. நம்ம கவர்ன்மென்ட் சொல்றத, செய்றதுதான் நம்ம வேலை. நாமளா ஏதாவது சிந்திக்க ஆரம்பிச்சா… நாம மட்டுமில்ல… நம்ம குடும்பம் கூட உயிரோட இருக்காது தெரியுமில்ல?’’ என்றார் அவரது மாஸ்டர் லீ.
‘‘இருந்தாலும் ஏதாவது செஞ்சு நாம இத தடுக்க முயற்சிக்கலாமே…?’’
‘‘ஏதாவது தத்துபித்து உளறிட்டு இருக்காதே… அவங்களோட டார்க்கெட்டை முடிக்கிறதுக்கிறதுக்காக மிலிடரி கமிட்டி நம்மள நியமிச்சிருக்கு… அப்புறம் சி-41 மாஸ்க் கொஞ்சம் வீக்காக இருக்கிற மாதிரி லேப் டெஸ்ட்டிங் காமிச்சு… அதையும்  மீறி நாசிக்கு வருது வைரஸ்.  அதனால ஹெவி ஸ்டெரைல்-4 மாஸ்க்க மட்டும் யூஸ் பண்ணு… அப்பத்தான் சேப்பா இருக்க முடியும்…’’
‘‘மாஸ்டர் நாம செய்ற வேலை, புனிதமான டாக்டர் வேலைக்கு வர்றப்போ எடுத்துக்கிட்ட உறுதிமொழிக்கு எதிரானதில்லையா?’’
‘‘இப்பவும் உன் நல்லதுக்குதான் சொல்றேன். புலம்பறதவிட்டுட்டு, வேலைய பாரு… நாளைக்கு கமிட்டி மெம்பர் வர்றாங்க… அவங்ககிட்ட வைரச பத்தி விளக்கப்போறது நீ தான். சோ… அதுக்கு  தயாராகு…’’ சொல்லிவிட்டு ஆய்வகத்தைவிட்டு  கிளம்பினார் லீ.
மறுநாள்.
‘‘இந்த வைரஸ் பரவினா…’’ என்று உயர்நிலை கமிட்டி உறுப்பினர்களிடம் விளக்கத்தை ஆரம்பித்தான் யுவாங்.
அப்போதுதான் லீ பதற்றத்துடன் கவனித்தார். யுவாங் மட்டுமின்றி, அங்கிருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது சி-41 மாஸ்க்.
அவரது வெறித்தனமான பார்வையை புன்முறுவலுடன் எதிர்க்கொண்டான் யுவாங்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks