ஏ பார் ஆட்டம் 4



நாள்: நவம்பர் 25. நேரம்: மாலை 5 மணி 
பள்ளி முடிந்து பிளாட்டின் கீழ் பகுதியில் கூடியிருந்தனர் வாண்டூஸ்கள்.
‘‘புரோ இன்னைக்கு மிலிட்டரி தாத்தா பிளாட்டுக்கு போகலாம். அவர் தான் மிலிட்டரி அட்வெஞ்சர்ஸ் கதை எல்லாம் சொல்வார்’’ என்றான் ராகவன்.
‘‘ஆமாடா… அவரோட பிளாட்டுக்கு போய் கதை கேட்டு ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு எல்லாரும் அவர் பிளாட்டுக்கு போவோம்’’ என்றான் ரஹீம்.
ஓகே என்று கோரசாக கத்திய கும்பல், 8 மாடியில் வசித்த மிலிட்டரி தாத்தா என்று வாண்டூஸ்களால் அழைக்கப்படும் கர்னல் குர்மித் சிங் வசித்து வந்தார். அவரும், அவருடைய மனைவியும் மட்டும்தான் பிளாட்டில். குழந்தைகள் பெரியவர்களாகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் மட்டும் இங்கு வசித்து வந்தனர்.
காலிங் பெல் அடித்து நின்றிருந்த வாண்டூஸ்களை கண்டதும் கர்னல் உற்சாகமாகிவிட்டார்.
‘‘என்ன பசங்களா ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பிளாட்டுக்கு வந்திருக்கீங்க?’’ கேட்டார் கர்னல்.
‘‘தாத்தா… இன்னைக்கு உங்கக்கிட்ட கதை கேட்கப்போறோம். அதுக்காகத்தான் வந்தோம்’’ என்றான் அஸ்வின்.
‘‘குட் இந்த தாத்தா ஞாபகம் இப்பவாச்சும் உங்களுக்கு வந்ததே… வாங்க, வாங்க எல்லோரும் உள்ள வாங்க’’ என்று கூறிவிட்டு, அடுப்பங்கரையில் இருந்த மனைவியிடம், ‘‘டியர் இவங்களுக்கு ஏதாச்சும் பண்ணிக்குடேன்’’ என்றார்.
‘‘இதோ ஸ்நாக்ஸ் ஏதாச்சும் செஞ்சுட்டு வர்றேங்க’’ என்றார் அவரது மனைவி
‘‘சொல்லுங்க பசங்கள…’’ என்றார் கர்னல்.
‘‘தாத்தா… உங்க சர்வீஸ்லதானே கார்கில் போர் நடந்துச்சு… அப்போ நீங்க காஷ்மீர்ல தானே இருந்தீங்க? எப்படி இந்த வார் ஆரம்பிச்சது அதச்சொல்லுங்க தாத்தா’’ என்றான் அரவிந்த்.
‘‘குட்… சொல்றேன் கேளுங்க’’ என்று ஆரம்பித்தார் கர்னல்.
‘‘1999ம் ஆண்டு மே 3ம் தேதி காலை நாங்க முகாம்ல இருந்தப்போ, தஷி நம்கியால் என்ற ஆடு மேய்ப்பவர் ஓடோடி வந்தார். இவர் கார்கோன் கிராமத்தை சேர்ந்தவர். கார்கில் மலைப்பகுதிக்கு தன்னோட ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு போனப்போ அங்க, பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி இருக்கிறதை அவர் பார்த்திருக்கிறார். அதைத்தான் எங்கக்கிட்ட வந்து சொன்னார்’’
‘‘முதல்ல அவர் சொன்னதை நாங்க நம்பல. பின்னாடி எங்க அதிகாரிங்க… ஒரு குழுவை அங்க அனுப்பி வச்சாங்க…. ஆனா, அதில ஐந்து வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமா சித்ரவதை பண்ணி கொன்னுட்டாங்க… இதுக்கப்புறம் விஷயம் ரொம்ப பெரிசா இருக்கும்போல என்று நினைத்து அதிகாரிங்க எல்லாம் பெரிய அளவில விசாரணை நடத்த ஆரம்பிச்சாங்க… அதுக்குள்ள பார்த்தா பாகிஸ்தான் ராணுவம், நம்மோட திராஸ், கக்சர், முஷ்கோ பகுதிகளை ஆக்ரமிச்சிருந்தது மே 10ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது’’
‘‘உடனே நம்ம ராணுவ தளபதி, அரசாங்கத்துக்கிட்ட விஷயம் பெரிசா இருக்கிறதையும், ராணுவ நடவடிக்கைக்கு அனுமதி கோரியும் பேசினார். நம்ம பிரதமர் வாஜ்பாய், இந்திய பகுதிகளை மீண்டும் முழுமையாக மீட்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார்’’
‘‘ராணுவம் முழு மூச்சா… போர்ல இறங்கிச்சு… கார்கிலின் மூணாப்புறமும் சுத்தி வளைச்சு, நம்ம ராணுவம் முன்னேறிச்சு… இதுக்கு விமானப்படை பாதுகாப்பு கொடுத்து வந்தது. இதன் மூலம் ஜூன் 4ல் டைகர் ஹி்ல் எ்னற முக்கியப்பகுதியை கைப்பற்றினோம். அதுக்கப்புறம் கார்கில் முழுமையாக மீட்கப்பட்டது. தோல்வி மற்றும் சர்வதேச நிபந்தனைகளால ஜூன் 11ல் பாகிஸ்தான் ராணுவம் கார்கிலில் இருந்து பின்வாங்கியது’’ என்றார் கர்னல்.
கர்னலின் மனைவி ஒரு பெரிய பாத்திரத்தில் நெய், ஒழுக, ஒழுக ரவா கேசரியும், மிக்சர் பாக்கெட்டையும் கொண்டு வந்து வைத்தார்.
‘‘பசங்களா எல்லோரும் கின்னத்தில போட்டு சாப்பிடுங்க என்று கிண்ணங்களை எடுத்துக் கொடுத்தார்’’ கர்னலின் மனைவி.
ரவா கேசரியை ருசித்துக் கொண்டே, ‘‘ஏன் தாத்தா… தீவிரவாதிகளை வேட்டையாடுறதுக்கு ராணுவத்துக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆகுறது… 14 ஹவர்ஸ், 15 ஹவர்ஸ் கன் பைட்டுன்னு பேப்பர்ல வருதே?’’ என்றான் ரஹீம்.
‘‘கரெக்ட் குழந்தைகளா… தீவிரவாதிங்க மக்களை கேடயமா வச்சுக்கிட்டு போறாடுறப்போ… மக்களோட உயிரை காப்பாத்தணுங்கிற முக்கிய பொறுப்பு நம்முடைய வீரர்களுக்கு வந்துடுது… தீவிரவாதிங்களுக்கு மக்களோட உயிரைப்பத்தின கவலையில்ல. அதனால அவங்க சுட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அவங்களையும் பிடிக்கணும், இல்லாட்டி கொல்லணும்… அதேசமயம் மக்களோட உயிரையும் காப்பாத்தணும்ங்கிற குறிக்கோளட நம்மோட வீரர்கள் போராடுறதால உடனடியா அவங்களை கொல்ல முடியுறதில்ல’’ என்றார் கர்னல்.
‘‘லோன் உல்ப் தீவிரவாதிங்களுக்கும், சாதாரண தீவிரவாதிங்களுக்கும் என்ன வித்தியாசம் தாத்தா?’’ கேட்டாள் ரஞ்சனி.
‘‘சாதாரண தீவிரவாதிங்க தாக்குதல் நடத்துற திட்டத்தோட இருப்பாங்க.. ஆனா, லோன் உல்ப் வகை தீவிரவாதிங்க மத்தவங்களையும் கொன்னுட்டு, தாங்களும் அதில உயிரிழப்பாங்க… இவங்களோட குறிக்கோள் நிறைய பொதுமக்களை கொல்லணும்ங்கிறதுதான். சில சமயம் இவங்க கூட்டாக கூட வந்து தாக்குதல் நடத்துவாங்க… ஆனா, தீவிரவாதிங்களை என்னதான் அவங்க டிரைனிங் குடுத்து அனுப்பினாலும், அவங்களுக்கும் உயிர் பயம் இருக்கிறதை நாங்க பார்த்திருக்கிறோம். முதல்ல அவங்களை பிரிக்கணும், அப்புறம் அவங்களை கொல்றது ஈசி… இப்படித்தான் நாங்க கையாளுவோம். எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினா, அவங்களால ஒண்ணும் பண்ண முடியாது. தீவிரவாதிங்க அட்டாக் பண்ணா, துணிச்சலா நாம, அவங்களுக்கு எதிரா போராடணும், இல்லாட்டி அவங்களை கொல்ல வர்ற நம்ம வீரர்களுக்காவது நாம உதவணும். அப்போதான் அவங்களை இந்த மண்ணைவிட்டு காலி பண்ண முடியும்’’ என்றார் கர்னல்.
‘‘சூப்பர் தாத்தா நாங்க எப்பவுமே தாய்நாட்டுக்காக பாடுவோம்… ஜெய் ஹிந்த்’’ என்று கத்தினான் அஸ்வின்.
கர்னல் உட்பட அனைவரும் ‘ஜெய்ஹிந்த்’ என்று குரல் எழுப்பினர்.
(தொடரும் 4)
-ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks