தீதும் நன்றே - முழு நாவல்


தீதும்  நன்றே

அன்பார்ந்த  வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். ‘ஒன் 4 த்ரீ’ கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவையும், அடுத்த கதையை கேட்டு உங்களில் பலர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் இதோ தொடங்கிவிட்டேன், அடுத்த பரபரப்பு கதை. இதற்கும் உங்கள் அன்பும், ஆதரவும், அடுத்தவர்களுடனான பகிர்வும் இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
ஜே.எஸ்.கே.பாலகுமார்.

தீது 1
ஆள் அரவமின்றி இருந்த அந்த இடத்தில் ஓங்கி வளர்ந்த மரங்கள் மட்டும் காற்றின் ஊடே தங்களிடையே உரையாடிக் கொண்டிருந்தன. அந்த சில்லூண்டி சத்தம், கேட்பவர்களை நிச்சயம் பயமுறுத்திவிடும். தூரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளில் இருந்து பாய்ந்து வந்த வெளிச்சம் மட்டும் அவ்வப்போது மரங்களின் மீது பட்டு பரவிச் சென்றது.
காற்று ஒலி மட்டுமின்றி, அங்கிருந்த கும்மிருட்டு, அந்த பிராந்தியத்தில் அமானுஷ்யத்தை பரப்பி வைத்திருந்தது.
அப்போதுதான் அந்த பெரிய கார், ஒற்றையடி பாதையில் வந்து கொண்டிருந்தது. வேன் வகையில் சேரும் அசோக் லேலண்டின் ஸ்டைல் வாகனம் அது. யாருமில்லாத இடத்தில் வந்து நின்ற அந்த வாகனத்தை, இரை தேடி பறப்பதற்காக தயாராக நின்ற ஆந்தை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.
மேடு, பள்ளத்தில் இடது, வலது என்று ஆடி, அசைந்து வந்த வாகனம், ஒரு மரத்துக்கு அருகில் நின்று மூச்சை நிறுத்தியது. சில விநாடிகளுக்கு பின்னர் அதில் இருந்து ஒரு ஆள் முதலில் இறங்கினான்.
சுற்றும், முற்றும் பார்த்தான். பின்னர் கையில் இருந்த எல்இடி டார்ச்சை எடுத்து சுற்றும், முற்றும் அடித்து பார்த்தான். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்ட பின்னர் காருக்குள் இருப்பவர்களை நோக்கி ஜாடை காட்டினான்.
அதில் இருந்து டிரைவர் உட்பட மேலும் 4 பேர் இறங்கினார்கள். ஒரு உருவம் மட்டும் வாகனத்திலேயே அமர்ந்திருந்தது.
சற்று தடித்து வாட்டசாட்டமாக இருந்த நபர், இறங்கி நின்ற நொடியில், இடுப்பில் கையை வைத்து பின்னால் சாய்ந்து இடுப்பு எலும்புக்கு சற்று ஆறுதல் அளித்தார். அடுத்த விநாடியே, மற்றவர்களை பார்த்து, ‘‘ஆகட்டும்… ஆகட்டும்… வேகமா பண்ணுங்க…’’ என்று கட்டளையிட்டார்.
அவரது கட்டளையை ஏற்கும் விதமாக மற்ற மூன்று பேரும், வாகனத்தின் பின் பக்கம் சென்றார்கள். அங்கு ஒருவன் தன்னிடம் இருந்த ஒரு புல் பாட்டிலை பின்னால்  தட்டி மூடியை திறந்து, மடக்மடக்கென்று மேல்நாட்டு சரக்கை தண்ணீர்  கலக்காமலேயே வாயில் ஊற்றிக்கொண்டான். தன் பங்கை முடித்தவுடன் அடுத்தவனிடம் கொடுக்க அவர்களும் அதை குடித்து முடித்துவிட்டு, பாட்டிலை மரத்துக்கு பின்னால் தூக்கி எறிந்தனர்.
மூவரும் முகத்தை துடைத்துக் கொள்ள, மூன்றாவது நபர், ‘‘என்ன மச்சி சரக்கு இன்னைக்கு ரொம்ப கசக்கிற மாதிரி இருக்கு?’’ என்றான்.
‘‘சொல்ல முடியாது மாப்பிள… நம்ம டாஸ்மாக்குக்கு சப்ளை பண்றி அரசியல்வாதி மாதிரி அங்கேயும் ஏதாவது ஒரு ஐட்டம்காரன் இருந்திருப்பான். அதுல போலி சரக்கு வந்துடுச்சு போல…’’ என்றான் சிரித்தபடி.
மூன்றாவது நபர், பேன்ட் பையில் இருந்த கடலை மிட்டாய் பாக்கெட்டை உடைத்து மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு, இவனும் சாப்பிட்டான்.
‘‘டேய்… இன்னும் என்னடா பண்றீங்க?....’’ என்றார் அந்த பக்கத்தில் இருந்து வாட்டசாட்டமான நபர்.
‘‘ஐயா… இதோ ஆரம்பிச்சுடுறோங்கய்யா… வேலைக்கு முன்னாடி கொஞ்சம் பெட்ரோல் போட்டுக்கிட்டோம்’’ என்றான் வழிந்தபடி முதல் நபர்.
பின்னர், வாகனத்தின் டிக்கியை அவன் திறக்க, அங்கு புல் ஸ்கர்ட் அணிந்திருந்த ஒரு இளம்பெண் கிடந்தாள்.
மூன்றாவது நபர் பெண்ணின் முகத்தில் டார்ச் அடித்தபடி, ‘‘டேய்… உயிர் இருக்கா கன்பார்ம் பண்ணிக்கோ…’’ என்றான்.
இரண்டாவது நபர் பெண்ணின் மூக்கில் விரலை வைத்து பார்த்தான். சுத்தமாக பிராணவாயு நின்றுப்போயிருந்தது. ‘‘முடிஞ்சிடுச்சு  மாப்பிள… ஒன்னும் கவலையில்லை…’’ என்றான்.
மூவரும் சேர்ந்து இளம்பெண்ணின் உடலை எடுத்துக் கொண்டு மரத்துக்கு அருகில் கொண்டு  வந்து வைத்தனர்.
‘‘ம்…ம்….  ஆகட்டும் வேகமா பண்ணுங்கடா…’’  என்றார் வா.சா.நபர்.
மூவரும் சேர்ந்து உடனடியாக மீண்டும் வேனுக்கு சென்று டிக்கியில் இருந்த மண்வெட்டி, கோடாலி உள்ளிட்டவற்றை கொண்டு வந்து மடமடவென்று பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
அரைமணி நேரம் இவர்களின் பள்ளம் தோண்டும் சத்தத்தில், காற்றும் அமைதியாகி இருந்தது.
‘‘ஐயா… முடிஞ்சிருச்சு… உள்ள போட்டுடலாம்ங்களா?’’ என்று வா.சா.நபரிடம் கேட்டான் முதல் நபர்.
‘‘ம்… சீக்கிரம் போட்டு மூடுங்க’’
மூவரும் சேர்ந்து உடலை குழிக்குள் இறக்கினர்.
‘‘டேய்… கை, கால், உடம்பில… ஏதாவது நகைநட்டு இருக்கா பார்த்துட்டீங்களா?’’ கேட்டார் வா.சா.நபர்.
‘‘வண்டியில பாடிய தூக்கிப் போடும்போதே பார்த்துட்டேங்கய்யா… ஒண்ணும் இல்லே…’’ என்றான் முதல் நபர்.
‘‘சரி… மூடுங்க…’’ என்று உத்தரவிட்டார்.
‘‘ஐயா…  கடைசியா அவங்க ஒரு முறை அவங்க முகத்தை பார்க்க வேண்டாமா?’’ என்று காரில் இருந்தவரை பார்த்தபடியே கேட்டான் இரண்டாவது நபர்.
‘‘இதுக்கு முன்னாடி நீ என்ன வெட்டியான் வேல பார்த்துட்டு இருந்தீயா? மூடிட்டு வேலைய பாருடா…’’ என்று சத்தமிட்டார் வா.சா.நபர்.
தலையை தொங்க போட்டுக்  கொண்டு மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்தனர்.
எல்லாம்  முடிந்து மீண்டும் வாகனத்தின்  பின்னால் சென்று மற்றொரு பாட்டிலை எடுத்து ஊற்றிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து எல்லோரும் வண்டியில் ஏறிக்கொள்ள, அது நெடுஞ்சாலையை நோக்கி விரைந்தது.
வண்டியில் இருந்த உருவம், வா.சா.நபரின் தோளில் சாய்ந்தபோது, கண்ணில் இருந்து சூடான கண்ணீர் அவரது தோளில் விழுந்தது.
 (தொடரும் 1)
2

சூரியன் மங்கும் நேரம். லண்டன்  தேம்ஸ் நதிக்கரையோரம். தெளிந்த ஆற்றுநீர் சலசலப்பின்றி தடை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.
திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழ்நாட்டு தமிழனுக்கு பொருந்துமோ இல்லையோ , பஞ்சாப் சிங்குக்கு நன்றாகவே பொருந்தும். குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இருப்பார்கள். சிங்குகளிடமும், ஆந்திர தெலுங்கர்களிடமும் இருக்கும் பாராட்டத்தக்க விஷயம், ஒருவர் ஒரு இடத்தில் கொடி நாட்டிவிட்டால் போதும். அவரது மாமன், மாமன் மகன், அத்தை மகன், சித்தப்பா மகன் என்று எல்லோரையும் அழைத்து வந்துவிடுவார்கள்.
வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடம் கேட்டால் இதை தெள்ளத் தெளிவாகவே சொல்வார்கள். ஆனாலும், கூட நம்ம ஆட்கள், சொந்த சித்திப்பையனை கூட அழைத்து செல்ல தயங்குவார்கள்.
அப்படித்தான் லண்டனின் முக்கிய இடங்களில் சீக்கியர்களும், குஜராத்திகளும் கடைகளை வைத்துள்ளனர். குறிப்பாக உணவகங்கள் பெரும்பாலும் இந்தியர்கள் கையில்தான்.
அதுபோன்ற ‘ஹமாரே இண்டியா ஜூஸ் கம் தாபா’வில்தான் ரேஷ்மா அமர்ந்திருந்தாள். மாடலிங் துறையில் பணியாற்றுபவள். நவநாகரீக தமிழச்சி என்றால் மிகையில்லை. அவளது நிறமும், நுனிநாக்கு ஆங்கிலமும் அவளை யாருமே தமிழகத்தில் இருந்து வந்தவள் என்று, மாரியாத்தா கோயிலில் விபூதி அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.
ஹீல்ஸ் போடாமலேயே 5.8 உயரத்தை பார்த்து பிரமிப்பவர்கள் அடுத்ததாக, அதேதான் ‘36’ஐ பார்த்து பெருமூச்சு விடவும் செய்வார்கள். அப்படியே கீழே இறங்கினால், நம்ம ஊர் பிரம்மனின் படைப்பை எண்ணி, எண்ணி மருகுவார்கள். வெள்ளைக்காரிகள் முதல் நம்மூர் பெண்களுக்கே ரேஷ்மாவை கண்டால், ஒரு பொறாமை தானாகவே வெளிப்படுவதை, அவள் கர்வத்துடன் ரசித்துக் கொள்வாள்.
ரேஷ்மாவிடம் வந்தான் பேரர். ‘‘மேடம் என்ன சாப்பிடுறீங்க?’’ என்று தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த பார்வை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.
‘‘நான் என் நண்பருக்காக வெயிட்  பண்ணிட்டு இருக்கேன். அவர் வந்த பின்னாடி ஆர்டர் பண்றேன்…’’ என்று ஒரு புன்முறுவலை பூத்தாள்.
‘‘யூ ஆர் வெல்கம் மேடம்…’’ என்று சொல்லிவிட்டு அகன்றான் பேரர்.
தேம்ஸ் நதியை பார்த்து ரசித்தபடி சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த தாபா.
வெகு நேரமாகியும் நவீன் வராததால், சற்று டென்ஷனாகி நகத்தை கடிக்க ஆரம்பித்திருந்தாள்.
முன்புறம் இருந்த டேபிளில் ஒரு இளம் வெள்ளைக்காரி, ஆரஞ்சு பழச்சாறை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் ரேபான் கூலிங்கிளாஸ் அணிந்த ஸ்டைலான அந்த இளைஞன், தாபாவுக்குள் நுழைந்தான். பெரும் பணக்காரன் என்பது அவனது நடை, உடை, பாவனைகளே தெரிவித்தன. நல்ல சிவப்பு நிறம். பாலிவுட் டைரக்டர்கள் பார்த்தால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அப்படி இருந்தான்.
வந்தவன் நேராக, வெள்ளைக்காரி டேபிளுக்கு சென்று அமர்ந்தான்.முன்புறம் இருந்த டேபிளில் அமர்ந்திருந்த ரேஷ்மா, அவனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘ஹாய்… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்று கூறினான் அந்த வாலிபன்.
‘‘வாட்…’’ என்று பாஷை புரியாதவளாய் கேட்டாள் அந்த வெள்ளைக்காரி.
‘‘நீங்க ரொம்ப அம்சமா… ஆலியா பட் மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்’’ என்றான் நவீன்.
‘‘ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுவர் லாங்குவேஜ்… ஸ்பீக் இன் இங்கிலீஷ்’’ என்றாள் அந்த வெள்ளைக்காரி.
‘‘ஓகே…. ஓகே… கூல்’’ என்று அவளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுமாறு கைகளால் சைகை காட்டினான்.
அவளிடத்தில் ஆங்கிலத்தில் தொடர ஆரம்பித்தான் (வாசகர்களுக்கு கூகுளாண்டவர் துணையின்றி நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது).
‘‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…’’ என்றான் ஆங்கிலத்தில்.
‘‘நீங்க ரொம்ப குசும்புக்காரரா இருப்பீங்க போல இருக்கே?’’ என்றாள் அந்த இளம்பெண்.
‘‘அப்படித்தான் எல்லோரும் சொல்வாங்க… ஆனா உண்மையிலேயே நீங்க ரொம்ப அழகு… என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? நான் சாப்ட்வேர் கம்பெனி ஓனர். நல்லா சம்பாதிக்கிறேன்’’ என்றான்.
‘‘யோவ் என்னய்யா…  சட்டுன்னு இப்படி கேட்டுட்டே… எனக்கு அல்ரெடி ஒரு பாய்பிரெண்ட் இருக்கான்யா… ஒரு  ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்திருந்தேன்னா உன்னையே கட்டிக்கிட்டு இருப்பேன்யா… ரொம்ப வருத்தமா இருக்கே….’’ என்றாள் இளம்பெண்.
‘‘பரவாயில்லை… கல்யாணம்தான் கட்டிக்க முடியாதுன்னு சொல்லுறீங்க… கொறஞ்சபட்சம் உங்கள ஒரு தடவை கட்டிப்பிடிச்சுக்கலாமா?’’ என்றான் அந்த வாலிபன்.
அந்த பெண் உடனே ஜூஸ் கிளாஸூடன் எழுந்து அவனருகே வர, அவனும் அவளை கட்டிக்கொள்வதற்காக இரு கைகளையும் விரித்தபடி எழ, தலையை நோக்கி ஒரு பேக் வந்து விழுந்தது.
ரேஷ்மாதான் நம்மூர் பத்ரகாளியாய் நின்றிருந்தாள்.
‘‘ராஸ்கல் நான் இங்க உட்கார்ந்துட்டு இருக்கேன்… வேணும்னே வெறுப்பேத்துறீயா… உன்னையயய… ’’  என்று பேக்கால் தலையில் அடிக்க ஆரம்பித்தாள்.
‘‘இங்க என்ன நடக்குது அன்பே…’’ என்று புரியாமல் கேட்டாள் அந்த வெள்ளைக்காரி.
‘‘அடிப்போடீ… இவளே… வந்துடுறாளுங்க…  எவண்டா கட்டிப்பிடிக்க வருவான்னு’’ என்று திட்டிவிட்டு, நவீனான அந்த வாலிபனை தன் டேபிளுக்கு இழுத்து சென்றாள் ரேஷ்மா.
காதலியை வெறுப்பேத்த நவீன் செய்த விளையாட்டு என்பதை புரிந்துக் கொண்ட வெள்ளைக்காரி, ‘‘ஓ… நோ…’’ என்று கிளாஸூடன்  நகர்ந்தாள்.
நவீன்தான் ஆரம்பித்தான். ‘‘ஹேய்… டார்லிங்.. என்ன இது கோபமெல்லாம்…இங்க பார்றா என்  செல்லத்துக்கு மூஞ்சு எல்லாம் செவப்பாயிடிச்சு…. விடுடீ… சும்மா உன்னை உசுப்பேத்தான் பண்ணேன். என் செல்லத்தை விட்டுட்டு வேற பொண்ணுக்கூட போவேனா?...’’ என்றான்.
‘‘ஏன்…  போய்த்தான் பாரேன்…’’ என்று மீண்டும் பேக்கை தூக்கினாள்.
அடிபடுவதில் இருந்து தப்பிப்பது போன்று இரு கைகளை முகத்தை மறைத்துக் கொண்டு போக்கு காட்டினான் நவீன்.
‘‘எவ்வளவு நேரமாக உனக்காக காத்திட்டு இருக்கேன் தெரியுமா? அந்த பேரர் கூட நாலு வாட்டி வந்துட்டு போய்ட்டான். ஏண்டா… இவ்வளவு லேட்?’’
‘‘சாரி பேபி… வர்ற வழியில ஒரு பிரண்ட் பார்த்துட்டான். அதுதான் கொஞ்சம் லேட்டாயிடிச்சு… அத விடு… உன் பர்த்டேக்கு ஐயா என்ன கிப்ட் கொண்டு வந்துருக்கேன் தெரியுமா?’’
‘‘என்ன டைமண்ட் ரிங்கா? கோல்டு ரிங்கா? ரொம்ப போர்டா’’
‘‘அதெல்லாத்துக்கும் மேல…’’ என்றபடி தன் பையில் இருந்த ஒரு சிறிய மோதிர பெட்டி போன்ற ஒன்றை எடுத்தான்.
‘‘நிச்சயமா  ரிங்தான். இதில் என்ன விசேஷம் இருக்கு?’’ என்று கேட்டாள் ரேஷ்மா.
‘‘வெயிட் டார்லிங்… உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சு கொண்டு வந்திருக்கேன் தெரியுமா…?’’ என்று கூறியபடி பெட்டியை திறந்தான்.
அதில், கட்டமான கண்ணாடிப்போன்ற படிகத்தின் உள்ளே சிவப்பு நிறத்தில் சின்னதொரு இதயம் இருந்தது.
அந்த இதயத்தின் மீது, ‘வித் லவ் நவீன்’ என்று சிறிய கருப்பு நிற எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
ரேஷ்மாவின் கண்கள் பளீரிட்டன. ‘‘வாவ் ரொம்ப சூப்பர்டா… வித்தியாசமா இருக்கு!’’ என்றபடி, அவனது வலது கையை பற்றிக் கொண்டாள்.
‘‘ஆ… வென்று துடித்தான்’’ நவீன்.
‘‘என்ன ஆச்சுடா…’’ என்று டக்கென்று கையை எடுத்துக் கொண்டாள்.
‘‘பின்னே உனக்கு இதயத்தை குடுக்கிறதுக்கு என் கையில இருந்தில்ல ரத்தத்தை குடுத்திருக்கேன்…’’ என்றபடி, புல்சர்ட் கைப்பகுதியை  மேலே தூக்கிவிட்டு பிளாஸ்திரி போட்டிருந்த இடத்தை காண்பித்தான்.
‘‘என்னடா சொல்லுறே?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘எஸ்… டீ… செல்லம்… என் ரத்தத்தை எடுத்து, அதில செஞ்சதுதான் இந்த இதயம்… கேம்பிரிட்ஜ் பகுதியில புதுசா தொடங்கியிருக்கிற ‘பிளட் அண்ட் கிப்ட்’ கடையில இத சுடச்சுடச் செஞ்சிட்டு வர்றதிலதான் கொஞ்சம் லேட்டாயிடிச்சு…’’ என்றான் நவீன்.
பொது இடம் என்றும் பாராமல், அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு, இதழை கவ்வினாள் ரேஷ்மா.
‘‘ஹூம்ம்ம்ம்… அவளில்லை… நமக்கில்லை…’’ என்று திருவிளையாடல்  நாகேஷ்போல் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பேரர் மனதில் புலம்பினான்.
(தொடரும் 2)

3
இரவு 10 மணி ஆகிவிட்டதால், அடங்கியிருந்தது சென்னை. போக்குவரத்தும் வெகுவாக குறைந்திருந்தது.
விமான நிலையம் செல்லும் வழியில், நெடுஞ்சாலையில் இருந்த, ஹில்வியூ  பைவ் ஸ்டார் ஓட்டல், இரவை பகலாக்கும் வெளிச்சத்தில் அந்த நேரத்திலும் விருந்தினர்கள் வருகைக்கு தயாராக இருப்பதுபோல் பளீரென்று இருந்தது.
ரிசப்ஷனில் இருந்த ஜானும், முருகனும்தான் இருந்தனர். பகல்நேர ஷிப்ட்க்காரர்கள் டூயூட்டி முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தனர். லாபியில் ஆங்காங்கே போலீசார் நின்றிருந்தனர்.
‘என்ன ஜான் இன்னைக்கு போலீஸ் நடமாட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கிற மாதிரி தெரியுது? யாராவது விஐபி.கள் வர்றாங்களா?’’ என்று கேட்டான் முருகன்.
‘‘வழக்கமா வர்ற சென்ட்ரல் மினிஸ்டர் பரமசிவம்தான் இன்னைக்கும் வர்றார். பிஸ்னஸ் மீட்டிங்னு மட்டும் தகவல் சொல்லியிருக்காங்க… ஆனா, அங்க உள்ள நடக்கப்போறது வேற…’’  என்று பூடகமாக சிரித்தான் ஜான்.
‘‘அப்படி என்னய்யா…  ரகசியம்?’’ என்று கேட்டான் முருகன்.
‘‘நீ புதுசா இந்த மாசம்தானே டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கே… இன்னைக்கு தெரியும்…’’ என்று ஜான் பேசிக் கொண்டிருந்தபோது, வராண்டாவில் ஒரு பெரிய ஆடிக்கார் ஒன்று அலுங்காமல், குலுங்காமல் வந்து நின்றது. அதிலிருந்து அப்சரஸ் போன்று ஒரு தேவதை இறங்கி, ரிசப்ஷனை நோக்கி நடந்து வந்தாள்.
ஏற்கனவே அங்கு ரிசப்ஷன் ஷோபாவில் அமர்ந்திருந்த அமைச்சரின் பி.ஏ. ஓடோடி வந்து 302 ரூமுக்கான கீ கார்டை கொடுத்தார்.
‘‘சார் எப்போ வர்றேன்னு சொன்னார்?’’ என்று கேட்டாள் தேவதை.
‘‘இன்னும் டுவெண்டி மினிட்ஸ்ல அரைவ் ஆயிடுவார் மேடம்… பிளைட் லேண்ட் ஆயிடிச்சு…’’ என்றார் பி.ஏ.
‘‘ஓகே குட்’’ என்றபடி அவர் கொடுத்த கீ கார்ட்டை இரட்டை விரல்களால் அசால்ட்டாக வாங்கிக்  கொண்டு லிப்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பி.ஏ. சொன்னபடி அடுத்த 20 நிமிடத்தில் அங்கு பிஎம்டபிள்யூ காரில் வந்து இறங்கினார் மத்திய அமைச்சர் பரமசிவம்.
ஏற்கனவே, அவர் உத்தரவிட்டிருந்தால், இரண்டு அசிஸ்டண்ட்  கமிஷனர் மற்றும் 4 எஸ்.ஐ.க்கள் மட்டும் அங்கு இருந்தனர். அவர்கள் விரைப்பாக அமைச்சருக்கு சல்யூட் அடித்தனர்.
‘‘என்ன பன்னீர் எப்படி இருக்கீங்க?’’ என்று அசிஸ்டண்ட் கமிஷனர்களில் மூத்தவராக இருந்தவரை பார்த்து கேட்டார் அமைச்சர் பரமசிவம்.
‘‘ஐயா தயவில நல்லா இருக்கேங்கய்யா…’’ என்றார் அசடு  வழிந்தபடி.
‘‘ஓகே எல்லோரும் இருக்க வேண்டாம். ரெண்டு எஸ்.ஐ. மட்டும் இருந்தா போதும். மத்தவங்க எல்லாம் கிளம்பலாம். ஒண்ணும் பயமில்லை… பிஸ்னஸ் மீட்டிங்தான் ஒரு மணி நேரத்தில முடிச்சிட்டு நானும் கிளம்பிடுவேன்…’’ என்றபடியே லிப்ட்டை நோக்கி நகர்ந்தார் அமைச்சர்.
அவருக்கு விரைப்பாக சல்யூட் அடித்தனர்  பன்னீரும், அவரது சகாக்களும்.
அமைச்சர் மேலே சென்றுவிட, போலீசார் சற்று தளர்வாக சோபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அறை எண் 302 மூடப்படாமல் இருந்தது. வழக்கமாக நடப்பதுதானே. கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றார் அமைச்சர். பின்னாலேயே வந்த பி.ஏ. கதவை தாண்டி  அமைச்சர் செல்லுகையில், ‘‘அப்போ நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேங்கய்யா…’’ என்று சற்றே குனிந்து பவ்யம் காட்டினார்.
அதை கண்டுக்கொள்ளாமல் அறையில் நுழைந்த பரமசிவம், கதவை பின்னங்காலால் உதைத்துவிட்டு, திரும்பி லாக்கரை தட்டிவிட்டார்.
உள்ளே குல்பி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தேவதை.
‘‘என்ன மிருதுளானி… ரொம்ப லேட்டாயிடிச்சா?’’ கேட்டார்  பரமசிவம்.
‘‘இல்ல சார்… நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வந்தேன். சரி ஒரு ஐஸ் சாப்பிடலாமேன்னு ஆர்டர் பண்ணேன். உங்களுக்கு பிடிச்ச கப் ஐஸ் வாங்கி வச்சிருக்கேன்…’’ என்றபடி டேபிளில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
‘‘நீ  எல்லாத்திலேயும் ரொம்ப கெட்டிக்காரி. அதனாலத்தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ குல்பி சாப்பிட அழகப்பார்த்தா… உடனே உன்னை சாப்பிடணும்னு தோணுது…’’ என்றார் அமைச்சர்.
‘‘ம்… மெதுவா சாப்பிடலாம்… இப்போதைக்கு உங்களுக்கு பிடிச்ச கப் ஐஸ் சாப்பிடுங்க…’’
‘‘இந்த கப் ஐஎஸ் எல்லாம் வேண்டாம். எனக்கு ஓரிஜினல்தான் வேண்டும்’’ என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார். பின்னர், ‘‘நான் பிளைட்டிலேயே சாப்பிட்டுட்டேன். இப்போ எனக்கு குல்பிதான் வேணும்…’’ என்றபடி மிருதுளானியை நோக்கி பாய்ந்தார் பரமசிவம்.
‘‘ஐயோ… நீங்க ரொம்பத்தான் நாட்டி… இருங்க விளக்கை அணைச்சிட்டு வர்றேன்’’
அவரை செல்லமாக விலக்கிவிட்டு, லைட்டை அணைத்தாள் மிருதுளானி.
சிணுங்கல்கள், கீறல்கள் என பலவற்றை பார்த்த அந்த ஹோட்டல்  படுக்கை, அன்று  அங்கு நடந்ததையும், மவுனியாக பொருத்துக் கொண்டது.
எல்லாம்  முடிந்தபோது மணி 11 ஆகியிருந்தது.
பரமசிவம் ரெஸ்ட் ரூமுக்கு போய்விட்டு வந்து வேட்டியை கட்டிக் கொண்டார்.
உடனே மிருதுளானியும் ரெஸ்ட் ரூமுக்கு சென்று சில நிமிடங்களில் திரும்பினாள். ‘‘சார்… அந்த பயர் டிபார்ட்மென்ட் கான்ட்ராக்ட் கேட்டிருந்தேனே… டெல்லிக்கு போய்ட்டு வந்து பதில் சொல்றேன்னு சொன்னீங்க!’’ என்றபடியே வந்தாள் மிருதுளானி.
‘‘காரியத்திலேயும் நீ ரொம்ப கெட்டித்தாரிதான். கரெக்ட்டா சமயம் பார்த்து கோல் அடிக்கிற பார்த்தியா?’’ என்றார் சிரித்தபடி.
‘‘நீங்க ஞாபகப் படுத்தச் சொன்னீங்க… அதைதான் சொன்னேன்… வேண்டாம்னா…  விடுங்க…’’ என்று செல்லமாக சிணுங்கினாள் மிருதுளானி.
ஹோட்டல் பூத்தூவாலை கட்டியிருந்த அவளை, கையை பிடித்து இழுத்து கட்டிக் கொண்டார். இருகைகளாலும் மோவாயை பிடித்து தூக்கி, இதழில் முத்தமிட்டார். இன்னமும் சூடாக இருந்தது.
‘‘நாளைக்கு  உன் ஆபிஸ் மேனேஜரை கான்ட்ராக்ட் பார்ம்மோட அனுப்பி வை. கையெழுத்து போடுறேன். அப்புறம் அதில வர்ற 40 சியில… எனக்கு பிப்டி தந்திடனும்… ஓகேயா…’’ என்றார்.
‘‘டபுள்… ஓகே…’’ என்றபடி அவரது கன்னத்தில் முத்தமிட்டு திரும்பினாள் மிருதுளானி.
‘‘நான்  வரட்டா…’’ என்றபடி அவரது பின்புறத்தில் தட்டினார் பரமசிவம்.
‘‘யூ… நாட்டி…’’ என்று சிரித்தபடி  விடைக்கொடுத்தாள் மிருதுளானி.
அவர் கதவைத் திறந்து வெளியே சென்றதும், அப்படியே மீண்டும் கதவை மூடி, லாக் போட்டுவிட்டு படுக்கைக்கு திரும்பினாள்.
வந்தவள் போனை எடுத்து, நம்பரை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தாள்.
சில ரிங் போனவுடன் எடுக்கப்பட்டது.
‘‘என்ன டார்லிங் காரியம் சக்சஸா?’’ என்றது மறுமுனை குரல்.
‘‘ம்… மிருதுளானி இறங்கினா… எதையும் முடிக்காம விட மாட்டான்னு உங்களுக்கு தெரியாது?’’ என்றாள்.
‘‘குட்… அப்போ கெளம்பி வா… நாளைக்கு பேசிக்கலாம்’’ என்றது  மறுமுனைக் குரல்.
அப்போது, ‘‘ஆ… ’’ என்று கத்தினாள் மிருதுளானி.
‘‘என்ன ஆச்சு…’’ மறுமுனை குரல் கேட்டது.
‘‘அந்த எருமை காதுல கூட கடிச்சு வச்சிருக்கு… போன் பட்டதுல வலிக்குது…’’ என்றாள்.
‘‘ஹஹ்ஹா….ஹ்ஹா….’’ என்று சிரிப்புக் குரல் கேட்டது மறுமுனையில்.
(தொடரும் 3)


4
போட்டோ சூட் ஸ்டூடியோ.
இளம் இயக்குநர் மாறன், ரேஷ்மாவை இயக்கிக் கொண்டிருந்தான். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததால், படப்பிடிப்பில் அவளால் மிக இயல்பாகவும், உரிமையோடும் நடந்துக் கொள்ள முடிந்தது.
மாறனை பொருத்தவரையில், நவீனுக்கும் அவன் நண்பன். அதனால், நண்பனின் காதலியிடம் எந்த அளவுக்கு பழக முடியுமோ அந்த எல்லையை புரிந்துக் கொண்டு நடப்பவன். ஆனால், வேலை என்று வந்துவிட்டால், அவன் மிக ஸ்டிரிக்ட்டாான ஆபிசர். அவன் விரும்பும் காட்சிகள், அசைவுகள் வரும் வரையில், ஆர்ட்டிஸ்ட்டை போட்டு வாட்டி எடுத்து விடுவான். ஆனால், அவனிடம் அதிகம் திட்டு வாங்காத ஒரு மாடல் என்றால் அது ரேஷ்மாதான்.
அன்று லிங்கரேக்கு சூட் நடந்துக் கொண்டிருந்தது. இதனால் புது மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஆடைகளை அவள் அணிந்திருந்தாள். அவளுக்கு ஜோடியாக ஒரு வெள்ளைக்கார மாடலை போட்டிருந்தார்கள்.
ஆடைகளை சரி செய்துக் கொண்டிருந்த ரேஷ்மாவிடம் வந்த மாறன், ‘‘ரேஷ்மா, இந்த சீன்ல பின்னால இருந்து வர்ற பீட்டர், உன் முன்புறத்தில் தன்னுடைய கைகளை கொண்டு வந்து ஒரு ரோஸ் நீட்டுறான். நீ திரும்பி பார்க்காமலேயே புன்னகைக்கிறே… அத்தோட பர்ஸ்ட் ஷாட் முடியுது சரியா?’’ என்றான்.
‘‘யெஸ் புரோ… ஐயாம் ரெடி’’ என்றாள்.
ரோஜாப்பூக்களால் ஆன அறை செட்டிங்கில், டூபீஸ் உடையில் நின்றிருந்த ரேஷ்மாவும், பின்னால் ஒரு ரோசுடன் பீட்டரும் தயாராக இருந்தனர்.
‘‘லைட்ஸ் ஆன்’’ என்று உத்தரவிட்டான் மாறன்.
அதைத்தொடர்ந்து, ‘‘சைலண்ட், கேமரா ஸ்டார்ட்ஸ்…’’ என்றான்.
தன் முன்னால் இருந்த ஒரு மலர்ஜாடியை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.
பீட்டரின் கை முன்னால் வந்து ரோஜாவை கொடுத்த விநாடியில், சடாரென திரும்பிய ரேஷ்மா, பீட்டரின் கன்னத்தில் அறைந்தாள்.
அந்த விநாடியில் படப்பிடிப்பு அரங்கமே விக்கித்துப்போனது.
‘‘என்ன ஆச்சு… ரேஷ்மா… ஏன் அவனை அறைஞ்சே…’’ என்று ஓடிவந்தான் மாறன்.
‘‘புரோ அவன் கெட்ட எண்ணத்தில இருக்கிற மாதிரி தெரியுது…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘என்ன சொல்லுறே ரேஷ்மா…’’
‘‘எஸ்… புரோ… சீன்ல இல்லாத ஆக்டிவிட்டியா அவன் என் இடுப்பில கைவச்சான்… அத்தோட… முரட்டுத்தனமா சதையை பிடிச்சான். அதனாலதான் அறைஞ்சேன்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘டேம் இடியட்…’’ என்று பீட்டர் நோக்கிச் சென்ற மாறன், தன் பங்குக்கு அவன் கன்னத்தில் அறைந்தான். தன் தவறை உணர்ந்திருந்த அவன், எதுவும் பேசாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
மீண்டும் ரேஷ்மாவிடம் வந்த மாறன், ‘‘சாரி ரேஷ்மா… ஒண்ணும் இல்லாத நாய்க்கு சில சான்ஸ் குடுத்து வளர்த்துவிட்டதில, இப்போ தன் குணத்தை காட்டுது… அவன் வேண்டாம்… நாம கென்னட்ட வச்சு முடிசுக்கலாம்… இன்னைக்கு சூட்டிங் கேன்சல் பண்ணிடலாம்’’ என்றான்.
‘‘சாரி புரோ… என்னாலத்தானே…’’ என்று ரேஷ்மா வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள்.
‘‘நோ… நோ… ரேஷ்மா… ஆர்ட்டிஸ்ட் கவுரவம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறவன் நான்… பரவாயில்லை… நான் பார்த்துக்கிறேன். நீ கௌம்பு…’’ என்றான்.
சேரில் இருந்த ஆடையை போட்டுக் கொண்டு விறுவிறுவென்று வெளியே வந்து தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ரேஷ்மா.
லண்டன் நகரின் துடைத்து சுத்தம் செய்யப்பட்டதுபோன்ற சாலையில் சத்தமின்றி விரைந்து கொண்டிருந்தது கார்.
ஆனால், ரேஷ்மாவின் நினைவில் மட்டும் திரும்பத் திரும்ப பீட்டரின் செய்கை நினைவுக்கு வந்து சப்தத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.
எரிச்சலாகி மூடை மாற்றுவதற்காக, நவீனை செல்போனில் அழைத்தாள். ஒரு ராப் பாடலின் 10 விநாடி ஒலிப்புக்கு பின்னர் எடுக்கப்பட்டது.
‘‘ஹாய் செல்லம்… என்ன இந்த ஈவினிங்ல… சூட் இருக்குன்னு சொன்னே… ப்ரீ டைமா?’’ என்று கேள்விகளை அடுக்கினான் நவீன்.
‘‘பேபி பிளாட்டுக்கு வர்றியா?’’ என்று கேட்டாள் ரேஷ்மா.
‘‘நோ டார்லிங்… நீ என்னை ரேப் பண்ணிடுவ… அதெல்லாம்  கல்யாணத்துக்கு அப்புறம்தான்…’’ என்றான்.
‘‘பெரிய மன்மத குஞ்சுன்னு நினைப்பு… வாடாாா…’’ என்றாள்.
‘‘நீ சொன்னாலும் சொல்லலேன்னாலும், நான் மூன்றாவது வார்த்தைான்…’’ என்று சிரித்தான்.
‘‘வழியுது… துடைச்சுக்கோ… இன்னும் ஆப் அன்னவர்ல பிளாட்டுக்கு வர்றே…’’ என்று சிரித்துக் கொண்டே போன் இணைப்பை துண்டித்தாள் ரேஷ்மா.
நவீனுடன் பேசும்போது, அவள் இந்த உலகத்திலேயே இருப்பதில்லை. அந்த அளவுக்கு அவனிடம் பேசும் ஒவ்வொரு நொடியும், இன்பத்தேன் வந்து பாயுது என்று பாரதி பாடியதுபோன்ற மனநிலையில் மனம் மிதப்பதை பலமுறை அவன் சென்ற பிறகு உணர்ந்திருக்கிறாள்.
இன்று இரவு பிளாட்டிலேயே அவனை இருக்கச் சொல்ல வேண்டும் நினைத்தாள். நினைத்தபோதே நெஞ்சில் ஆயிரம்  பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.
அப்பா சம்பாதித்ததே பல கோடிகள் இருக்கும். அதுபோதாது என்று, அவரை விட்டு பிரிந்த பின்னர் அம்மா சம்பாதித்த கோடிக்களும் சொத்து மதிப்பின் முதல் இலக்கத்தை கூட்டிக் கொண்டிருந்ததே தவிர குறைவதாக தெரியவில்லை. ஆனால், அம்மாவின் நிழலில் இருக்க பிடிக்காமல் இங்கு வந்து மாடலாக இருப்பது ரேஷ்மாவிற்கு பிடித்திருந்தது. அதேபோல்தான், நவீனும், அவனுடைய தந்தை இந்தியாவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். ஆனால், தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்று, படித்த லண்டனிலேயே சாப்ட்வேர் கம்பெனியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்.
ஹீரோ, ஹீரோயின் பற்றிய விவரம் தெரியாமலேயே உள்ளே வந்துவிட்டோமே என்று பலர் நினைப்பது தெரிகிறது. இது படம் ஆரம்பிச்ச பின்னாடி தியேட்டர்ல நுழைஞ்ச மாதிரியான ஒரு சீன் பாஸ். இப்போ தெரிஞ்சுக்கிட்டாச்சுல்ல… ஷோ … மறுபடியும் ரேஷ்மா பிளாட்டுக்கே போய்டலாம் (கசமுசா இருக்குமான்னு கேட்கக்கூடாது).
சொன்னபடியே அடுத்த அரைமணி நேரத்தில் பிளாட்டுக்கு வந்துவிட்டான் நவீன்.
கதவு திறந்த ரேஷ்மா, நைட் டிரஸ்சில் இருந்ததை பார்த்து, ‘‘அப்ப்ப்ப்பாாாா….’’ என்றான்.
‘‘என்னடா…?’’ என்றாள்.
‘‘எங்கப்பா காலத்தில ஹேமமாலினின்னு ஒரு ஆக்ட்ரஸ் இருந்தாங்களாம். அவங்க ஐயிட்டம் ஷாங்குக்கு டான்ஸ் ஆடுவாங்கன்னு… ஒரு நாள் அவங்க பாட்டு டிவியில ஓடுனப்போ… டாட் காமிச்சார்… அவங்கள மாதிரி நீ செம கட்டையா இருக்கே…’’ என்றான் நவீன்.
‘‘அப்போ நான் ரேஷ்மா மாதிரி இல்ல… அப்படித்தானே?’’ என்றாள்.
‘‘நோ பேபி… நீ அவ்வளவு செக்சியா இருக்கேன்னு சொன்னேன்…’’
‘‘அப்போ எனக்கொரு கிஸ் குடு…’’ என்றாள்.
‘‘சீ… வெட்கம், வெட்கமா வருகிறது…’’ என்று சினிமா பாணியில் பேசியபடி கோணிக்காட்டினான்.
‘‘யூ… இடியட்…’’ என்று அவனது கைகளை எடுத்து தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
அவளை அப்படியே முத்தமிட போனான்.
வயிற்றில் ஏதோ குத்தவே, ‘‘ஆ…’’ என்றான்.
‘‘என்னடா…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘உன் வயித்தில இருந்து ஏதோ குத்துது’’ என்றான் நவீன். அப்படியே அவளது வயிற்றில் தொட்டுப்பார்த்தான்.
நாபியில் தோடு போன்று ஒன்று தென்பட்டது.
நைட் டிரஸ்சின் இடைவெளி வழியே,  அதைப்பார்த்தான். நாபியின் கீழ் அணியும் ரிங். அதில் எழுத்துக்கள் இருந்ததை பார்த்து, மண்டியிட்டு அதை பார்த்தான்.
‘‘மை லவ் நவீன்’’ என்று அந்த ரிங்கில் இருந்தன.
அப்படியே நாபியில் உதட்டை பதித்தான். வேறு உலகத்தில் பறந்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.
(தொடரும் 4)

5
எம்என்பி குரூப் ஆப் கம்பெனிஸ் தலைமை அலுவலகம் பிசியாக இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலர்கள் எல்லாம் ஐந்து இலக்கத்தில் நல்ல நிலையில் சம்பளம் வாங்குபவர்கள் என்பது, அவர்களின் உடை ஸ்டைலில் இருந்தே தெரிந்தது.
பரபரப்பான அந்த நேரத்தில்தான் உள்ளே நுழைந்தாள் மிருதுளானி.
கூடவே அவளது பேக்கை தூக்கிக் கொண்டு பிஏ.வும் வந்துக் கொண்டிருந்தாள்.
‘‘குட்மார்னிங் மேம்…’’ என்ற குரல் பல திசைககளில் இருந்து வந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஒரு சிறிய புன்னகையை வைத்துவிட்டு, எம்.டி. என்று போட்டிருந்த தன் அறைக்கு சென்று அமர்ந்தாள்.
உடலை நடுங்கும் குளிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது ஏசி.
அங்கிருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
மேனேஜரை உள்ளே அனுப்பு என்று பி.ஏ.க்கு உத்தரவிட்டாள்.
வேனிட்டி பேக்கை மிருதுளானியின் அருகில் இருந்த சிறிய டேபிளில் வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பி.ஏ.
அடுத்த சில விநாடிகளில், ‘‘மே ஐ கம்மிங் மேம்…’’ என்ற குரல் கேட்டது.
‘‘யெஸ்…’’ என்றாள் மிருதுளானி.
பாதி வழுக்கை விழுந்த மேனேஜர், பவ்யமாக குறிப்பேடுடன் வந்து நின்றார்.
‘‘மிஸ்டர் சுப்ரமணியம், நம்ம குரூப்ல எஸ்ஏபி எகியூப்மென்ட்ஸ்க்கு பயர் டிபார்ட்மென்ட் கான்ட்ராக்ட் குடுக்கிறதா, அமைச்சர் பரமசிவம் பிராமிஸ் பண்ணியிருக்கார். நீங்க இன்னைக்கே அவரது லோக்கல் ஆபிசுக்கு போய், ஆர்டர் வாங்கி வந்துடுங்க… அவரது செகரட்டரி வாங்கி வச்சிருப்பார். அப்புறம், போறப்போ ஒரு ‘பைவ் சி’ எடுத்துட்டு போங்க… குடுத்த பின்னாடி எனக்கு கால் பண்ணுங்க… சரியா?’’ என்றாள்.
‘‘யெஸ் மேம்… நான் இப்பவே கௌம்புறேன்…’’ என்று மீண்டும் பவ்யமாக மெதுவாக திரும்பி அறையை திறந்து வெளியேறினார்.
அறையில் இருந்த டிவி.யில், அமைச்சர் பரமசிவம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
செல்லை எடுத்து, அபிஜித் என்ற பெயரை தேர்ந்தெடுத்து, கால் பட்டனை அமுக்கினாள்.
இரண்டாவது ரிங்கில் எடுக்கப்பட்டது.
‘‘யெஸ் மிருது…’’
‘‘டியர்… இன்னைக்கு மினிஸ்டர்க்கிட்ட இருந்து ஆர்டர் வந்துடும்… எனக்கான மெட்டீரியலை உங்க கம்பெனியில இருந்துதான் சப்ளை பண்றீங்க ஓகே…?’’ என்றாள் மிருதுளானி.
‘‘நோ பிராப்ளம் மிருது… இது ஏற்கனவே நாம பேசிக்கிட்டதுதானே… அப்புறம்… 600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை  அமைக்கிற திட்ட கான்ட்ராக்ட் பத்தி, மினிஸ்டர்கிட்ட நேத்து ஏதாவது பேசினியா?’’ கேட்டார் அபிஜித்.
‘‘பார்ட்டி நம்மகிட்ட குடுப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு அபிஜித்… ஏன்னா இது மிகப்பெரிய கான்ட்ராக்ட். நாம அல்ரெடி ஒரு ஹைவே பிராஜெக்ட் முடிச்சிருக்கோம். அப்புறம் அவருக்கு பிரச்னையில்லாம கைக்கு பணத்தை கொண்டு வந்து தர்ற ஆட்கள் என்ற நம்பிக்கை நம்ம மேல இருக்கு… ஏற்கனவே அவர்கிட்ட இதுபத்தி பேசியிருக்கேன். ஆனா, நேத்து எதுவும் பேசல… பார்ட்டி நேத்து கொஞ்சம் அர்ஜென்சியில இருந்த மாதிரி தெரிஞ்சது…’’
‘‘அப்போ எப்போ தான் அவர்கிட்ட பேசப்போறே?’’
‘‘ரெண்டு நாள்ல அவர் ப்ரீ ஆயிடுவார். வெட்னஸ் டே போல இசிஆர் பங்களாவுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கார். அன்னைக்கு அதைப்பத்தி பேசலாம்னு கடந்த முறையே சொல்லியிருந்தார். இன்னைக்கு மெசேஜ் போட்டு அவர்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கிறேன்... அப்புறம் அபிஜித், இது கிட்டத்தட்ட தவுசண்ட் டூ ஹண்ட்ரட் குரோர் புராஜெக்ட். நமக்கு அவார்ட் ஆச்சுன்னா… பேங்க் கேரண்டியே 300 சி கேப்பாங்க… என்னால அவ்வளவு ரெடி பண்ண முடியாது. 100 வேணா ரெடி பண்ண முடியும்…’’
‘‘நோ பிராப்ளம் டியர்… அல்ரெடி பிடிபி பாங்க் சேர்மன் கிட்ட பேசிட்டேன். ஆர்டர் காட்டுங்க… உடனே ஷாங்சன் பண்றேன்னு சொல்லிட்டார்… சோ அதனால பிராப்ளம் இல்ல…’’ என்றார் அபிஜித்.
‘‘ஓ… தேங்க்யூ டியர்… நீங்க பேக்போனா இல்லேன்னா, என்னால இவ்வளவு பெரிய பிராஜெக்ட்டை எடுக்க முடியாது. தேங்க்யூ சோ மச்…’’ என்றாள்.
‘‘ஹே… இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு… நாம என்ன பிஸ்னஸ் பார்ட்னரா… விரைவில லைப் பார்ட்னர் ஆகப்போகிற பேர்… அதனாலத்தான் உனக்கு இவ்வளவும் பண்றேன். வெறும் தொழிலதிபர்கள் விஷயம்னா… என்னோட டீலிங் வேற மாதிரி இருக்கும். நீ என் ஹனி. அப்புறம், நான் ஓபன் அண்ட் பிராக்டிக்கல் மைன்டட். நீ என் லைப் பார்ட்னரா வந்தா நான் ரொம்ப பெரிய இடத்துக்கு போயிடுவேன். நம்ம வயசு வித்தியாசத்த பார்க்காம நீ லைப்பார்ட்னரா ஆக ஒத்துக்கிட்டதுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்…’’ என்றார் அபிஜித்.
‘‘நோ… நோ… நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்…டியர்…’’ என்றாள்.
‘‘சரி இப்படியே பேசிட்டு இருந்தா டைம்தான் போகும். வெட்னஸ்டேதானே இசிஆர் போறதா சொன்னே…?’’ என்று கேட்டார்.
‘‘ஆமா… டியர்…’’ என்றாள்.
‘‘சரி நான் வரணுமா?’’
‘‘ஆமா கட்டாயம் நீங்க வரணும் டியர்… அப்போதானே மினிஸ்டர் கிட்ட பைனல் டீல் பேச முடியும்’’ என்றாள்.
‘‘பட்… உனக்கு அசவுகரியமா இருக்காதா?’’
‘‘இல்ல டியர்… ஏற்கனவே உங்களைத்தான் அவர்கிட்ட அறிமுகம் செய்துட்டேனே… அதனால நீங்க வர்றப்போ… அந்த பார்ட்டி டீசண்ட்டாதான் இருக்கும்… அதுவுமில்லாம அங்க அவங்க கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கப்போகுது… அதனால நிறைய பேர் இருப்பாங்க… சோ எனக்கு தொந்தரவு இருக்காது. நீங்க வாங்க… அன்னைக்கு நாம பேசி முடிச்சிடலாம்’’ என்றாள்.
‘‘அப்போ வெட்னஸ் டே நான் வந்து உன்னை பிக்அப்  பண்ணிக்கிறேன்’’  என்றார் அபிஜித்.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.
(தொடரும் 5)

6
புறநகர் லண்டன்.
நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த அந்த படப்பிடிப்பு தளத்தில், சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது.
பீட்டர் பிரச்னைக்கு பின்னர் அன்று மீண்டும் சூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை ரேஷ்மாவுக்கு ஜோடியாக கென்னட் வந்திருந்தான். கென்னட்டும் வளரும் மாடல். இதனால் மிக நேர்த்தியாக நடித்துக் கொடுத்தான்.
சூட்டிங்கில் பிசியாக இருந்த ரேஷ்மா, வழக்கமாக காலையில் நவீனுக்கு அனுப்பும், ‘லவ் யூ டார்லிங்’ மெசேஜை அனுப்ப மறந்திருந்தாள். மேலும், அன்று சூட்டிங் இருந்ததையும் சொல்ல மறந்திருந்தாள்.
அலுவலகத்தில் இருந்த நவீன், பலமுறை அவளுக்கு தொடர்ந்து பலமுறை வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தான். இரண்டு முறை காலும் செய்திருந்தான். ஆனால், அவள் சூட்டிங்கில் இருந்ததால், போனை பேக்கில் வைத்து இருக்கையில் விட்டு சென்றிருந்தாள்.
ஒரு வழியாக பர்ஸ்ட் ஆப் சூட்டிங் முடிந்த பின்னர், தன் இருக்கைக்கு திரும்பினாள். உதவியாளர் கொடுத்த ஆப்பியை குடித்துக் கொண்டு செல்போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.
அப்போதுதான், நவீன் அவளுக்கு பலமுறை மெசேஜ் அனுப்பியிருந்ததும், இரண்டு முறை கால் செய்திருந்ததும் தெரியவந்தது.
‘‘சே…’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
‘‘பேபிக்கு போன் பண்ண மறந்துட்டேனே…’’ என்று நினைத்தவாறு, அவனுக்கு போன் செய்தாள்.
ஆனால், நவீனின் ராஜ்கபூர் செல்போன் டியூன் எதிரே ஒலித்தது.
நிமிர்ந்து பார்த்தாள்.
எதிரே நவீன், இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டிருந்தான்.
உடனே துள்ளி எழுந்து, அவனுக்கு வழக்கமான ஹக் கொடுத்துவிட்டு, ‘சாரி பேபி… சாரி பேபி… கோவிச்சுக்காதே… ரியலி சாரி… ஒரு அடி வேணா அடிச்சுக்கோ…’’ என்று கன்னத்தை காட்டினாள்.
அவளுடைய கன்னத்தில் நறுக்கென்று கிள்ளினான் நவீன்.
‘‘யேய்ய்ய்…. வலிக்குதுப்பா…’’ என்று கத்தினாள் ரேஷ்மா.
‘‘உனக்கு எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன். தினமும் மூணு வேளை போன் பண்ணணும்னு… இன்னொரு வாட்டி இப்படி பண்ணே… அப்புறம், ரெண்டு நாளைக்கு முன்னாடி தாபாவில பார்த்தோமே அந்த வெள்ளைக்காரியை கட்டிக்கிட்டு போயிடுவேன்…’’ என்றான் நவீன்.
‘‘ஐயா… சாமீ… மன்னிச்சுக்கோங்க… இனிமே இப்படி நடக்காது… சார் என்ன சாப்பிடுறீங்க?’’ என்று கேட்டாள் ரேஷ்மா.
‘‘விட்டா நான் உன்னையே சாப்பிட்டுவிடுவேன்… அவ்வளவு கோபத்தில இருக்கேன்…’’ என்றான் நவீன்.
‘‘பேபி என்ன இது… புதுசா… கோபம் எல்லாம் பட்டுக்கிட்டு… அதெல்லாம் என் டிபார்ட்மென்ட்… என் டார்லிங் எப்பவுமே சிரிச்சுட்டே அமுல் பேபி மாதிரியே இருக்கணும்… அதுதான் கியூட்டா இருக்கும்…’’ என்றாள்.
‘‘சூட்டிங்கல பீட்டர் உன்கிட்ட மோசமா நடந்துக்கிட்டானாமே… நீ ஏன் என்கிட்ட சொல்லல…? மூணாவது மனுஷன் சொல்லி கேட்க வேண்டியிருக்கு… சொல்லியிருந்தா… அவனை அன்னைக்கே காலி பண்ணியிருப்பேனே…’’ என்றான்.
‘‘பேபி… அவன்தான் சில்லியா நடந்துக்கிட்டான்னா… நாமளும் அப்படியே நடந்துக்கிறதா… விடுப்பா… அந்த இடியட் எப்பவும் அப்படியெல்லாாம் நடந்துக்க மாட்டேன்… அன்னைக்கு ஏதோ முட்டாள்தனமா பண்ணிட்டான்…. விடு…’’ என்றாள்.
‘‘இல்ல ரேஷ்மா… நீ அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்கணும்… நீ என்னை வேத்து மனுஷனா பார்த்ததாலத்தானே அதை சொல்லல…’’ என்றான் வேகமாக.
சட்டென்று அவன் வாயில் கைகளை வைத்தாள். ‘‘பேபி அப்படி எல்லாம் பேசாதே… அன்னைக்கு நான் பட்ட மனக்கஷ்டத்தை தீர்த்துக்கிறதுக்குத்தான் உன்னை போன் பண்ணி வர வச்சேன். நாம நம்புகிறவங்கிட்டதானேடா ஆறுதல் தேடிக்கிற முடியும்…. எனக்கு உன்னை விட்டா வேறு யாருடா இருக்கா…’’ என்று கண்ணீருடன் கேட்டாள்.
‘‘சரி… சரி… உடனே கண்ணுல கிளிசரின் போட்டுக்காதே… அந்த இடியட் அப்படி பண்ணிட்டான்னு மாறனோட இருக்கிற, இன்னொரு பிரண்ட் எனக்கு சொல்லலேன்னா எனக்கு தெரிஞ்சே இருக்காது…’’ என்றான்.
‘‘பேபி… மறுபடியும், மறுபடியும் அதை ஏன் கிளப்புற… நானே அதை மறக்கணும்னு நினைக்கிறேன்… ரோட்டில போற நாய் கொறைச்சதை எல்லாம் நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கலாமா… விடுப்பா…’’ என்றாள்.
‘‘என்ன இருந்தாலும் எனக்கு மனசே கேட்கல…’’ என்று நவீன் முடிப்பதற்குள், அவன் உதட்டில் சூடாக, அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள் ரேஷ்மா.
‘‘ஆ… ஊன்னா… இப்படி என்னை சமாதானப்படுத்திடுவியே…’’ என்று வாயை துடைத்தபடி கூறினான் நவீன்.
‘‘சரி வா… இங்க உட்காரு…’’ என்று தன் இருக்கைக்கு அருகே இருந்த சீட்டில் அவனை அமர வைத்து, ரேஷ்மாவும் தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
‘‘என்ன பேபி… இன்னைக்கு ஆபிஸ் இல்லையா… சூட்டிங் பார்க்க வந்துட்டே…’’ என்றபடி, அசிஸ்டண்டிடம் இன்னொரு ஆப்பியை எடுத்து வருமாறு சைகை செய்தாள்.
‘‘ம்… ம்… உன் மெசேஜ் வராதது, போன் எடுக்காததுன்னு அடுத்தடுடுத்த அதிர்ச்சியில ஆபிசுல உட்கார்ந்து எப்படி வேலை பார்க்கிறதாம்… அதுதான் மாறனுக்கு போன் பண்ணேன். அவன்தான் சூட்டிங் இருக்குன்னு சொன்னான். அதான் கிளம்பி வந்துட்டேன்…’’ என்றான்.
‘‘சரி… வந்ததுதான் வந்துட்டே… இன்னைக்கு லீவு போடேன்… நாம ஸ்காட்லாந்து ஏ4 தியேட்டர் போகலாம்… ஒரு சின்ன டிரைவ் போன மாதிரியும் இருக்கும். மனசும் ரிலாக்ஸ் ஆகும். என்ன பேபி சொல்றே?’’ என்றாள்.
‘‘லீவு என்ன போடுறது… சுட்டுவிரலை என் மூஞ்சிக்கு நேரா நானே காட்டி லீவுன்னு சொல்லிக்க வேண்டியதுதான். என் கம்பெனிதானே… என்னை யாரு கேட்கப்போறா….?’’ என்றான்.
‘‘குட்… அப்போ நீ சொல்லிட்டு இருக்கு… ஒரு ஆப் அன் அவர்ல நாம கிளம்பிடலாம்’’ என்றாள்.
அவன் மீண்டும் சின்னதாக முறைக்க, அவனது கன்னத்தில் ஈரம் பதித்துவிட்டு திரும்பி பார்க்காமல், சூட்டிங் நடந்த இடத்துக்கு விரைந்தாள் ரேஷ்மா.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.
(தொடரும் 6)
7
சென்னை அடையாறில் இருந்த அந்த பங்களாவில், தோட்டக்காரன் செடிகளை வெட்டி சரி செய்துக் கொண்டிருந்தான். செக்யூரிட்டி சேரில் அமர்ந்து தினகரன் பத்திரிகையின் வெளியாகி இருந்த, ‘சுகப்பிரசவம் ஆகாத கோழிக்கு அறுவை சிகிச்சையில் 2 முட்டை’ என்ற சுவாரசியமான செய்தியை ரசித்து படித்துக் கொண்டிருந்தார்.
டிரைவர் காரை துடைத்து பளபளப்பாக்கிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில்தான் வீட்டில் இருந்து வெளிப்பட்டாள் மிருதுளானி. அவள் வருவதை பார்த்து, காரின் கதவை திறந்துவிட்டான் டிரைவர். ஒய்யாரமாக அதில் உட்கார்ந்து கொள்ள செக்யூரிட்டிக்கு, ‘கேட்டை திற’ என்பதன் அர்த்தமாக ஒரு மெல்லிய ஹாரன் அடித்துவிட்டு காரை கிளப்பினான் டிரைவர்.
‘‘வெற்றி…. ‘ஹேர் ஒன்’ பார்லர் போ…’’ என்றாள் மிருதுளானி.
‘‘சரிங்கம்மா…’’ என்று கூறிவிட்டு, காரை திருவான்மியூர் பக்கம் ஓட்ட ஆரம்பித்தான் டிரைவர் வெற்றி.
அந்த இடைப்பட்ட நேரத்தில் காரில் கிடந்த, சில ஆங்கில இதழ்களை புரட்டினாள் மிருதுளானி.
ஒரு அரைமணி நேர பயணத்துக்கு பின்னர் பியூட்டி பார்லர் வந்தது.
அடிக்கடி வந்து செல்பவள் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட, அவளது தாராள டிப்ஸ்காக, ஊழியர்கள் பெரிய அளவில் அவளுக்கு மரியாதை கொடுத்தனர்.
வழக்கம்போல் அவர்களுக்கு ஒரு புன்னகை சிந்திவிட்டு, சோபாவில் அமர்ந்தாள்.
ஏற்கனவே அங்கு சில சீமாட்டிகள் அமர்ந்திருந்தனர்.
எல்லோருமே, இங்கே ஏதாவது வந்துச்சா… என்பதுபோன்ற பாவனையில் ஆங்கில இதழ்களில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் அதில் அவ்வளவு பிசியாக இருப்பதைப்போல் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
‘‘மேடம் ஒரு பைவ் மினிட்ஸ்… லாஸ்ட் கஸ்டமருக்கு கிளினீங் முடிஞ்சிடுச்சுன்னா நீங்க உள்ள போகலாம். அல்ரெடி உங்க சீட் ரிசர்வ்டு…’’ என்று மிருதுளானியிடம் சிரித்தபடி கூறினாள் ரிசப்ஷனிஸ்ட்.
‘‘இட்ஸ் ஓகே…’’ என்று கூறிவிட்டு, அவளும் ஒரு ஆங்கில இதழை எடுத்துக் கொண்டாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவள் உள்ளே இருந்தாள்.
என்ன செய்ய வேண்டும் என்பது கேட்பதுபோல், ‘‘மேடம்…’’ என்று அவளிடம் கேட்டாள் பார்லர் பெண்.
‘‘பிளீச்சிங், பெடிகியூர் அண்ட் மேக்கப்’’ என்றாள்.
 அவள் வேலையை ஆரம்பித்தாள்.
பார்லர் பெண் அவளது உடையில் எதுவும் படக்கூடாது என்பதற்காக முன்புறத்தில் ஏப்ரான் போன்ற முழு உடலையும் மறைக்கும் துணியை கொண்டு வந்து கட்டிவிட்டாள்.
‘‘மேடம்… எப்ப கலரிங் பண்ணீங்க… ரெண்டு வெள்ளை முடி தெரியுது?’’ என்றாள்.
‘‘புல்சீட்… கஸ்டமர்கிட்ட இப்படியா… பேசுவே… நீ கௌம்பு மேனேஜரை கூப்பிடு… வள்ளி இருப்பாளே அவ எங்கே…’’ என்று சத்தம்போட ஆரம்பித்தாள்.
அதற்குள் மேனேஜராக பட்டம் சூட்டப்பட்ட பெண் அங்கு வந்தாள்.
‘‘மேடம்… மேடம்… என்ன பிரச்னை?’’ என்றாள்.
‘‘வள்ளி எங்கே… எதுக்கு இவளை எல்லாம் வேலைக்கு வச்சிருக்கீங்க… கஸ்டமர்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியலையே…’’ என்று எகிறினாள் மிருதுளானி.
‘‘நீங்க உட்காருங்க மேடம்… கூல்… நான் வள்ளிய வரச் சொல்றேன்…’’ என்று பார்லர் பெண்ணுக்கு சத்தம்போட்டுவிட்டு, வள்ளியை அனுப்பினாள் மேனேஜரி.
 அவளுக்கு மேக்கப் முடியும்போது, போன் ஒலித்தது.
எடுத்து பார்த்தாள். அபிஜித் என்று திரையில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. பச்சை உருண்டையை மேலே தள்ளிவிட்டு போனை காதில் வைத்துக் கொண்டாள்.
‘‘இதோ ரெடி ஆயிட்டேன் டியர்… நீங்க திருவான்மியூர் ‘ஹேர் ஒன்’ பார்லர் வந்துடுறீங்களா? ஒரே கார்ல போய்டலாம்’’ என்றாள்.
‘‘-----’’
போனை அணைத்துவிட்டு, தனது உடையை சரி செய்துக் கொண்டு, வள்ளிக்கு  டிப்ஸ் கொடுத்தாள்.
‘‘வள்ளி தலையில ரொம்ப வெள்ள முடி தெரியுதா என்ன?’’ என்றாள்.
‘‘அவ கெடக்கா… மேடம்… கலரிங் பண்ணி கொஞ்சம் நாளாயிருக்கும். நீங்க கொஞ்சம் வேலையில பிசியா இருந்துருப்பீங்க… அதனால ரெண்டு, மூணு முடி ஒயிட் ஆயிடிச்சு… டோண்ட் ஒர்ரி மேடம்… மேக்கப் போடுறப்போ அதையும் சரி பண்ணிட்டேன்…’’ என்றாள்.
‘‘குட் அதுக்குத்தான் வள்ளி வேணும்கிறது… இந்தா நீ வச்சுக்கோ…’’ என்று அவளிடம் ஒரு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினாள்.
ரிசப்ஷனில் அவள் காத்திருக்க, 10 நிமிடத்தில் அபிஜித் கார் வந்தது.
வெற்றியிடம் காரை வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லிவிட்டு, அபிஜித் காரில் ஏறி கிளம்பினாள் மிருதுளானி.
அமைச்சரின் இசிஆர் பங்களாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
‘‘மிருது… அந்தாள்கிட்ட கவனமா பேசு… அப்புறம், நம்ம ஜாய்ன்ட் கம்பெனிக்கு பாரீன் இன்வெஸ்ட் வாங்குறதுக்கும் அவர்கிட்டதான் பெர்மிஷன் வாங்கணும்… அது வந்துடுச்சுன்னா… பண்ட்டுக்கு பிரச்னை இருக்காது’’ என்றார் அபிஜித்.
‘‘அவர் நல்ல மூடுல இருக்கிறப்போ… ஏற்கனவே இதப்பத்தி பேசி இருக்கேன் அபிஜித். அந்தாள் தனக்கு சேர வேண்டியதை, தன்னோட மச்சினனோட கம்பெனி ஷேர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணச் சொல்லியிருக்கார். ஓகே சொல்லிட்டார்னா அடுத்தக்கட்ட வேலையை ஆரம்பிச்சுடலாம்…’’ என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கியுடன் போலீஸ்காரர்கள் நின்றிருந்த அமைச்சரின் பங்களா வந்தடைந்தது கார்.
விலை உயர்ந்த காரை பார்த்து ஓடிவந்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.
காரின் உள்ளே இருந்த அபிஜித்தை பார்த்து, ‘‘சார்…’’ என்றார்.
‘‘ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கோம்… மிருதுளானி அண்ட் அபிஜித்னு சொல்லுங்க…’’ என்றார்.
இன்ஸ்பெக்டர் யாரிடமுமோ வயர்லஸ்சில் பேசினார். அதைத்தொடர்ந்து கார் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு போலீஸ்காரரிடம் சைகையில் கூறினார்.
பங்களா முன்பு ஏற்கனவே பல கட்சிக்காரர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அமைச்சரின் பி.ஏ. வந்து, மிருதுளானியையும், அபிஜித்தையும் ஒரு அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தார்.
15 நிமிட காத்திருப்புக்கு பின்னர் அமைச்சர் பரமசிவம், கண்ணாடியை சரி செய்தபடி உள்ளே நுழைந்தார். பி.ஏ.வும் அவருடன் வந்தார். அவர் சோபாவில் வந்து அமர்ந்தவுடன் பி.ஏ.வை பார்த்தார்.
‘‘சரிங்கய்யா…’’ என்று அவர் வெளியேற, ஆட்டோமேட்டிக் கதவு தானாக சாத்திக்கொண்டது.
‘‘ம்ம்ம்… சொல்லுங்க மிருதுளானி அண்ட் அபிஜித்…’’ என்றார் அமைச்சர்.
‘‘சார்… நாம ஏற்கனவே பேசியபடி அந்த ரோடு கான்ட்ராக்ட்…’’ என்றாள் மிருதுனாளி.
‘‘இது கொஞ்சம் பெரிய புராஜெக்ட் மிருதுனாளி… எல்டி கம்பெனி வேற கொஞ்சம் கம்மியா கோட் பண்ணியிருக்காங்க… ’’ என்று யோசிக்க ஆரம்பித்தார் அமைச்சர்.
‘‘சார்… உங்களத்தான் நம்பியிருக்கோம்… நீங்க உத்தரவிட்டீங்கன்னா… நடக்காதது எதுவுமே இல்லையே… ஐஸ்கிரீம் மாதிரி உடனே நடந்திடுமே…’’ என்றாள் மிருதுளானி.
ஐஸ்கிரீம் என்றவுடன் சற்று நெளிந்தார் அமைச்சர், ‘‘சரி… நான்  பார்த்துக்கிறேன்… நான் சொன்ன மாதிரி… செட்டில் பண்ணிடுங்க…’’ என்றார்.
‘‘சார்… அப்புறம் அந்த பாரீன் இன்வெஸ்ட்மென்ட்டுக்கும் அனுமதி குடுத்திட்டீங்கன்னா… புராஜெக்ட்டை நல்ல படியா முடிச்சிடுவோம்…’’ என்றார்.
‘‘அதுலயும் கொஞ்சம் சிக்கல் இருக்கு… இதுக்கு நான் மட்டும் நேரடியா அனுமதி தர முடியாது… அதுக்கு கமிட்டி அனுமதி தரணும்… ஆனா, அதுக்கும் வேற வழி இருக்கு… பட் என் மச்சினன் கம்பெனியில மொதல்ல இன்வெஸ்ட் பண்ணுங்க… விரைவில தேர்தல் வரப்போவுது. அதுக்கு முன்னாடி செட்டில் பண்ணிடுங்க… ஆக வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்’’ என்றார்.
‘‘டபுள் ஓகே சார்… அதுக்கான வேலைகளை இன்னைக்கே… பார்த்துடுறோம்’’ என்றார் அபிஜித்.
‘‘அபிஜித் நீங்க காருங்க போங்க நான் வர்றேன்’’ என்று காதில் கிசுகிசுத்தாள் மிருதுளானி.
அபிஜித் எழுந்து வெளியேறினார்.
கதவு மூடப்படும்வரை பொறுத்திருந்த மிருதுளானி, அமைச்சரை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் ஒரு முத்தம் இட்டாள்.
‘‘என்ன இன்னைக்கு கொஞ்சம் அலங்காரம் எல்லாம் ஜாஸ்தியா இருக்கிற மாதிரி இருக்கு?’’ என்றார் அமைச்சர்.
‘‘உங்களை மாதிரி விவிஐபி.ய  பார்க்க வர்றப்போ… சாதாரணமா வர முடியுமா சார்?’’ என்றாள்.
‘‘சரி… கட்சிக்காரங்க எல்லாம் காத்துட்டு இருக்காங்க… அப்புறம் பார்க்கலாம்’’ என்றவாறு கிளம்பினார் அமைச்சர்.
அவருக்கு பின்னாலேயே மிருதுளானியும் அறையை விட்டு வெளியேறினாள்.
கார் அமைதியாக சென்றுக் கொண்டிருந்தது.
‘‘மிருது… ஒரு வழியா நம்ம எய்ம்மை அடையப்போறோம்…’’ என்றார் அபிஜித்.
‘‘ஆமா… அபிஜித் நான் சந்தோஷமா இருக்கேன்…’’ என்றாள்.
‘‘அடுத்து…?’’ என்றார் அபிஜித்.
‘‘அடுத்து…?’’ என்று அவரையே கேட்டாள் மிருதுளானி.
‘‘நம்ம கல்யாணம் எப்போ?’’ என்றார்.
‘‘ஓ…டியர்… சீக்கிரமே பண்ணிக்கலாம். கொஞ்சம் எனக்கு டைம் குடுங்க… நான் என் ரிலேட்டீவ்களை கன்வின்ஸ் பண்ணிட்டு, உங்ககிட்ட சொல்றேன்… நாம பண்ணிக்கலாம்…’’ என்றாள்.
‘‘உனக்கு ஒன் மந்த் டைம் தர்றேன் மிருது. அதுக்குள்ள நீ பேச வேண்டியவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு சம்மதம் வாங்கிடு. நெக்ஸ்ட் மந்த் நம்ம கல்யாணம்’’ என்றார் சற்று இறுகிய முகத்துடன் அபிஜித்.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.
(தொடரும் 7)

8

இரவு நவீனுடன் ஸ்காட்லாந்துக்கு சென்றுவிட்டு வந்ததில் லேட்டாகத்தான் படுத்தாள் ரேஷ்மா. இதனால் காலையில் எழுந்திருக்க 8 மணி ஆகிவிட்டது.
இன்னைக்கு சூட்டிங் இருப்பதாக மாறன் சொல்லியிருந்தான்.
அதனால் அவசர, அவசரமாக கெய்சர் போட்டு, குளித்து முடித்து வெளியே கிளம்பும்போது, முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.
வாசலில் இருந்த கூப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். கார் ஹைவேயில் பறந்துக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ இருப்பதாக தோன்றவே, காரை ஸ்லோ செய்துவிட்டு பார்த்தாள். முகத்தை மறைத்திருந்த ஒருவன் கத்தியை காட்டினான்.
‘‘ஓரத்தில நிப்பாட்டு…’’ என்றான்.
பயந்துப்போன ரேஷ்மா, அவன் கூறியபடி, காரை ஓரத்தில் சென்று நிறுத்தினாள்.
டக்கென்று அந்த நபர் கர்ச்சீப்பை எடுத்து அவளது மூக்கில் பொத்தினான். அவனை தடுக்க முயற்சிப்பதற்குள் மயங்கினாள் ரேஷ்மா.
கண்விழித்தபோது, ஏதோ ஒரு வீட்டின் அறையில் கட்டிப்போடப்பட்டிருந்ததை உணர்ந்தாள்.
எதிரே சேர் போட்டு உட்கார்ந்திருந்தான் பீட்டர்.
‘‘ஏண்டி ஒரு மூடு உன்னைத் தொட்டா… அதுக்காக எல்லாம் முன்னாடியும் அடிப்பியா… இன்னைக்கு உன்னை இன்ச்… இன்ச்சா… ரசிக்கப்போறேன்… இப்போ என்ன செய்வே…?’’ என்றான் பீட்டர்.
‘‘பீட்டர் தப்பு பண்ணாதே… நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா… உன்னோட என்பிஆர் அப்ளிகேஷன் ரத்தாகிடும். அப்புறம் நீ மறுபடியும் ஜெர்மனிக்குப் போய் பிச்சைதான் எடுத்தாகணும்… தயவு செஞ்சு உணர்ச்சிவசப்படாத… நீ பண்ணதுக்குத்தான் நான் அடிச்சேன்…’’ என்றாள் அரைகுறை மயக்கத்துடன்.
பளாரென்று கன்னத்தில் அறைந்தான் பீட்டர்.
‘‘நான் எல்லாத்துக்கம் துணிஞ்சுட்டுதான் வந்திருக்கேன்… நீ என் தன்மானத்தையே தட்டிவிட்ட…’’ என்று கூறியபடி எழுந்து வந்த பீட்டர், ரேஷ்மாவின் மினி ஸ்கர்ட்டின் பட்டனை நோக்கி போனான்.
‘‘நோ… நோ… பீட்டர்…’’ என்று கத்தினாள் ரேஷ்மா.
அந்த நேரத்தில்தான் பீட்டரின் செல்போன் ஒலித்தது.
எடுத்து பார்த்தான். புது நம்பர். கட் செய்துவிட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க முயன்றபோது, மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
யாராக இருக்கும் என்று நினைத்தபடி அட்டண்ட் செய்தான்.
‘‘என்ன பிரதர் ரேப்பிங் மூடுல இருக்கீங்க போல இருக்கு?’’ என்று அடுத்த முனையில் இருந்து கேட்டது.
‘‘டேய்… யார்டா நீ…’’ என்றான் பீட்டர்.
‘‘நீ ரேப் பண்ண முடிவு செஞ்சிருக்கீயே…  அந்த பெண்ணோட ஒரே லவ்வர் நான் தான். நவீன்’’
‘‘ஓ…. நீயா… உன் கேர்ள்ல் பிரண்ட்டை இப்போ நான் ரேப் பண்ணப்போறேன். ஆமாம்… ஏன் உனக்கு வீடியோ வேணுமா?’’ என்றான் பீட்டர்.
‘‘அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தகவல் புரோ.  ஜெர்மனியில இருக்கிற உன் பொண்டாட்டிய வீடியோ கால்ல கூப்பிடேன்…’’ என்றான் நவீன்.
‘‘இவன்  ஏதாவது விளையாடி இருப்பானோ… ’’ என்று நினைத்து அவசர,  அவசரமாக  ஜெர்மனியில் இருக்கும் தன் மனைவியை கூப்பிட்டான் பீட்டர்.
சில ரிங் கூட போகவில்லை. முதல் ரிங்கிலேயே எடுக்கப்பட்டது.
அங்கு, அவனுடைய மனைவி சேரில் அமர்ந்திருக்க, ஏதோ ஒரு  தடியன் முகத்தை மூடியபடி அவன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு செல்போனை பிடித்துக் கொண்டிருந்தான். கர்ப்பிணியான அவன் மனைவி காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்த மாத்திரத்திலேயே கடுப்பானான். அடுத்த நொடி அதை கட் செய்துவிட்டு, மீண்டும் நவீனை கூப்பிட்டான்.
‘‘டேய்… என் பொண்டாட்டிய விட்டுடு…’’ என்று கத்தினான்.
‘‘கூல்  புரோ… நீ என்  காதலிய கடத்தினே… நான் உன் பொண்டாட்டி கழுத்திய கத்திய வச்சேன்… அவ்வளவுதான்… நீ பேசாம இருந்தா… நானும் பேசாம இருப்பேன்… நீ வாலாட்ட நினைச்சே… நான் கத்தியை சுழட்டிடுவேன். எப்படி டீல்…?’’ என்றான் நவீன்.
‘‘இப்போ என்ன செய்யணும்ங்கிற?’’ என்று கத்தினான் பீட்டர்.
‘‘சிம்பிள் என் காதலிய கட்டிப்போட்டிருக்கிற கயித்த அவுத்து வெளியே விடு… அடுத்த அரைமணி நேரத்தில அங்க  உன் பொண்டாட்டி ப்ரீ ஆயிடுவா…’’ என்றான் நவீன்.
‘‘உன்  காதலனால என்கிட்ட இருந்து  தப்பிச்சுட்டே… ஆனா… நான் சும்மா இருக்க மாட்டேன்…’’ என்று கூறியபடி, ரேஷ்மாவின் கட்டை அவிழ்த்துவிட்டான் பீட்டர்.
ரேஷ்மா அந்த வீட்டில் இருந்து வெளியே வரவும், போலீஸ் அந்த வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது.
ரேஷ்மாவிடம், ‘‘பீட்டர் உள்ளதான் இருக்கானா…’’ என்றார் இன்ஸ்பெக்டர்.
‘‘எஸ் இன்ஸ்பெக்டர்…’’ என்றாள் ரேஷ்மா.
உள்ளே சென்ற இன்ஸ்பெக்டர் கொத்தாக அவனை பிடித்துக் கொண்டு தன் காரில் ஏற்றினார்.
‘‘ரேஷ்மா… அல்ரெடி நவீன் எங்களுக்கு போன் பண்ணார்… அதனால சரியான நேரத்தில வர  முடிஞ்சது… ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் மெயில்  அனுப்புங்க… நாளைக்கே இவனை ஜெர்மனிக்கு பார்சல் பண்ணிடுவோம்’’ என்றார் இன்ஸ்பெக்டர்.
சொல்லிவிட்டு அவர் விரைந்துவிட, நவீன் அங்கு தன் காரில் வந்தான்.
அவனது காரை பார்த்தவுடன் ஓடிச்சென்று காரில் ஏறி, அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
‘‘நல்ல வேளையா வந்து காப்பாத்தினே… பேபி… அது சரி… என்னை பீட்டர் கடத்தினது உனக்கு எப்படி தெரியும்?’’ என்று கேட்டாள் ரேஷ்மா.
‘‘எஸ் டார்லிங்… பீட்டர் உன்கிட்ட வாலாட்டினான் சொன்ன உடனேயே, உன்கிட்ட சொல்லாமலேயே உன் செக்யூரிட்டிக்கு பிரைவேட் டிடெக்டீவ்ஸ் நியமிச்சுட்டேன்… உன் கார் திசைமாறி போனதும், உடனே எனக்கு தகவல் சொன்னான். அந்த வீட்டை ஜிபிஎஸ்.ல  செக் பண்ணதில அது பீட்டர் வாடகைக்கு எடுத்த வீடுன்னு தெரிஞ்சது… ஏற்கனவே ஜெர்மனியில பீட்டர் வீட்டுக்கு எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு ஆளை போட்டு வச்சிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தில அது சரியா உதவிச்சு…’’ என்றான் நவீன்.
‘‘ஓ…  பேபி… எனக்காக இவ்வளவு வேலை பார்த்திருக்கே…?’’ என்று அவனது நெற்றி, தாடை, கன்னம் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் முத்தமிட்டாள்.
‘‘டார்லிங் இங்க விட்டுட்டே…’’ என்று வாயை குவித்துக் காட்டினான் நவீன்.
கமல் பாணியில் அவன் பின்னந்தலையை கையை வைத்து இழுத்து, பிரெஞ்சு கிஸ் கொடுத்தாள்.
‘‘யாரோ… நெருக்கமானவங்கக்கிட்டத்தானே எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னு சொன்னாங்க… அப்படி பகிர்ந்து இருந்தா இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?’’ என்றான் நவீன்.
‘‘மறுபடியும் ஆரம்பிச்சுட்டீயா… ’’ என்று மீண்டும் அவன் இதழை கவ்வினாள் ரேஷ்மா.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.
(தொடரும் 8)

9
வீட்டு ஜிம்மில் மிருதுளானி எக்ஸ்சர்சைஸ் செய்துக் கொண்டிருந்தாள்.
வியர்வை ஆறாக ஓடி, பனியன் எல்லாம் நனைந்திருந்தது. போதும் என்று நினைத்தவள்போல், துண்டை எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள்.
அவளுடைய அனாடமியை பார்த்து அவளே மனதில் பாராட்டிக் கொண்டாள். இதில் மயங்கித்தானே ஜீவன் திருமணம் செய்துக் கொண்டான். இதில் விழுந்து தானே, விஜய் என்னை திருமணம் செய்துக் கொண்டான். ஆனால், குழந்தை பிறந்தவுடன் ஜீவன் விலகிப்போனான். அதையடுத்து, விஜய்யாவது தன்னை நல்லபடியாக காப்பாற்றுவான் என்று நினைத்தாள். ஆனால், அவனும் இடையில் பிய்த்துக் கொண்டான்.
குழந்தை ரேஷ்மா இப்போது வளர்ந்து பெரியவளாகிவிட்டாலும், தன்னுடைய நடவடிக்கைகள் எதுவும் அவளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக லண்டனிலேயே படிக்க வைத்தாள். ஆனால், எதிர்பார்க்காத வகையில், அங்கேயே அவள் பேஷன் மாடலாகி, இங்கு வராமல் தன் கஷ்டத்தையும் குறைத்திருந்தாள்.
இப்போது, தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதே தெரியாமல், மயங்கிக் கிடக்கிறார் அபிஜித். அவருக்கு 60 வயதுக்கு மேல். மனைவியை இழந்தவர். அவருடைய மகனும் லண்டனில்தான் இருக்கிறான். தன் உடல்வாகு, அழகைப்பார்த்து இளம்பெண் என்று நினைத்துவிட்டார் என்பது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிந்தது.
அதற்கு தகுந்தாற்போல், எப்போதும் தன்னுடைய அழகில் மிக கவனம் செலுத்துபவள் மிருதுளானி. அதனால்தான், அன்று பியூட்டி பார்லரில் அந்த பெண், வெள்ளை முடி பற்றி பேசியதும், மிகவும் கோபப்பட்டாள் மிருதுளானி.
இப்போது திருமணத்துக்கு அவசரப்படுத்துகிறார் அபிஜித். அவரிடம் உண்மையை சொன்னால், திருமணத்தை நிறுத்திவிட வாய்ப்புள்ளது. அதனால், மிகப்பெரிய கான்ட்ராக்ட் வாய்ப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இழக்க வேண்டியிருக்கும். அதனால் அவரிடம் உண்மையை சொல்லக்கூடாது என்று மனதிலேயே நினைத்துக் கொண்டாள்.
அதேசமயம், ரேஷ்மாவிடம் சொன்னால் காரித்துப்பிவிடுவாள். இரண்டாவது திருமணத்தின்போது அவள் குழந்தை. விவரம் தெரியாத வயது. ஆனால், இப்போது அவள் மேஜர். அவளிடம் விவரத்தை சொன்னால், உடல் சுகத்துக்காக திருமணம் செய்துக் கொள்வதாக தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடும். அதனால் அவளிடமும் உண்மையை சொல்ல வாய்ப்பில்லை.
அவள் இந்தியாவுக்கு வரும்போது, மெதுவாக உண்மையை சொல்லிக் கொள்ளலாம். இப்போதைக்கு அபிஜித்திடம் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளலாம். அதுதான் இப்போதைய வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என்று மனதிலேயே நினைத்துக் கொண்டாள்.
வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த ஜூஸை குடித்தபடி அன்றைய நாளிதழ்களை படிக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில்தான் போன் சிணுங்கியது.
எடுத்து பார்த்தாள்.
அபிஜித் என்று காட்டியது.
அட்டெண்ட் செய்து, முடியை ஒதுக்கி செல்போன காதில் வைத்தாள்.
‘‘மிருது நம்ம கல்யாணத்தை எங்கே, எப்போ வச்சுக்கலாம்?  முடிவு பண்ணிட்டியா?’’ கேட்டார் அபிஜித்.
‘‘டியர்… நான் ரெடி… சிம்பிளா பண்ணிக்கலாம். என் சைடில பெருசா யாரும் இல்ல… உங்க சைடில இருந்தாலும், அவங்களை எல்லாம் கூப்பிட வேணாம். அது உங்களுக்கு சங்கோஜமா இருக்கும்…’’ என்றாள்.
‘‘எஸ் மிருது… நான் நினைச்சேன். நீ சொல்லிட்டே. நானும், யார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்ல. ஈவன் என் சன் கிட்ட கூட. நாம சிம்பிளா மேரேஜ் பண்ணிக்கிடலாம். நாளன்னைக்கு நாள் நல்லாயிருக்கு… அன்னைக்கே நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம் என்கிறது என்னோட ஐடியா. நீ என்ன சொல்லுறே?’’
‘‘எஸ் டியர்… எனக்கும் ஓகேதான்’’ என்றாள்.
‘‘ஓகே…நான் ரிஜிஸ்தரார வீட்டுக்கு வரச்சொல்லிடுறேன். அன்னைக்கு இன்னொரு விசேஷமும் இருக்கு….’’ என்று பீடிகை வைத்தார் அபிஜித்.
‘‘அப்படி என்ன விசேஷம் டியர்…?’’ என்றாள்.
‘‘அன்னைக்குத்தான் நம்ம புராஜெக்ட்டுக்கான லோனும் சாங்ஷன் ஆகுது. சோ… அன்னைக்கே நம்ம புராஜெக்ட் துவக்க விழாவையும் வச்சுக்கலாம். ஒரே நாள்ல ரெண்டு விசேஷம். காலை 9 மணிக்கு கல்யாணம். 10 மணிக்கு புராஜெக்ட் துவக்க விழா. என்ன சொல்லுறே?’’
‘‘வாவ்… சூப்பர் டியர்… இவ்வளவு சீக்கிரம் லோன் சாங்க்‌ஷன் ஆயிடிச்சு… சூப்பர் டியர்… லவ் யூ…’’ என்றாள்.
‘‘அப்புறம் இன்னொரு சஸ்பென்ஸ் உனக்காக காத்திருக்கு…’’ என்றார் அபிஜித்.
‘‘என்ன டியர்… இன்னைக்கு காலையிலேயே என்னை திக்குமுக்காட வைக்கிறீங்க?’’
‘‘போய் கதவை திறந்து, உன் வீட்டு வாசலுக்கு போ…’’ என்று கூறி இணைப்பை துண்டித்தார்.
டிராக்கிங் சூட்டுடனேயே வாசலுக்கு விரைந்தாள் மிருதுளானி.
அங்கு ஆடி காரில் வந்த டிரைவர் ஒருவர், ஒரு பெரிய ரோஜா பூங்கொத்தையும், ஒரு பெட்டி ஒன்றையும் கொடுத்தார்.
‘‘அபிஜித் ஐயா… குடுத்துட்டு வரச் சொன்னார் மேடம்…’’ என்றான் டிரைவர்.
புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டு, ‘‘தேங்க்ஸ்’’ என்றாள்.
அதை எடுத்து வீட்டுக்கு வந்தவள். தன் அறையில் வைத்து அதை பிரித்து பார்த்தாள்.
உள்ளே கழுத்தை ஒட்டி அணியும் வைர நெக்லஸ் டாலடித்துக் கொண்டிருந்தது.
அபிஜித்தை செல்போனில் அழைத்தாள்.
‘‘டியர்… மார்வலஸ் நெக்லஸ்… எவ்வளவுக்கு வாங்கினீங்க…?’’ என்றாள்.
‘‘பார்த்தீயா… எல்லா பொண்ணுங்களும் விலையிலதான் குறியா இருப்பாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கே…’’ என்றார் சிரித்தபடி.
‘‘அப்படியில்ல டியர்… இவ்வளவு அழகான நெக்லஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்குமேன்னு கேட்டேன்…’’ என்றாள்.
‘‘எஸ்… டூ குரோர்’’ என்றார் அபிஜித்.
‘‘என்ன சொல்றீங்க டியர்… நிஜமாவா?’’ என்றாள்.
‘‘எஸ்… சுவிஸ் மேடு டைமன்ட்  நெக்லஸ். என் வாழ்க்கை துணைக்கு நான் குடுக்கப்போகிற முதல் பரிசு, பிரமாண்டமா இருக்கணும்னு நினைச்சேன்… அதனால நானே நேர்ல போய் பர்சேஸ் பண்ணேன்’’ என்றார்.
‘‘வாவ்… சோ மச் தேங்க்யூ டியர்…’’ என்றாள்.
‘‘ஓகே… தலைக்கு மேல வேலை இருக்கு… நீயும் உன் ஸ்டாப்ஸ் கிட்ட இன்னாகிரள் பங்கஷன் பத்தி அனவுன்ஸ் பண்ணிடு’’ என்றார் அபிஜித்.
‘‘எஸ் டியர்… எகெயின் தேங்கயூ சோ மச் டியர்…’’ என்றாள்.
‘‘இட்ஸ் ஓகே…’’ என்று விடை பெற்றார் அபிஜித்.
நெக்லசை கழுத்தில் போட்டு அழகு பார்க்க ஆரம்பித்தாள் மிருதுளானி.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.
(தொடரும் 9)
10
ரேஷ்மாவும், நவீனும் அந்த இளமாலைப் பொழுதில் தாபாவில் அமர்ந்திருந்தார்கள்.
இரை முடித்த பறவைகள் மாலை பொழுதை உடல், கூடல்களுடன் அங்கும், இங்குமாக சுற்றி வந்துக் கொண்டிருந்தன. ஹனிமூன் வந்திருந்த இளம் இந்திய தம்பதி, தேம்ஸ் நதியின் படகில் பயணத்துக் கொண்டிருந்தனர். காதருகே கேட்ட கணவனின் உஷ்ணமான மூச்சுக்காற்றை வைத்தே, அவனது மனநிலையை புரிந்து கொண்ட, மனைவி, அவனை செல்லமாக எச்சரித்துக் கொண்டிருந்தாள்.
ரேஷ்மா மீது ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின்னர் நவீனை பார்த்து பெருமூச்சுடன் ஆப்பிள் ஜூஸை வைத்துவிட்டு சென்றான் பேரர்.
‘‘ரேஷ்மா… இப்படியே விட்டோம்னா… உன்னை கண்ணாலேயே ஒரு வழி பண்ணிடுவான் போலிருக்கு அந்த பேரர். இவன் மட்டுமா… போறவன் வர்றவன் எல்லாம் என் ஹனியை முழுங்குற மாதிரியில்ல பார்த்துட்டு போறான்… நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் ரேஷ்மா…’’ என்றான் நவீன்.
‘‘என்னடா இப்படி படார்னு கல்யாணம், கில்யாணம்னு பேசுறே…?’’ கேட்டாள் ரேஷ்மா.
‘‘பின்னே… நான் எப்போ… அதோ அந்த போட்ல போறான் ஒரு யெங் இண்டியன். அவன மாதிரி உன்தோள் மேல கைய போட்டு, இதுதான் பொண்டாட்டிடான்னு…கூட்டிட்டு போறது?’’ என்றான்.
‘‘அதுக்கென்ன… வா… இப்பவே போவோம்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘சும்மா விளையாடாதே ஹனி… சீரியசாவே நான் கேட்கிறேன்… நீ உங்க அம்மாக்கிட்ட பேசு… நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். நானும் எங்கப்பாக்கிட்ட பேசுறேன்… அவர் இன்னைக்கு இண்டியாலே புதிய பிஸ்னஸ் லாஞ்ச் பண்றார். அதனால இன்னைக்கு நல்ல மூடுல இருப்பார். இன்னைக்கு அவர்கிட்ட பேசினா நிச்சயம் ஒத்துக்குவார்… இப்பவே நான் பேசுறேன்… நீயும் உங்கம்மாக்கிட்ட பேசு…’’ என்றான்.
‘‘டார்லிங் அப்படி எல்லாம் அவசரப்படக்கூடாது… பொறுமையா… நிதானமா பேசணும்…’’ என்றாள்.
‘‘ஆமா… நீ பாட்டி மாதிரி பொறுமையா, நிதானமா, சமாதானமா… பேசு… நாம ரெண்டு பேரும் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்’’ என்றான் கோபமாக.
‘‘சரி நான் பேசுறேன்… நீ மொதல்ல உங்கப்பாக்கிட்ட பேசு… அவர் என்ன சொல்றார்னுதான் பார்ப்போமே…’’ என்றாள்.
சடாரென்னு தன் செல்போனை எடுத்த நவீன், இந்தியாவில் இருக்கும் தன் தந்தைக்கு பேசினான். போனை எடுத்துக் கொண்டு தாபாவின் வெராண்டாவுக்கு சென்றான்.
சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் புன்னகையுடன் வந்தான் நவீன்.
‘‘நான்தான் சொன்னேன்ல… எங்கப்பா என்னைக்குமே என் விருப்பத்துக்கு மாறா நடந்துக் கிட்டதேயில்லன்னு… அவர் என் கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்டிட்டார். உன் போட்டோவ அனுப்பி வைக்கச் சொன்னார்… உன்கிட்ட இருக்கிறதிலேயே… கொஞ்சமாவது பார்க்கிற மாதிரி சுமாரா இருக்கிற ஒரு போட்டோவ அனுப்பி வையேன்… உன் மாமனாருக்கு அனுப்பி வைக்கணும்’’ என்றான் கிண்டலாக.
‘‘உன்னே… ’’ என்று டேபிளில் இருந்த மெனுகார்டை தூக்கி அடித்தாள் ரேஷ்மா.
இருவரும் சிரித்து அடங்கியவுடன் ரேஷ்மாவும் தன் போனை எடுத்தாள். எதிரே இருந்த அவனிடம் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு, தன் அம்மாவுக்கு போன் செய்தாள்.
சில ரிங் போனவுடன் மிருதுளானி எடுத்தாள்.
‘‘என்ன டார்லிங்… என்ன விஷயம்… திடீர்னு கால் பண்ணியிருக்கே…?’’ என்றாள் மிருதுளானி. பின்னணியில், நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘‘மாம்… நீ என்ன கோயில்லேயா இருக்கே?  நாதஸ்வரம், தவில் எல்லாம் கேட்குது?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘இல்ல டார்லிங்… இன்னைக்கு என் பிரண்டோட சேர்ந்து புது பிஸ்னஸ் லாஞ்ச் பண்றேன்… அதனோட பங்ஷன் தான் நடந்திட்டு இருக்கே… நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்… அது சரி நீ எதுக்கு போன் பண்ணே ரேஷ்மா… எனிதிங் இம்பார்ட்டன்ட்? பணம் எதுவும் வேணுமா?’’ என்றாள் மிருதுளானி.
‘‘மாம் பணம் எல்லாம் வேண்டாம்… உன் சம்மதம்தான் எனக்கு வேணும்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘என்ன சொல்றே ரேஷ்மா… புரியமாதிரி சொல்லு…’’ என்றாள்.
‘‘மாம் நான் ஒரு ஹேண்ட்சம் பாய காதலிக்கிறேன். பயப்படாதே அவனும் இண்டியன்தான். இங்கேயே படிச்சு நல்ல வெல் செட்டிலடா இருக்கான். என் மனசுக்கு ரொம்ப பிடிச்சவன். அவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… அதுக்குத்தான் உன் சம்மதம் தேவை…’’ என்றாள் தயங்கி, தயங்கி.
‘‘ஓ பேபி… என் டார்லிங் செலக்‌ஷன் எப்பவுமே சரியாத்தான் இருக்கும். தாராளமா பண்ணிக்கோ… இண்டியான்னா என்னால கலந்துக்க முடியும்… நீ லண்டன்லேயே பங்ஷன் வச்சுக்கிட்ட என்னால வர முடியாது பேபி… மாம்… இப்போதான் ஒரு பெரிய பிஸ்னஸ்ல… ரொம்ப பிசியா இருக்கேன்…’’ என்றாள்.
‘‘ஓ… தேங்க்ஸ் மாம்… நாங்க கல்யாணத்தை எங்கே வச்சுக்கிறதுன்னு இன்னும் டிசைட் பண்ணல… அதை பின்னாடி சொல்றேன்…. தேங்க் யூ வெரிமச் மாம்… நீ பங்ஷனை கவனி… நான் அப்புறம் பேசுறேன்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ஓ… லவ் யூ டார்லிங்… வச்சுடுறேன், பேபி’’ என்று போன் இணைப்பை துண்டித்தாள் மிருதுளானி.
சிரித்துக் கொண்டே நவீனை பார்த்து, கட்டை விரலை தூக்கி காண்பித்தாள் ரேஷ்மா.
‘‘ஹூர்ரே…  ’’ என்று கத்தியபடி அருகில் வந்த நவீன், அவளை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
தாபாவில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களையே பார்த்தனர்.
‘‘இந்த காதல் ஜோடிகளே இப்படித்தான்பா…’’ என்ற ரீதியில் ஓரத்தில் அமர்ந்து சப்பாத்திகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த ஒரு சிங், சற்றும் மனம் தளராமல் மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்தார்.
நவீனும் ரேஷ்மாவும் சிறிது நேரம் அங்கேயே பேசிக் கொண்டிருந்தனர்.
‘‘ஓகே… டார்லிங், நான் கெளம்புறேன்… நாளைக்கு பார்க்கலாம்’’ என்றாள் ரேஷ்மா.
‘‘என்ன அவசரம் அதுக்குள்ள…’’ என்றான் நவீன்.
‘‘நோ பேபி… நாளைக்கு சூட்டிங் இருக்கு… கொஞ்சம் காஸ்ட்யூம் பர்சேஸ் பண்ண வேண்டியிருக்கு…   அல்ரெடி நான் லேட் பேபி… கிளம்புறேன்பா…’’ என்றாள்.
‘‘ஓகே… ஒரு நல்ல போட்டோவ அனுப்ப சொன்னேனே… அனுப்பிடு…’’ என்றான்.
‘‘இரு கையோட அனுப்பிடுறேன்…’’ என்று செல்போனில் இருந்த தன்னுடைய அழகான புகைப்படத்தை அவனுக்கு வாட்ஸ்அப் பண்ணிவிட்டு கிளம்பினாள்.
நவீன் அவள் அனுப்பிய போட்டோவை பார்த்தான். தேவதையாக இருந்தாள் ரேஷ்மா… எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்போனிலேயே அவளுடைய படத்துக்கு முத்தத்தை கொடுத்துவிட்டு, அதை தன் தந்தையின் எண்ணுக்கு பார்வேர்ட் பண்ணினான்.
(தொடரும் 10)

11

‘‘மிருது இன்னைக்கு பங்ஷன் நல்லபடியா முடிஞ்சது… பேங்க் சேர்மன் சோ ஹேப்பி… இந்த புராஜெக்ட்ல சக்சஸ் பண்ணிட்டா அடுத்த புராஜெக்ட்டுக்கும் லோன் தர்றேன்னு சொல்லியிருக்கார்…’’ என்றார் அபிஜித்.
‘‘எஸ் டியர்… இன்னைக்கு பங்ஷனுக்கு வந்தவங்க எல்லாம் சோ ஹேப்பி…’’ என்றாள் மிருதுளானி.
‘‘மிருது… நீ இங்கேயே வந்து இருந்துடு… அடையார் பங்களா வேண்டாம்…’’ என்றார் அபிஜித்.
‘‘ஓ… டியர்… கொஞ்சம் டைம் குடுங்க… அங்க வேலை பார்க்கிறவங்கள எல்லாம் செட்டில் பண்ணி அனுப்பணும்… திடீர்னு சொன்னா ஷாக் ஆயிடுவாங்க…’’ என்றாள்.
‘‘மிருது நமக்குத்தான் கல்யாணம் ஆயிடிச்சே… இனிமே நீ அங்கே, நான் இங்கே இருந்தா நல்லா இருக்காது. சோ… எவ்வளவு சீக்கிரம் செட்டில் பண்ண முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் அனுப்பிடு…’’ என்றார்.
‘‘எஸ் டியர்…’’
‘‘அப்புறம் ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டேன்… இன்னைக்கு காலையில மேரேஜ் முடிஞ்சு பங்க்‌ஷன்ல இருந்தோம்ல… அப்போ என் பையன் போன் பண்ணான்… யெங் பாய்… யாரையோ லவ் பண்றானாம். அவளையே கல்யாணம் கட்டிக்கிறவான்னு கேட்டான். இந்த காலத்து பசங்க… கேர்ள் பிரண்ட கல்யாணம் கட்டிக்கவான்னு கேட்கிறதே பெரிய விஷயம்… என் பையன் இன்னமும் நல்லபடியா இருக்கானேன்னு சந்தோஷமா இருக்கு…’’ என்றார்.
‘‘ஓ… சூப்பர் டியர்… நல்ல விஷயம்… உங்க பையன நல்லபடியா வளர்த்திருக்கீங்க… அவன் ஏதோ சாப்ட்வேர் பிஸ்னஸ் தானே பண்றதா சொன்னீங்க?’’ என்றாள்.
‘‘ஆமா… லண்டன்ல எக்சிட் சாப்ட்வேர்னு ஒரு கம்பெனி வச்சிருக்கான்… இங்க வாடான்னா சொன்னா கேட்க மாட்டேங்கிறான்… அவனே நடத்தி… இப்போ என்ட்ரி லெவல் கம்பெனியில நல்லபடியா இருக்கிறதா சொன்னான்… என்கிட்ட இருக்கிற சொத்துக்கு இங்க வந்தா… உட்கார்ந்தே சாப்பிடலாம்… அங்க உட்கார்ந்து கஷ்டப்படுறான்… என்னத்த சொல்ல…’’ என்றார்.
‘‘விடுங்க டியர்… பசங்க இந்த மாதிரி பொறுப்பா இருக்கிறது, எவ்வளவு பெரிய விஷயம். அதைப்போய் குறை சொல்றீங்களே… அவன் நல்லா இருந்தா உங்களுக்குத்தானே பெருமை…’’ என்றாள்.
‘‘அதெல்லாம் சரிதான்… நான் இங்கே… அவன் அங்கேன்னு ஒண்டிக்கட்டையா இருக்கோம் பார்த்தியா?’’ என்றார்.
‘‘விடுங்க டியர்… அதெல்லாம் போகப்போக சரியாயிடும். இனிமே தனிமை உங்கள வாட்டாது. அதான் நான் வந்துட்டேன்ல…’’ என்றபடி, சோபாவில் அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.
‘‘எஸ்… இப்போதைக்கு எனக்கு பெரிய ஆறுதல் நீ மட்டும்தான். என் பையன்கிட்டே உன்னைப்பத்தி இன்னைக்கே போன்ல சொல்லிடலாம்னு இருந்தேன். ஆனா, அங்கே இருந்த பிசியில அது முடியல… மொதல்ல அவன்கிட்ட பக்குவமா நம்ம விஷயத்தை சொல்லணும்… அவன் வெஸ்டர்ன் கலாச்சாரத்தில வளர்ந்த பையன். அதனால புரிஞ்சுக்குவான்னு நினைக்கிறேன்…’’ என்றார்.
‘‘கட்டாயம் புரிஞ்சுக்குவான் டியர்… நீங்க கவலைப்படாதீங்க…’’ என்றாள்.
‘‘கொஞ்சம் இரு… என் பையன் கேர்ள் பிரண்டோட பிக்சரை அனுப்பி இருந்தான்…’’ என்று அவரது செல்போனில் இருந்த படத்தை காட்டினார்.
அதில் இருந்த ரேஷ்மாவின் படத்தை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தாள் மிருதுளானி.
‘‘இவ…இவளா…’’ என்றாள் அதிர்ச்சியுடன்.
‘‘ஆமா… ஏன் நல்லா இல்லையா?’’ என்று கேட்டார் அபிஜித்.
‘‘இல்லே…’’ என்று இழுத்தாள் மிருதுளானி.
‘‘ஓ…. மிருது நல்லா இருக்காளா… இல்லையா… அதைச் சொல்லு…’’ என்றார்.
‘‘இல்ல பொண்ணு நல்லாத்தான் இருக்கு… ஆனா அவளைப்பத்தி விசாரிச்சுட்டீங்களா?’’ என்று கேட்டாள்.
‘‘அவளைப்பத்தி விசாரிக்கிறதுக்கு என்ன இருக்கு… அவளும் இந்தியப் பொண்ணுதான். அதுபோதும் எனக்கு. என் பையன் செலக்‌ஷன் ஒரு நாளும் தப்பா இருக்காது…’’ என்றார்.
‘‘இல்லே டியர்… இது கல்யாண விஷயம். நல்லா விசாரிச்சுட்டுத்தான் முடிவு எடுக்கணும்… நான் வேணா லண்டன்ல இருக்கிற என் ரிலேசன்ஸ் கிட்ட விசாரிக்கவா?’’ என்றாள்.
‘‘நோ மிருது… தேவையில்லை… என் பையன் முடிவு பண்ணிட்டான்னா… அதுல இருந்து மாற மாட்டான். சோ… நாம அவன் போக்கில போறதுதான் நல்லது. உன்னை கட்டிக்காதேன்னு யாராவது சொல்லியிருந்தா… நான் தலையாட்டி இருப்பேன்னு நினைக்கிறியா? அது மாதிரிதான் என் பையனும். முடிவு பண்ணிட்டா மாற  மாட்டான்… என்னைக்கு கல்யாணம்னு அவங்களே டிசைட்  பண்ணிட்டு வரட்டும் பார்த்துக்கலாம்…’’ என்றார்.
அவரிடம் பொத்தாம் பொதுவாக தலையசைத்து வைத்தாள் மிருதுளானி.
ஆனால், ஏடாகூடமாகப்போகும் உறவை நினைத்துதான் அவள் மனதில் கவலைகள் ஆட்கொள்ள தொடங்கின. அதற்குள், அவள் மீது படர ஆரம்பித்திருந்தார் அபிஜித்.
இரவில் திடீரென விழிப்பு தட்டியதில் எழுந்தாள் மிருதுளானி. நேரத்தை பார்த்தாள். மணி நள்ளிரவு 1 என்று காட்டியது. அருகில் இருந்த அபிஜித்தைபார்த்தாள். அவர் குறட்டை விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இப்போது லண்டனில் இரவு 8 மணி. மனதிலேயே கணக்குப் போட்டுக் கொண்டு செல்போனு பாத்ரூம் நோக்கி சென்றாள்.
ரேஷ்மாவுக்கு கால் செய்தாள்.
மூன்றாவது ரிங்கில் எடுக்கப்பட்டது.
‘‘ஹாய் மாம்… என்ன… இன்னும் தூங்கலியா… இந்த டைம்ல கூப்பிடுறே?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘பேபி நீ லவ் பண்ற பையன்பேர் நவீனா?’’ என்று கேட்டாள் மிருதுளானி.
‘‘யெஸ் மாம்… உனக்கு எப்படி பேர் தெரிஞ்சது?’’ ஆச்சரியத்துடன் கேட்டாள் ரேஷ்மா.
‘‘புல்ஷீட்…’’ என்றாள் கோபத்துடன் மிருதுளானி.
‘‘என்ன ஆச்சு மாம்… ஏன் திடீர்னு கோபப்படுறே… அந்த பேர் உனக்கு பிடிக்கலையா?’’ என்றாள்.
‘‘எனக்கு அந்த பையனையே பிடிக்கல…’’ என்றாள் மிருதுளானி.
‘‘என்ன மாம்… காலையில நீ தேர்ந்தெடுத்தா சரியா இருக்கும்… அது இதுன்னு சொன்னே… இப்போ மாத்தி பேசுற…’’ என்றாள்.
‘‘அது அப்போ… சரி நீ உடனே சென்னை வா… நான் உன்கிட்ட பேசணும்’’ என்றாள்.
‘‘இப்பயும்… அதுதானே செஞ்சிட்டு இருக்கோம்… அது எதுக்கு அங்கு வந்து பேசணும்?’’ என்றாள்.
‘‘இல்ல உன்கிட்ட மனம்விட்டு பேசணும்னு தோணுது… நீ ஒரு வாட்டி சென்னை வந்துட்டு போயேன்…’’ என்றாள்.
‘‘எனிதிங் சீரியஸ் மாம்..?’’ என்றாள்.
‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல பேபி… ஏதோ உன்கிட்ட பேசணும்னு தோணுது… ஒரு வாட்டி வாயேன்…’’ என்றாள்.
இருவருக்கும் இடையில் சில விநாடிகள் மவுனமாக கழிந்தது.
‘‘சரி அடுத்த வாரம் நான் வர்றேன் மம்மி… ஆனா நவீனை பத்தி ஏதாவது பேசணும்னா என்னால முடியாது…நான் டிசைட் பண்ணிட்டேன்… அவன் தான் என் பியூச்சர்…’’ என்றாள்.
‘‘இல்ல பேபி நீ வா…’’ என்றாள்.
‘‘சரி நான் வர்றேன்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ஐயாம் வெயிட்டிங்…’’ என்றாள் மிருதுளானி.
(தொடரும் 11)

12
மறுநாள் காலை.
நவீனின் ஆபிசுக்கே வந்திருந்தாள் ரேஷ்மா.
வராதவள் வந்ததால், திக்குமுக்காடிப் போயிருந்தான் நவீன்.
‘‘என்ன ரேஷ்மா திடீர்னு இப்படி சொல்லாம, கொல்லாம… வந்து நிக்குறே...? எனிதிங் சீரியஸ்?’’ என்று கேட்டான்.
‘‘எஸ்… நவீன்… நேத்து ஈவ்னிங் அம்மா போன் பண்ணாங்க… திடீர்னு உன் பெயரைச் சொல்லி சரியான்னு கேட்டாங்க… அப்புறம் ஊருக்கு வா, உன்கூட பேசணும்னு சொல்றாங்க… ஐ திங்க் உன்னைப் பத்தி இங்கிருக்கிற என் ரிலேட்டீவ்ஸ் யாராவது தப்பா சொல்லியிருப்பாங்களோன்னு பயமா இருக்கு நவீன்’’ என்றாள்.
‘‘ஹே பேபி… அப்படி எல்லாம் இருக்காது… ஆன்ட்டி உன் கல்யாண மேட்டர்ல சீரியஸ் ஆகியிருப்பாங்க… அதுதான் உன்கூட பேசணும்னு சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்… மத்தபடி ஒண்ணும் இருக்காது… நீயும் இண்டியா போய் ரொம்ப நாளாகுது இல்ல… போய்ட்டு வாயேன்…’’ என்றான்.
‘‘நான் போனா திரும்பி வருவேனான்னு பயமா இருக்கு நவீன்… ஏன்னா எங்கம்மா மாடர்ன் மங்காத்தா… அவங்க நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிறவங்க… ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு அவங்க குறுக்க நின்னுடுவாங்களோன்னு பயமா இருக்கு…’’ என்றாள்.
‘‘அப்படி எல்லாம் இருக்காது பேபி. ஆன்ட்டிக்கிட்ட ஏற்கனவே நீ நம்ம லவ்மேட்டரை சொன்னப்போ… சரின்னு சொன்னாங்கன்னு தானே சொன்னே? அதனால இது வேற பிரச்னையா இருக்கும்னு நினைக்கிறேன். பயப்படாதே…’’ என்றான்.
‘‘நோ நவீன்… இட்’ஸ் சீரியஸ்…’’ என்றாள்.
‘‘சரி அப்போ நீ இண்டியா போகாதே… விட்டுரு… வர்றத பார்த்துக்கலாம்’’
‘‘அதுவும் முடியாது பேபி… ஏன்னா இங்க எங்க ரிலேட்டீவ்ஸ் கொஞ்சம்பேர் இருக்காங்க…அவங்க மூலமா மம்மி தொந்தரவு குடுத்திட்டே இருப்பாங்க… அவங்களப் போய் பார்க்கிறதுதான் ஒரே வழியா இருக்கும்னு நினைக்கிறேன்…’’
‘‘அப்போ தைரியமா போ… உன் மாம்தானே என்ன கடிச்சு திண்ணுடுவா போறாங்க?’’
‘‘பேபி எனக்கு ஒரு யோசனை நீயும் என்னோட இந்தியாவுக்கு வாயேன்… ஒன் வீக் மட்டும்தான்… போய்ட்டு வந்துடலாம்… நீயும் இண்டியாவுக்கு வந்தா எனக்கு யானை பலமா இருக்கும்…’’ என்றாள்.
‘‘அடிப்பாவி அன்னைக்கு மட்டும் வெயிட் தாங்க முடியலன்னு சொன்னே?’’ என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.
‘‘ராஸ்கல் எப்போ பார்த்தாலும் உனக்கு அதே நினைப்புதானா…?’’ என்று செல்லமாக அவனது மார்பில் குத்தினாள். பின்பு, ‘‘ஓகே பேபி… நீயும் என்னோட வர்றே… நாம போவோம்… ஒத்துவரலேன்னா… காஞ்சிபுரம் போறோம்… கல்யாணம் பண்ணிக்கிறோம்… லண்டன் திரும்புறோம். ஓகே.யா?’’ என்றாள்.
‘‘என் டார்லிங் சொல்லிட்டா மறுப்பு ஏது?’’ என்று, அறையில் யாருமில்லா தைரியத்தில் அவளது இதழை நோக்கி நெருங்கினான்.
அப்போதான் கையில் காபி கோப்பைகளுடன் அறையில் நுழைந்தான் ஆபிஸ் பாய். இவர்கள் இருவரும் மோவாயை குவித்துக் கொண்டு அருகருகில் இருப்பதை பார்த்து, அசடு வழிந்து, ‘‘சாரி சார்… மெயின் சீன்ல வந்துட்டேன்’’ என்று வெளியேற பார்த்தான்.
‘‘டேய் முட்டாள் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… அறையில நுழையறப்போ… தட்டிட்டு வரணும்னு… இதுக்குத்தான் படிக்காதவன எல்லாம் இங்க கொண்டு வந்து வேலைக்கு போடக்கூடாதுன்னு சொல்றது… சொந்தக்காரனாச்சேன்னு ஊர்ல இருந்து அழைச்சு வந்து போட்டதுக்கு, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டா பாவி…’’ என்று சிரித்தான் நவீன்.
‘‘அடபோங்க சார்… வெள்ளைக்காரனை வேலைக்கு வச்சிருந்தா… உங்களுக்கு சுண்ட வத்தின வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, கீரவடை, வாழைப்பூ ரோஸ்ட், அப்பளம்னு வாய்க்கு ருசியா செஞ்சு போடுவானா… ஏதோ திண்டிவனத்தில  இருந்து வந்தவன்றதால உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்…’’ என்றான் ஆபிஸ் பாய்.
‘‘டேய் அப்பா… சாமீ… ஆரம்பிச்சுடாதே… உன் புராணத்தை… காபி வச்சிட்டு போ…’’ என்றான்.
காபி கோப்பைகளை டேபிளில் வைத்த ஆபிஸ் பாய், நவீனின் காதில் வந்து ஏதோ கேட்டான்.
கேட்ட மாத்திரத்திலேயே எழுந்து நின்று, ‘‘டேய் ஒழுங்கா போறீயா இல்லே… உதை வாங்கப்போறீயா?’’ என்றான் நவீன்.
அவன், ‘‘அடப்போங்க சார்… நல்லா படிச்சவங்களா இருக்கீங்க… டவுட் கேட்டா மட்டும் சொல்ல மாட்டேங்றீங்களே… நான் வளர்ந்து உங்களை மாதிரி பெரிய கம்பெனி ஆரம்பிச்சுடுவேன்னு பயம் சார்…’’ என்றான் ஆபிஸ் பாய்.
‘‘டேய் போடா... போடா…’’ டேபிள் வெயிட்டை அவன் மீது எறிவது போல் கையை ஓங்கினான்.
அவனை தடுத்து நிறுத்திய ரேஷ்மா, ‘‘ஹேய்… ஹேய்… என்ன ஆச்சு… என்ன கோபம்… ஏன் அவனை இப்படி துரத்துறே? என்ன கேட்டான் அப்படி?’’ என்றாள்.
அவளை ஒருகனம் பார்த்த நவீன், ‘‘லிப் கிஸ் குடுத்தா… மூக்கு தடுக்காதா சார்… ஒரு சினிமாவில இப்படித்தான் கேட்டாங்க சார்னு… சொல்றான். இடியட் என்னோட கிஸ்ஸ தடுத்தது மட்டுமில்லாம… பயபுள்ள என்ன கேள்வியெல்லாம் கேட்கிறான் பாரு…’’ என்றான் ஆத்திரத்துடன்.
‘‘சரி இருப்பா… நாம இன்னைக்கு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமேன்னு…’’ என்றாள் ரேஷ்மா.
புலம்பிக் கொண்டிருந்த நவீன், திடீரென ரேஷ்மாவின் வார்த்தைகளில் இருந்த உஷ்ணத்தை அப்போதுதான் உணர்ந்தான்.
‘‘அடிக்கள்ளீ… என் பேபி… என் டார்லிங்…’’ என்று சீட்டில் இருந்து எழுந்து வந்து அவளை அள்ளிக்கொண்டான்.
மீண்டும் கதவை திறந்து உள்ளே வந்தான் ஆபிஸ்பாய்.
இம்முறை டேபிளில் கிடந்த ஏதோ ஒரு வார இதழை நோக்கி அவனை நோக்கி வீசினான் நவீன்.
அதை கவனித்துவிட்டு ஆபிஸ்பாய், வார இதழ் தன் மீது விழுவதற்குள் சடக்கென்று கதவை சாத்திவிட்டு, ‘‘பாஸ் ரொம்ப கோபமா இருக்கார் போல…’’ என்று புலம்பிக் கொண்டே சென்றான்.
(தொடரும் 12)


13
அந்த எமிரேட்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்கும்போது, காலையில் தங்கம் விலை மாறும் நேரம் ஆகியிருந்தது.
நவீனும், ரேஷ்மாவும் பெரிய அளவில் லக்கேஜ்கள் இல்லாததால் எளிதாக செக்கிங் முடிந்து வெளியே வந்தார்கள்.
கையில் இருந்த சிறிய ரோலிங் டிராவல் பெட்டியுடன் இருவரும் பாஸ்போர்ட் டிக்கெட்டுடன் லவுஞ்சுக்கு வந்தார்கள்.
‘‘பேபி என் பாஸ்போர்ட்டையும் நீயே வச்சுக்க நான் திருப்பியும் என் பெட்டியை திறக்க முடியாது. ரெண்டு பேரும் ஒரே பிளைட்லதானே திரும்பப் போறோம்…’’ என்று கூறி தன்னுடைய பாஸ்போர்ட்டையும் அவனிடம் கொடுத்தாள் ரேஷ்மா. இரண்டையும் தன்னுடைய தோளில் இருந்த சிறிய தோல் பையில் போட்டுக் கொண்டான் நவீன்.
வெளியே வந்த இருவரும் ஓலா பிடித்து, நேராக அடையாறில் இருந்த ரேஷ்மாவின் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
காரில் ரேஷ்மா அமைதியாக இருப்பதை பார்த்து, ‘‘என்ன டார்லிங் ஒரே சைலண்ட் நீ இப்படி இருக்க மாட்டீயே?’’ என்றான் நவீன்.
‘‘டென்ஷனா இருக்கு பேபி அம்மா அன்னைக்கு ஏன் அப்படி கொஞ்சம் ஹார்ஷா பேசினாங்கன்னு தெரியல ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு அம்மா நோ சொல்லிடுவாங்களோன்னு ஒரே பயமா இருக்கு…’’ என்றாள்.
‘‘ஆரம்பிச்சுட்டியா ஆன்ட்டி அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க ஒருவேளை அவங்க சம்மதிக்கலைன்னா நாமதான் காஞ்சிபுரத்தில கல்யாணம் பண்ணிக்கிறப் போறோமே அப்புறம் ஏன் பயப்படுறே? சியர்ஸ் அப் பேபி…’’ என்றான்.
அவனிடம் சற்றே சிரித்து வைத்தாள் ரேஷ்மா.
கார், மிருதுளானியின் அடையாறு பங்களா முன் நின்றது.
உள்ளே இருந்த ரேஷ்மாவை பார்த்து, காரை திறந்துவிட்டான் செக்யூரிட்டி.
போர்ட்டிக்கோவில் நின்ற காரில் இருந்து இறங்கிய ரேஷ்மா, டிக்கியை திறந்து தன் பெட்டியை மட்டும் எடுத்து, செக்யூரிட்டியிடம் கொடுத்தாள். பின்பு டிக்கியை மூடிவிட்டு, ‘‘டிரைவரிடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இவர் வந்துடுவார்…’’ என்று சொல்லிவிட்டு, நவீனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
இவர்கள் வரும் தகவல் மிருதுளானிக்கு பாஸ் செய்யப்பட்டுவிட்டதுபோலும். இருவரும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருக்க மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மிருதுளானி.
ரேஷ்மாவும், நவீனும் எழுந்து நின்றார்கள்.
‘‘ஆன்ட்டி குட்மார்னிங் என் பெயர் நவீன் ரேஷ்மாவோட பாய்பிரண்ட்…’’ என்றான்.
அளந்து வைத்து சிரித்ததுபோன்று  ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி, ‘‘தெரியும் நவீன் உட்காருங்க…’’ என்றாள் மிருதுளானி.
‘‘ஆன்ட்டி நீங்க ரொம்ப யெங்கா இருக்கீங்க பார்த்தா ரேஷ்மாவோட அம்மான்னு யாரும் சொல்ல மாட்டாங்க அவளோட சிஸ்டர்னுதான் சொல்வாங்க…’’ என்றான்.
மீண்டும் பொத்தாம் பொதுவாக ஒரு சின்ன செயற்கை புன்னகையை வெளிப்படுத்தினாள் மிருதுளானி.
‘‘டேய் மாமியார்கிட்டேயே வழிய ஆரம்பிச்சுட்டீயா ராஸ்கல்…’’ என்று காதில் கிசுகிசுத்தபடி கையில் கிள்ளினாள் ரேஷ்மா.
‘‘அடுத்தவங்கள பாராட்டிடக்கூடாதே உடனே பொங்கிடுமே…’’   என்றான் நவீன்.
மிருதுளானி அமர, அவர்களும் அமர்ந்தார்கள்.
அப்புறம் நவீன் என்றாள் மிருதுளானி.
தான் இருப்பது மிருதுளானிக்கு பிடிக்கவில்லை என்பது அவளது நடவடிக்கையில் இருந்தே தெரிந்துக் கொண்ட நவீன், ‘‘ரேஷ்மாவை விட்டுட்டு போகலாமேன்னு வந்தேன் ஆன்ட்டி. அப்புறம் என் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்…’’ என்றபடி, ‘‘ரேஷ்மா அப்புறம் பார்க்கலாம் நான் கிளம்புறேன்…’’ என்றான்.
‘‘இரு நவீன் காபி சாப்பிட்டு போகலாம்’’ என்றாள் ரேஷ்மா.
‘‘நோ ரேஷ்மா நாமதான் பிளைட்டிலேயே சாப்பிட்டோமே…’’ என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
பிளைட்டில் கப்பெச்சினோ சாப்பிட்டதில், ரேஷ்மாவின் உதட்டின் மேல் ஒட்டியிருந்த நுரையை யாருக்கும் தெரியாமல் திடீரென நவீன் வாயை வைத்து சாப்பிட்டதை இப்போது சொல்லிக் காட்டினான்.
ரேஷ்மா சிரித்துக் கொண்டே, ‘‘ஓகே டேக் கேர் பேபி…’’ என்று வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.
அவன் கார், கேட்டில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்ற பின்னர்தான் உள்ளே வந்தாள்.
மிருதுளானி அவளது நடவடிக்கைகளையே கவனித்து கொண்டிருந்தாள்.
வேகமாக திரும்பி வந்த ரேஷ்மா, மிருதுளானியின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து, ‘‘சொல்லுமா எதுக்கு என்னை உடனே வரச் சொன்னே?’’ என்றாள்.
‘‘உனக்கு நவீன்னா அவ்வளவு பிடிக்குமா?’’ என்றாள் மிருதுளானி.
‘‘யெஸ் அவன்தான் என் உயிர். அதுதான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே சச் ஏ டேலண்ட் பெர்ஷன் அண்ட் கைன்ட் கய்’’ என்றாள்.
‘‘நீ பிளைட் ரொம்ப நேரம் டிராவல் பண்ணிட்டு வந்திருக்க டயர்டா இருக்கும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு நாம நைட் பேசிக்கலாம்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘எனக்கு ஒரு டயர்ட்டும் இல்ல. நீ நடந்துக்கிறதுதான் என்னை டயர்ட் ஆக்குது மொதல்ல சொல்ல, நீ எதுக்கு என்னை வரச் சொன்னே...? அப்புறம் இவ்வளவு தூரம் என்னை வந்து விட்டுட்டு போறான். அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டேங்கிற அட்லீஸ்ட் ஒரு காபியாவது குடிச்சிட்டு போகச் சொல்லியிருக்கலாம்ல.’’ என்றாள்.
‘‘ஏன் நான்தான் சொல்லணுமா அதுதான் நீயே கேட்டுட்டியே அப்புறம் என்ன?’’ என்றாள்.
‘‘மாம் நீ மனசுல ஒண்ண வச்சுட்டு, வெளிய ஒண்ணு பேசுற மாதிரி தெரியுது அதுதான் எனக்கு டென்ஷனை கிளப்புது நவீனை பத்தி உன்கிட்ட யாராவது தப்பா சொன்னாங்களா? அதையெல்லாம் நம்பாதே அவன் ரொம்ப நல்ல பையன்’’
‘‘அவனை மறந்துடு…’’ என்று சடாரென கூறினாள் மிருதுளானி.
‘‘மாம்ம்ம்ம்…’’ என்று கத்தியே விட்டாள் ரேஷ்மா.
‘‘எஸ் நான் தீ்ர்மானமா சொல்றேன் அவனை மறந்துடு அவன் உனக்கு சரிப்பட மாட்டான்’’ என்றாள் மிருதுளானி.
‘‘எனக்கு சரிப்பட மாட்டான்னு உனக்கு எப்படி தெரியும்? உன்னை மாதிரி என்ன ஒவ்வொருத்தனா கட்டிக்கிட்டா சரிபார்க்க முடியும்?’’ என்று வார்த்தைகளில் கங்குகளை கொட்டினாள் ரேஷ்மா.
படாரென்று அவள் கன்னத்தில் அறைந்தாள் மிருதுளானி. ‘‘நான் சொன்னா சொன்னதுதான். அவனை மறந்துடு அவன் உனக்கு சரிப்பட மாட்டான்…’’ என்று கூறிவிட்டு விறுவிறுவென்று காரை நோக்கி வெளியேறினாள் மிருதுளானி.
கோபம் ஏற்பட்டால் மற்றவர்கள் முன்பு பத்ரகாளியாய் இருக்கும் மிருதுளானி, தன்னிடம் ஒருபோதும் அப்படி நடந்துக் கொண்டதில்லை. இன்றைக்கு கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அவள் கோபப்பட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் விக்கித்து நின்றாள் ரேஷ்மா.
(தொடரும் 13)

14
மாலையில் சன் டிவியில் செய்திகள் ஓட ஆரம்பித்திருந்தது.
தன் வீட்டு போர்டிக்கோவில் அமர்ந்து செல்போன் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்த்துக் கொண்டிருந்தான் நவீன்.
அந்த நேரத்தில், செல்போனில், ‘நீ பாதி நான் பாதி கண்ணே…’’ ரிங்டோன் ஒலித்தது. இது ரேஷ்மாவுக்காக நவீன் வைத்திருந்த பிரத்யேக டியூன்.
புன்னகையுடன் பச்சை உருண்டையை மேல தள்ளிவிட்டு, ‘‘ஹலோ டார்லிங்…’’ என்றான்.
‘‘பேபி எனக்கு ரொம்ப பயமா இருக்குடா…’’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறினாள் ரேஷ்மா.
‘‘என்னப்பா… என்ன ஆச்சு… ஏன் என் செல்லத்துக்கு குரல் ரொம்ப கம்மியா தெரியுது? உங்கம்மா வேண்டாம்னு ஏதாவது சொல்லிட்டாங்களா...?’’ என்றான் நவீன்.
‘‘நீ வீட்ல இருந்து போனவுடனேயே அவங்கக்கிட்ட ஏன் உடனே கிளம்பி வான்னு கூப்பிட்டீங்கன்னு கேட்டேன்… அதுக்கு அவங்க உன்னை மறந்துடுன்னு சொல்றாங்க…’’ என்றாள்.
‘‘டார்லிங்… உங்க அம்மாக்கிட்ட, நீ சொன்ன மாதிரி என்னைப்பத்தி யாராவது தப்பா சொல்லியிருப்பாங்களோ?’’ என்றான்.
‘‘ஆமா பேபி… எனக்கு அதேதான் டவுட்டா இருக்கு… இல்லேன்னா அவங்க லவ்வுக்கு எல்லாம் நோ சொல்ற ஆளெல்லாம் கிடையாது… யாரோ ஸ்ட்ராங்க உன்னைப்பத்தி போட்டுக் குடுத்திருக்காங்க…’’ என்றாள்.
‘‘என்னைப்பத்தி போட்டுக்குடுக்கிறது அப்படி என்ன இருக்கு? அன்னைக்கு தாபாவில அந்த வெள்ளைக்காரிய சைட் அடிச்சேன். அதேபோல உன்ன பார்க்கிறதுக்கு முன்னாடி ரெண்டு வெள்ளைக்காரிங்கள சைட் அடிச்சிருக்கேன்… ஆனா, அவங்க எல்லாம் உங்க அம்மாக்கிட்ட வந்து போட்டுக் கொடுக்கிற அளவுக்கு தமிழ் பேச தெரியாதவங்களாச்சே…’’ என்றான்.
‘‘டேய்… என்ன கிண்டலா…?’’ என்றாள்.
‘‘அப்புறம் என்ன… என்னைப்பத்தி போட்டுக் கொடுத்திருக்காங்கன்னு சொல்றே… என்னைப்பத்தி என்ன சொல்லிட முடியும்? நான் ஒரு டீ டோட்டல். அப்புறம் பிஸ்னஸ்லேயும் எனக்கு போட்டி கிடையாது… அப்புறம் எப்படி? ஒய்? வாட்?’’ என்றான்.
‘‘பேபி நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்…’’ என்றாள்.
‘‘சாரி டார்லிங் நான் ஜோக்காதான் சொல்லிட்டு இருக்கேன். விடுவியா… இப்போ என்ன உங்க மாம் என்னை ஒத்துக்கல… ஆனா நீ தான் என்னை ஒத்துக்கிட்டீயே… தென் ஒய் திஸ் சாரோ?’’ என்றான்.
‘‘இருந்தாலும் அம்மாவோட ஆசியோட… உன்னை கைப்பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன் பேபி… அது இப்போது நடக்காது போல இருக்கு… அதுதான் வருத்தமா இருக்கு…’’ என்றாள்.
‘‘விடு டார்லிங்… கொஞ்ச நாள் போனா அவங்க சமாதானம் ஆயிடுவாங்க... அப்புறம் என்ன சொன்னாங்க…?’’ என்றான்.
‘‘இல்லே… உன்னை மறந்திடுன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டாங்க… நைட் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்காங்க... நான் விட மாட்டேன்… அவங்கக்கிட்ட நிச்சயம் போராடுவேன்…’’ என்றாள்.
‘‘உனக்கு என் மனப்பூர்வமான ஆசிகள் டியர்…’’ என்றான்.
‘‘ஏண்டா நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன். நீ இவ்வளவு அசால்ட்டா இருக்கே…’’ என்றாள்.
‘‘ஒய் டார்லிங்… அசால்ட் பண்ற நேரத்திலதான், அலர்ட்டா இருக்கணும்னு. மத்த நேரத்தில எல்லாம் எதுக்கு அது?’’ என்றான்.
‘‘பட் ஐ லைக் யுவர் ஹூமர் சென்ஸ்டா…’’ என்றாள்.
‘‘அப்போ எனக்கு ஒரு கிஸ் குடு…’’ என்றான்.
‘‘சீ போடா… எப்போ பார்த்தாலும்… கிஸ்ஸூ…புஸ்ஸூன்னுட்டு…’’ என்றாள்.
‘‘கிஸ் வேணாமா சரி ஓகே விடு… புஸ்ஸூ?’’ என்றான்.
‘‘அது என்ன புஸ்ஸூ…?’’ என்று கேட்டாள்.
‘‘வாத்யசயானாரின் 94வது பக்கம் 52வது வரியில என்ன சொல்லுதுன்னா…’’ என்று இழுத்தான்.
‘‘அப்பா சாமீ… நீ ஆரம்பிச்சுடாதே… நான் மூடுல இல்லை…’’ என்றாள்.
‘‘அப்போ பாதாம் பால் ஆர்டர் பண்ணவா?’’ என்றான்.
‘‘பாதாம் பால் எதுக்கு?’’ என்றாள்.
‘‘உனக்குதான் மூடு இல்லேன்னு சொன்னீயே… உனக்கு மூடு வரவழைக்கத்தான்…’’ என்றான்.
‘‘நவீன் நோ காமெடி… பீ சீரியஸ்… நான் மாம்கிட்ட நைட் பேசப்போறேன்… எனக்காக நீயும் பிரே பண்ணு…’’ என்றாள்.
‘‘ஓகே… டார்லிங்… இப்பவே ஆரம்பிச்சுடுறேன்… ’’ என்றான்.
அதைத்தொடர்ந்து சில விநாடிகள் அமைதியாக இருந்ததை தொடர்ந்து, ரேஷ்மாவே ஆரம்பித்தாள்… ‘‘பேபி லைன்ல இருக்கியா?’’ என்று கேட்டாள்.
ஆனால், மறுபக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராததால், சந்தேகத்துடன் போனை பார்த்தாள். போன் இணைப்பு துண்டிக்கப்படாதது தெரிந்தது.
‘‘டேய்… என்ன பண்றே அங்கே?’’ என்றாள்.
‘‘டார்லிங் நீ தானே பிரே பண்ணச் சொன்ன… அதனால கோட்டைச்சாமி முனியாண்டிக்கிட்ட பிரே பண்ணிட்டு இருந்தேன்… இப்படி டிஸ்டர்ப் பண்றியே…’’ என்றான்.
‘‘டேய் ராஸ்கல்… எப்பவுமே விளையாட்டுதானா? கொஞ்சமாவது சிரியசா இருடா… இல்லாட்டி என்னை வேற எவனுக்காவது கட்டிக் குடுத்திடுவா எங்க மாம்…’’ என்றாள்.
‘‘5 மலை, 6 கடல், 7 உலகம் தாண்டி உன்னை கொண்டுப்போய் வைத்தாலும், இந்த நவீன் உன்னை கொத்திட்டு போயிடுவான்… தெரியுமா டார்லிங்…’’ என்றான்.
‘‘அதான் பீட்டர் விஷயத்திலேயே பார்த்தேனே… பட் அது வேற, இது வேற… புரிஞ்சுக்கோ…’’ என்றாள்.
‘‘டோண்ட் வொர்ரி டார்லிங்… அம்மா சம்மதிக்கிறாங்களான்னு பாரு… இல்லாட்டி என் அப்பா சம்மதத்தோட நாம காஞ்சிபுரத்தில தாலிக்கட்டிக்கலாம்… நாளனைக்கு பர்ஸ்ட் நைட்டும் வச்சுக்கலாம்…’’ என்றான்.
‘‘சனியனே… எப்ப பாரு… அந்த நினைப்புதானா உனக்கு?’’ என்றாள்.
‘‘என்ன டார்லிங்… வருங்கால புருஷன்னு பார்க்காம இப்படி பொசுக்குன்னு திட்டுற… எங்கம்மா அப்பவே சொல்லிச்சு… இந்த மாதிரி பேட் கேர்ள்ஸ்சோட எல்லாம் சேராதேன்னு…’’ என்று நடிகர் கருணா பாணியில் பேசினான்.
‘‘ஓகே பேபி… நான் அம்மாக்கிட்ட பேசிட்டு நைட் உனக்கு கால் பண்றேன்… மறக்காம, சீரியசா எனக்காக பிரே பண்ணு பேபி… நான் போனை வச்சிடுறேன்…’’ என்றாள்.
‘‘ஓகே டார்லிங்… நைட் உன் கிஸ்சுக்காக வெயிட் பண்றேன்’’ என்றான் நவீன்.
அந்தப்பக்கம் சிறிய சிரிப்பொலியுடன் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் வாட்ஸ்ஆப் மெசேஜில் மூழ்கிய நவீன், பழைய நண்பன் ஒருவன் போனில் வந்து அழைக்கவே, அவனுடன் சேர்ந்து பழைய நண்பர்களை சந்திப்பதற்காக கிளம்பிச் சென்றான்.
அவன் திரும்பி வீட்டுக்கு வருகையில், மணி 11 ஆகிவிட்டது.
அப்போதுதான் ரேஷ்மா போனில் அழைப்பதாக கூறியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. போனை எடுத்து அழைப்புகளை சரிபார்த்தான். ஆனால், எந்த அழைப்பும் வரவில்லை.
ரேஷ்மாவை கூப்பிடலாமா என்று யோசித்தான். ஆனால், அவள் எந்த நிலைமையில் இருக்கிறாளோ… என்று நினைத்து, அவளே பண்ணட்டும் என்று எண்ணிக்கொண்டான்.
12 மணி வரையில் ரேஷ்மாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
பொறுக்க முடியாமல், போனை எடுத்து ரேஷ்மாவை கூப்பிட்டான். தன்னுடைய கால் என்றால், இரண்டு ரிங்குகளில் எடுத்துவிடுவாள்.  இன்று பல ரிங் போயும் எடுக்கப்படவில்லை. ஏதாவது வருத்தத்தில் இருப்பாளோ… என்று நினைத்து மீண்டும் அழைப்பு விடுத்தான். இம்முறையும் முழு ரிங் போய் கட்டானது. சளைக்காமல் மூன்றாவது முறையாக கூப்பிட்டான்.
‘‘நீங்கள் அழைத்துள்ள வாடிக்கையாளரின் எண், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’’ என்று வந்தது.
கலவரமானான் நவீன்.
(தொடரும் 14)

15
ரேஷ்மா போன் எடுக்காததால், கலவரமான நவீன், என்னவாயிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
‘‘ஏன் இவள் போன் எடுக்காமல் இருக்கிறாள். ஒருவேளை ஆன்ட்டி என்னை வேணாம்னு சொன்னதால மூட் அவுட் ஆகி அழுதுகிட்டு இருக்காளோ… ஆனா, அழுதுகிட்டு இருந்தாலும் என் போனை எடுக்காம இருந்ததில்லையே… என்ன ஆச்சு இவளுக்கு…?’’ என்று நினைத்தான்.
மீண்டும் ஒரு முறை போன் செய்து பார்த்தான். இப்போதும் சுவிட்ச் ஆப் என்றுதான் வந்தது.
அறையில் முடங்கியிருக்க பிடிக்காமல், காரை எடுத்துக் கொண்டு ஓருமுறை அவளது வீட்டுப்பக்கம் போய் பார்த்துவிட்டு வந்துடலாம். அவள் வெளியே வந்தால், ஆறுதல் சொல்லிவிட்டு வரவும் தோதாக இருக்கும் என்று நினைத்தவாறு, டிரஸ் செய்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் அப்பா அபிஜித் எப்பவோ தூங்கப் போயிருந்தார்.
வெளியே நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அடையாறில், ரேஷ்மாவின் வீடு இருந்த சந்தில் படுத்திருந்த நாய்கள், காரை கண்டதும், கண்டபடி குலைத்தன.
அவற்றின் மீது பட்டுவிடாமல், ஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று, ரேஷ்மாவின் வீட்டுக்கு அருகே நிறுத்தினான். வாசலில் செக்யூரிட்டி யாரும் இருக்கவில்லை. காலையில் கூட இருந்தானே என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தான். ஆள் அரவம் இருப்பதாக தென்படவில்லை. செல்போனை எடுத்து மீண்டும் போகிறதா என்று ரேஷ்மாவின் நம்பரை அடித்து பார்த்தான். அதே சுவிட்ச் ஆப் திரும்பவும் கேட்டது. சலிப்புடன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
கேட் தாண்டி உள்ளே போய்விடலாமா என்று யோசித்தான். ஆனால், அது சரியாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் கேட் வழியாக உள்ளே பார்த்தான். வாசலில் கூர்ந்து கவனித்தபோது, ரேஷ்மாவின் செருப்பு இருந்தது. அது ஊருக்கு வருவதற்கு முன்பு, ஸ்காட்லாந்து போயிருந்தபோது, அவன் வாங்கிக் கொடுத்தது.
‘‘அப்போ… வீட்டுலதான் இருக்கா… ஆனா, ஏன் போன் எடுக்கல…’’ என்று மறுபடியும் யோசித்தான்.
அப்போது அந்த வழியாக ஒரு போலீஸ் ரோந்து வண்டி வருவதை பார்த்து, மீண்டும் தன் காருக்கு அருகே சென்றான்.
ரோந்து போலீசார் சம்பந்தமில்லாத நேரத்தில் காருடன் ஒரு நபர் நிற்பதை பார்த்து, அருகில் வந்து விசாரித்தனர்.
ரேஷ்மாவின் வீட்டுக்கு வந்ததையும், ஆனால், கேட் வெளியே பூட்டியிருப்பதால், காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான்.
பெரிய காரையும், ஆளையும் பார்த்து, சந்தேகம் எதுவும் ஏற்படாததால், அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
வாட்சைப் பார்த்தான். மணி 1.10 என்று காட்டியது. இந்த இரவில் இனி இங்கிருப்பது சரியாக இருக்காது… காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, காரை வீட்டுக்கு செலுத்தினான்.
வீடு வரையில் யோசித்துக் கொண்டே வந்தும் எந்த யோசனையும் புலப்படவில்லை.
அப்படியே தூங்கிப்போனான்.
காலையில் எழும்போது மணி 8.30 ஆகியிருந்தது. செல்போனை எடுத்து, கால் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தான். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை.
அவசர, அவசரமாக குளித்து முடித்துவிட்டு, வெளியே வந்தான். வந்த கையுடனேயே உடையை போட்டுக் கொண்டு, அப்பாவின் அறையை எட்டிப்பார்த்தான். ஆனால், அவர் எப்பவோ கிளம்பி இருந்தார்.
அறையை மூடப்போன நேரத்தில்தான் கட்டில் அருகே அதை கவனித்தான். அது அவனது அப்பா அபிஜித் பர்ஸ். அவசரத்தில் கிளம்பியிருப்பார் போலும். அது கீழே விழுந்திருந்தது. சரி எடுத்து பத்திரமாக வைப்போம் என்று அதை எடுத்தான். ஒரு பகுதியை மட்டும் பிடித்து  தூக்கியதால், அதன் இன்னொரு பகுதி விரிந்து தொங்கியது. அதை ஏதேச்சையாக பார்த்தான். எப்போதும் அப்பாவின் பர்சில் தன்னுடைய சின்ன வயது புகைப்படம் இருக்கும். ஆனால், இப்போது புதுகலரில் வேறு புகைப்படம் இருந்ததால், அதை எடுத்துபார்த்தான்.
பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தான். காரணம், அதில், அவனது அப்பாவுடன், ரேஷ்மாவின் அம்மா இருந்தாள்.
‘‘ஆன்ட்டியுடன் அப்பா எதற்காக போட்டோ… ’’ குழம்ப ஆரம்பித்தான். ஏதேச்சையான புகைப்படமாகவும் தெரியவில்லை. ஒருவர் தன்னுடைய பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்குமானால், அவள் யாராக இருக்கக்கூடும்…? ஒருவேளை அப்போவோட கேர்ள் பிரண்ட்டோ…?
‘‘சரி அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்…’’ என்று பர்சை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ரேஷ்மாவின் வீட்டுக்கு கிளம்பினான்.
ரேஷ்மாவின் வீட்டில் இப்போது செக்யூரிட்டி இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே நேற்று வந்தவன் என்பதால், தைரியமாக கதவை திறந்துவிட்டான் செக்யூரிட்டி.
உள்ளே காரை துடைத்துக் கொண்டிருந்த டிரைவரை தாண்டி சென்று கதவை நிறுத்தினான்.
உள்ளே சோபாவில் அமர்ந்து ஏதோ ஒரு பத்திரிக்கையை படித்துக் கொண்டிருந்தாள் மிருதுளானி.
‘‘ஆன்ட்டி குட்மார்னிங்…’’ என்றபடி உள்ளே நுழைந்தான் நவீன்.
அவனை ஏறெடுத்துப் பார்த்த மிருதுளானி, என்ன என்பதுபோல் பார்த்தாள்.
‘‘ரேஷ்மா இல்லையா ஆன்ட்டி… நேத்துல இருந்து 15 வாட்டி போன் பண்ணிட்டேன்…’’ என்றான்.
‘‘அவ வீட்டில இல்ல…’’ என்றாள்.
‘‘எங்கே போயிருக்கா ஆன்ட்டி?’’ என்று கேட்டான்.
‘‘தட் இஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்’’ என்று முகத்தில் அறைவது போல் கூறினாள் மிருதுளானி.
‘‘ஆன்ட்டி உங்களுக்கு என் மேல கோபம் இருக்குங்கிறது தெரியும்… அதுக்காக என் பிரண்ட விட்டுக் கொடுக்க முடியுமா? அவ எங்கே போயிருங்காங்கன்னு சொல்லுங்க… நான் கிளம்பிடுறேன்… அவ போனும் எடுக்க மாட்டேங்கிறா… இல்லாட்டி உங்கக்கிட்ட ஏன் வந்து கேக்க போறேன்…’’ என்றபடியே, குரல் கேட்டு மேலே இருந்து எட்டிப் பார்த்துவிட மாட்டாளா என்ற யோசனையில் மாடியை பார்த்தான்.
அதைப்பார்த்துவிட்ட மிருதுளானி, ‘‘நவீன் எங்க குடும்ப விஷயத்தில தலையிட வேண்டாம்… நீங்க கௌம்பலாம்…’’ என்றாள்.
இனிமேல் அங்கிருந்தால், கழுத்தை பிடித்து தள்ளிவிடுவாளோ என்று நினைத்து வெளியே வந்தான்.
ரேஷ்மாவின் செருப்பு அதே இடத்தில் கிடந்தது.
ஏதோ தப்பாக இருக்கிறதோ என்று நினைத்துவாறு வெளியே வந்தான். திடீரென எங்கிருந்தோ வந்த புழுதிக்காற்று மண்ணை அள்ளி வீசிவிட்டு சென்றதில், நவீன் கண்ணில் தூசி விழுந்தது. கர்ச்சீப் எடுப்பதற்காக பேன்ட்டின் பின்பாக்கெட்டில் கைவிட்டபோதுதான், அப்பாவின் பர்ஸ் சிக்கியது.
உடனடியாக அவனது அப்பாவுக்கு போன் அடித்தான். அவர் எடுத்து ஹலோ கூறியதும், ‘‘டேட் உங்க பர்ஸ்ச வீட்டுல விட்டுட்டு போய்ட்டீங்க…’’ என்றான்.
‘‘எஸ் டா… அவசரத்தில கிளம்புறப்போ கீழே விழுந்திருக்கும்…’’ என்றார்.
‘‘அப்புறம் டேட்… அதில ஒரு லேடியோட நீங்க இருக்கிற படம் இருந்துச்சே…’’ என்றான்.
‘‘ஓ… அதுவா… அது என் கேர்ள்பெஸ்டி. என் பிஸ்னஸ் பார்ட்னர். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இப்போ பிஸ்னஸ் பண்றோம்… நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ தான் அது. அவ பெயர் மிருதுளானி. அப்புறம் உனக்கு டீடெய்லா சொல்றேன்…’’ என்று இணைப்பை துண்டித்தார்.
தந்தையின் குரலில் எந்த பதற்றமுமில்லாமல் இருந்ததால், அவரிடம் பொய் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டான்.
மீண்டும் விறுவிறுவென ரேஷ்மாவின் வீட்டில் நுழைந்தான்.
மிருதுளானி அங்கேயே அமர்ந்திருந்தாள். அவளது பார்வை முழுவதும் நவீனை நோக்கியே இருந்தது.
‘‘நீங்க என் டேடியோட பிஸ்னஸ் பார்ட்னராமே?’’ என்றான் எடுத்த எடுப்பில்.
‘‘சோ வாட்…’’ என்று கேட்டாள் மிருதுளானி.
‘‘இப்போ எனக்கு கொஞ்சம், கொஞ்சமா விளங்குது… ஆனா முழுசா விளங்கல… நான் திரும்பி வருவேன்’’ என்று கூறி அங்கிருந்து கிளம்பினான்.
(தொடரும் 15)

16
நவீன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அவனது அப்பா அபிஜித் அவசர, அவசரமாக பெட்டியை தயார் செய்துக் கொண்டிருந்தார்.
‘‘டேட் என்ன வேகமாக தயாராகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது?’’ என்றான்.
‘‘ஆமா நவீன்… இன்னும் 3 நாள்ல பார்லிமென்ட் எலக்சன் அனவுன்ஸ் பண்ணப் போறாங்க… அதுக்குள்ள நம்ம புராஜெக்ட் செக்க, சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல இருந்து வாங்கியாகணும்… நான் டெல்லி போறேன்… வர்றதுக்கு எப்படியும் ஒரு வாரம் ஆகும்… டேக் கேர் மை சன்…’’ என்றபடி அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல், வேலையாளிடம் பெட்டியை கொடுத்துவிட்டு காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இன்றா, நேற்றா… அவர் எப்போதுமே இப்படித்தான். அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருப்பார். அதனால் அவரது நடவடிக்கை அவனுக்கு புதிதாக தோன்றவில்லை.
பொத்தென்று சோபாவில் உட்கார்ந்தான். ரேஷ்மாவை எங்கேயாவது ஒளித்து வைத்துவிட்டார்களா? அவளும் எந்த போனும் பண்ணவில்லையே… என்று யோசிக்க ஆரம்பித்தான்.
இந்த 3 நாளில் பலமுறை ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று வந்துவிட்டான் நவீன். ஆனால், மிருதுளானி, ரேஷ்மாவை பற்றி எந்த பதிலும் சொல்வதாக இல்லை.
இதற்கிடையே, அவனது அப்பா சொன்னபடி பொது தேர்தலும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரேஷ்மாவை பார்க்காமல் லண்டனுக்கு கிளம்பிச் செல்வதில்லை என்று முடிவு செய்தான். உடனடியாக தன்னுடைய லண்டன் அலுவலக நிர்வாகிக்கு போன் செய்து, அலுவலகத்தை கவனித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான்.
மீண்டும் ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்றான்.
மாடியில் இருந்து இறங்கி வந்த மிருதுளானி, ‘‘நவீன் இப்படி சும்மா, சும்மா வந்து தொந்தரவு பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம்?’’ என்றாள்.
‘‘ரேஷ்மா மீது அவ்வளவு பிரியம்னு அர்த்தம்… அவ எங்கே ஆன்ட்டி’’ என்றான்.
ஒரு உச்சு கொட்டிய மிருதுளானி, ‘‘நவீன் அவ உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பல… ஏன் அவ உன்னை மறந்திட்டதா என்கிட்ட சத்தியமே பண்ணிட்டா… அப்புறம் அவ யூஎஸ் கிளம்பி போய்ட்டா…’’ என்றாள்.
‘‘என்னது யூஎஸ் போய்ட்டாளா...? அது எப்படி போக முடியும்? பாஸ்போர்ட்தான் என்கிட்ட இருக்கே…?’’ என்றான்.
சடாரென்று பல்லைக்கடித்துக் கொண்டாள் மிருதுளானி.
‘‘அவ உன்கிட்ட குடுத்திருந்தது ஒரிஜினல் பாஸ்போர்ட். அவளை அவசர, அவசரமாக அனுப்புறதுக்காக நான் தான் இல்லீகல் வழியாக வேற பாஸ்போர்ட்ல அனுப்பி வச்சேன்… இனிமே இங்க வராதே… வந்தாலும் உனக்கு இந்த வீட்டுக்கதவு திறக்காது…’’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் தன் அறைக்கு நடந்தாள் மிருதுளானி.
வேறு வழியில்லை… போலீசை நாட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
வராண்டாவில் திடீரென வந்த நினைப்பின் எதிரொலியாக ரேஷ்மாவின் செருப்பை பார்த்தான். இப்போது அது அங்கு இல்லை.
யோசனையுடன் பங்களாவை விட்டு வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டில் இருந்த பாஸ்போர்ட் பேக்கை எடுத்து பார்த்தான். அதில் ரேஷ்மாவின் பாஸ்போர்ட் இருந்தது. அழகாக இருந்த அவளது படத்தில் ஒரு முத்தத்தை வைத்தான்.
‘‘டார்லிங் எங்கேதான் போனே… நிஜமாவே உங்க அம்மா சொல்ற மாதிரி என்னை மறந்துட்டு அமெரிக்காவுக்கு போய்ட்டியா?’’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.
சிபிஐ.யில் எஸ்.பி. ரேங்கில் வேலை பார்க்கும் கல்லூரி நண்பன் பிரசாந்த் நினைவுக்கு வந்தான். அவனது செட்டில் ஐபிஎஸ் பாஸ் செய்தவன். அவனுக்கு போன் அடித்தான்.
சில ரிங்குகளில் எடுக்கப்பட்டது.
‘‘பிரசாந்த் நான் நவீன் பேசுறேன்… ’’ என்றான்.
‘‘எஸ் மச்சி… சொல்லு… என்ன ரொம்ப நாள் கழிச்சு… லண்டன் எல்லாம் எப்படி இருக்கு?’’ என்றான்.
‘‘நான் இப்போ சென்னைக்கு வந்திருக்கேன் பிரசாந்த். ஒரு முக்கியமான விஷயமா உன்கிட்ட பேசணும் அதுக்குத்தான் கூப்பிட்டேன்… நீ ப்ரீயா?’’ என்று கேட்டான்.
‘‘மச்சி உனக்கு இல்லாத டைமா…? சொல்லுடா…’’ என்றான் பிரசாந்த்.
அவனிடம் நடந்ததை கூறினான்.
சில நிமிட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் தொடர்ந்தான்.
‘‘மச்சி… உன் பேமிலி போலவே அவங்களும் பெரிய இடம். உன் டேட் கிட்ட கேட்டுப் பார்த்தியா?’’ என்றான்.
‘‘பிரசாந்த் அவர்கிட்ட பெருசா பேச முடியாது… கேட்டாலும் அவர்கிட்ட இருந்து என்ன தகவல் கிடைத்துவிட போறது?’’ என்றான்.
‘‘நீ சொல்றதும் கரெக்ட்தான். அப்போ ஒண்ணு பண்ணு… நீ போலீஸ்ல முறைப்படி கம்ப்ளைண்ட் குடு… அப்புறம் என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்க்கலாம்… நான் என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு ஹெல்ப் பண்றேன்’’ என்றான்.
‘‘சரி நான் இப்பவே கிளம்புறேன்…’’ என்று கூறி பிரசாந்த் இணைப்பை துண்டித்தான் நவீன்.
பாஸ்போர்ட்டை பிரிண்டரில் வைத்து ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டான். அப்படியே, தன்னுடன் லண்டனில் இருந்து வந்த ரேஷ்மா காணாமல் போனது தொடர்பாக கம்ப்யூட்டரில் ஒரு புகார் கடிதத்தை டைப் செய்து பிரின்ட் எடுத்துக் கொண்டான்.
இரண்டையும் எடுத்துக் கொண்டு எல்2 போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.
இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்தார்.
அவரிடம் சென்று புகார் கடிதத்தை நீட்டினான்.
அதை வாங்கி படித்து பார்த்த அவர், ‘‘ஓ… நீங்கதான் அந்த நவீனா?’’ என்றார் தெரிந்தவர்போல்.
‘‘என்னைப்பத்தி யாராவது சொன்னாங்களா சார்?’’ என்றான்.
‘‘ரேஷ்மா யூஎஸ்.க்கு போய்ட்டாங்கன்னு அவங்க அம்மா, ஆதாரத்தோட எங்கிட்ட காட்டிட்டாங்க… அப்புறம் நீங்க இந்த மாதிரி வந்து தொந்தரவு குடுக்கிறதாவும், எப்படி இருந்தாலும் கம்ப்ளைன்ட் குடுக்க வருவீங்கன்னும் சொன்னாங்க… ஏன் சார்… ஒரு பொண்ணுக்கு பிடிக்கலைன்னா, ஏன் பின்னாடியே போய் தொந்தரவு குடுக்கிறீங்க?’’ என்றார் இன்ஸ்பெக்டர்.
50 வயதையொட்டி இருந்த அந்த இன்ஸ்பெக்டரின் நேம் போர்டை பார்த்தான் நவீன்.
துரைச்சாமி என்று இருந்தது.
‘‘சார்… நீங்க மிருதுளானி அம்மா சொல்றத கேட்டு நடக்கிறீங்கன்னு நினைக்கிறேன்… ரேஷ்மாவோட பாஸ்போர்ட் என்கிட்ட இருக்கு சார்… பாஸ்போர்ட் இல்லாம அவ எப்படி யூஎஸ் போக முடியும்?’’ என்றான் நவீன்.
‘‘மிஸ்டர் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். சும்மா வெறுப்பேத்தாதீங்க… உங்கள மாதிரி பெரிய இடத்து ஆட்கள் ஒரு பாஸ்போர்ட்டா வச்சிருக்கீங்க… போன வருஷம் ஒரு கேஸ்ல இந்த மாதிரிதான் வாங்கி கட்டிக்கிட்டேன்… போங்க சார்… போய் வேல பாருங்க…’’ என்றார் துரைச்சாமி.
‘‘சார் நீங்க நடவடிக்கை எடுக்கலேன்னா நான் கான்சுலேட்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்… நான் ஒரு என்ஆர்ஐ’’ என்றான்.
‘‘நீங்க எங்க வேணா கம்ப்ளைன்ட் பண்ணுங்க… எங்கக்கிட்ட இருக்கிற ஆதாரத்தை காட்டப்போறோம்… என்னம்மோ நாங்க அந்த பொண்ணை மறைச்சு வச்சுக்கிட்டு இருக்கிறற மாதிரி பேசுறீங்க? அப்புறம் என்ஆர்ஐ காணாம போனாத்தான் கான்சுலேட்ல கம்ப்ளைன்ட் பண்ண முடியும்… ரேஷ்மா இன்னும் இந்திய சிட்டிசன்தான் சார் தெரியுமா?’’ என்றார் சற்று கோபத்துடன் துரைச்சாமி.
இனி இவரிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்துக் கொண்ட நவீன், அங்கிருந்து கிளம்பினான். அதற்குள் இன்ஸ்பெக்டர் தனது செல்போனில், ‘‘மேடம்…’’ என்று ஆரம்பித்தார்.
பணம் அதிகளவில் பாய்ந்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான். மிருதுளானி தான் நினைத்ததை விட வேகமாக  சிந்திக்கிறான் என்பதையும் புரிந்துக்கொண்டான் நவீன்.
இனி தன் பாணியில் இறங்கினால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்த நவீன், தனது ராயபுரம் நண்பன் ரவிக்குமாருக்கு போன் செய்தான்.
(தொடரும் 16)

17
ராயபுரம் ரவி போனை எடுத்ததும் தன் திட்டத்தை கூறினான் நவீன்.
அவனிடம் பேசி முடிக்கவும், பிரசாந்திடம் இருந்து போன் வந்தது.
‘‘ஹலோ பிரசாந்த்… சொல்லு…’’ என்றான்.
‘‘நவீன் நீ சொன்ன தேதியில இருந்து இன்னைக்கு வரைக்கும் ஏர்போர்ட்ல என் ஆள் மூலமா செக் பண்ணிட்டேன்… ரேஷ்மா என்ற பெயர்ல யாருமே யூ.எஸ்.க்கு போகல… அப்புறம் வேற பெயர்ல கூட ரேஷ்மா போகல… ஏன்னா… போட்டோக்களையும் செக் பண்ணிட்டேன்…’’ என்றான்.
‘‘அப்போ அவங்க… கட்டாயம் ரேஷ்மாவ… இங்கத்தான் எங்கேயாவது லாக் பண்ணியிருக்கணும்… அப்படித்தானே…?’’ என்றான் நவீன்.
‘‘மே பீ நீ சொல்ற மாதிரி இருக்கலாம்… ஆனா… இன்னொரு விஷயமும் இருக்கு…’’ என்று இழுத்தான் பிரசாந்த்.
‘‘என்ன இன்னொரு விஷயம்?’’
‘‘இல்லே… நவீன் சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘பூடகமா பேசாதே பிரசாந்த்… நானே நொந்துப்போய் இருக்கேன்… என்னன்னு டைரக்ட்டா சொல்லு…’’ என்றான்.
‘‘அதுதான் என்னோட பயமே நவீன்… நீயே சோகத்தில இருக்க… அதை எப்படி சொல்றதுன்னுதான் தயக்கமா இருக்கு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லு…’’
‘‘மனச திடப்படுத்திக்கோ நவீன்… அவங்க ஏன் ரேஷ்மாவ கொன்னுருக்க கூடாது?’’ என்றான் பிரசாந்த்.
‘‘பிரசாந்த்…’’ கத்தியே விட்டான் நவீன்.
‘‘இன்னொருவாட்டி அப்படி பேசாதே… என் ரேஷ்மா உயிரோடத்தான் இருப்பா… அவங்க அம்மாவே… எப்படி அவளை கொல்லுவா…?’’ என்றான்.
‘‘உன் லாஜிக் கரெக்ட் நவீன். ஆனா, உலகத்தில எது வேணாலும் நடக்கலாம்... அந்தம்மா தன்னோட பணப்பலத்தோட அரசியல் பலத்தையும் பயன்படுத்தி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அந்த இன்ஸ்பெக்டர் மடங்க மாட்டேங்கிறான். எப்ஐஆர் கூட பைல் பண்ண மாட்டேன்னு அடம்பிடிக்கிறான்’’ என்றான் பிரசாந்த்.
‘‘அதத்தான் நான் ஸ்டேஷன்லேயே பார்த்தேனே…’’ என்றான் நவீன்.
‘‘ஆனா… ஒண்ணு நவீன். இப்போ உள்ள நிலையில சென்டர்ல ரூலிங் பார்ட்டி வர்றதுக்கு வாய்ப்பில்லை. அப்போசிசன் தான் வரும்னு சூயூரா பிரிடிக்ட் பண்ணியிருக்காங்க… இன்னும் கொஞ்சம் நாள் தானே அதுக்குள்ள, ஆட்சி மாறிடிச்சுன்னா… அவங்களை ஈசியா நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்… நாம அப்போசிசன் பார்ட்டிய அவங்களுக்கு எதிரா திருப்பணும்னா… ரேஷ்மாவோட அம்மாக்கிட்ட லிங்க்ல இருக்கிற பெரிய கைகளுக்கு எதிரான ஆதாரத்தை தூக்கிப்போடணும்… அப்போதான் அவங்க நமக்கு சாதகமாக செயல்படுவாங்க…’’ என்றான் பிரசாந்த்.
‘‘அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லு…’’
‘‘சிம்பிள்… உங்கப்பாவும், ரேஷ்மாவோட அம்மாவும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்னு சொன்னியே… அதனால உங்கப்பாக்கிட்ட, அரசியல்வாதிகளுக்கு சம்திங் குடுத்த டீடெய்ல்ஸ் நிச்சயம் இருக்கும்… அதை ஆதாரத்தோட கண்டுபிடி… அதை வச்சி நாம யோசிக்கலாம்…’’ என்றான் பிரசாந்த்.
‘‘சரி பிரசாந்த்… அப்பா வேற ஊர்ல இல்ல… கட்டாயம் நான் வீட்டிலேயேயும், ஆபிஸ்லேயும் தேடிப்பார்க்கிறேன்…’’
‘‘குட் நவீன்… நான் சொன்னதையே நினைச்சிட்டு இருக்காதே… அவங்க ஏன் யூ.எஸ்.ன்னு நம்மக்கிட்ட பொய் சொல்லிட்டு வேற ஊருக்கு ரேஷ்மாவை பேக் பண்ணியிருக்கக்கூடாது? அதையும் நான் செக் பண்றேன்… அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்… ஏதாவது குளு கிடைச்சதுன்னா நான் கால் பண்றேன்… ஓகேயா நவீன்...? நான் வச்சுடுவா…’’ என்றான் பிரசாந்த்.
‘‘ஓகே… பைடா…’’ என்றான் நவீன்.
உடனடியாக அப்பாவின் அறைக்கு சென்று சல்லடைப்போட்டு தேடினான். ஏகப்பட்ட பைல்கள் இருந்தாலும் எதுவும் சிக்கவில்லை. அப்படியே டிரஸ் செய்துக் கொண்டு அப்பாவின் ஆபிசுக்கு சென்று, அவரது அறை முழுக்க தேடினான். சொல்லிக் கொள்ளும்படியாக எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
நொந்துபோய் மீண்டும் காரில் வந்து அமர்ந்தான். பின், மனம் போன போக்கில் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
கார் மகாலிபுரம் செல்லும் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.
வழியில் டோல்கேட்டில் காரை நிறுத்தினான்.
பாஸ்ட்டேக்கை செக் செய்த டோல்கேட்காரன், ‘‘சார் உங்க டேக் லாக் பண்ணியிருக்கு… நீங்க பே பண்ணணும்’’ என்றான்.
பர்சை எடுத்தான் 2,000 ரூபாயாக இருந்தது. அதில் இருந்து ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
‘‘சார்… 45 ரூபா தான். என்கிட்ட சில்லரை இல்ல… நான் கவுன்டர்ல போய் வாங்கிட்டு வர்றதுக்குள்ள வரிசையா கார் நிற்கும்… சில்லரை இருந்தா குடுங்க… இல்லாட்டி காரை அப்படியே லெப்ட்ல ஓரங்கட்டி ஒதுங்குங்க…’’ என்றான் டோல்கேட் பையன்.
‘‘டோல்கேட் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பதற்காகவே காரின் டேஷ்போர்டில் எப்போதும் ரூ.10, 20 கட்டுக்களை அப்பா போட்டு வைத்திருப்பது வழக்கம். அந்த ஞாபகம் வரவே, அதை திறந்து பார்த்தான். அதில் இருந்த 10 ரூபாய் கட்டில் இருந்து ஐந்து நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தான்.
புது நோட்டுக்களை சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டான் டோல்கேட் பையன்.
அவன் கொடுத்த ரசீதையும். 5 ரூபாய் நாணயத்தையும்  டேஷ்போர்டில் போடுவதற்காக கையை உள்ளே செலுத்தினான். அங்கு ஏதோ இருப்பது போல் இருந்தது. எடுத்துப்பார்த்தான் சிறிய டைரி.
அதற்குள், பின்னால் இருந்த கார்காரன், ஹார்ன் அடிக்கவே, டோல்கேட்டை தாண்டி ஓரங்கட்டி காரை நிறுத்தினான்.
அந்த டைரியை எடுத்துப் பார்த்தான். அது அப்பாவின் தனிப்பட்ட டைரி.
முக்கிய குறிப்புகள் எல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது.
கான்ட்ராக்ட்டுக்காக சிவத்திடம் 20 சதவீதம் கமிஷன் மிருதுளானி கொடுத்துள்ளாள். முதல்கட்டமாக 5 கோடி நேரடியாக உதவியாளரிடம் கொடுத்ததாக கூறினாள். ரோடு கான்ட்ராக்ட்டுக்கு மொத்தமாக கொடுக்க சொல்லியுள்ளார் என்று அனைத்து விவரங்களையும், அபிஜித்தே கைப்பட எழுதியிருந்தார்.
துள்ளிக்குதித்தான் நவீன்.
இதுபோதும் அந்த மிருதுளானியை மடக்க என்று நினைத்துக் கொண்டு, பிரசாந்த்துக்கு போன் போட்டான்.
(தொடரும் 17)

18
டைரியில் இருந்த தகவல்களை பார்த்தவுடன், பிரசாந்துக்கு போன் செய்தான் நவீன்.
நீண்ட ரிங் போனவுடன் தான் எடுத்தான்.
‘‘யெஸ் நவீன் சொல்லு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘பிரசாந்த் நீ கேட்டியே ஆதாரம்… பக்காவா கிடைச்சிருக்கு… எந்த தேதியில மினிஸ்டருக்கு எவ்வளவு குடுத்திருக்காங்கிற டீடெய்ல் இப்போ என் கையில இருக்கு…’’ என்றான் நவீன்.
‘‘வாவ் சூப்பர்டா… அதை அப்படியே ரொம்ப பத்திரமான இடத்தில வச்சிக்கோ…’’ என்றான்.
‘‘அப்புறம் பிரசாந்த் இந்த விஷயத்தில என் டேட்டும் சம்பந்தப்பட்டிருக்கிறார்…’’ என்றான் நவீன்.
‘‘அத பார்த்துக்கலாம். அது ஒண்ணும் பிரச்னை ஏற்படுத்தாது. அப்புறம் நவீன்… உன்கிட்ட இன்னொரு விஷயத்தையும் அப்பவே சொல்லணும்னு நினைச்சேன். மறந்திட்டேன். உன் அப்பாவும், மிருதுளானியும் வெறும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்தானா இல்லாட்டி, மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களா?’’
‘‘எனக்கும் அந்த டவுட் இருக்கு பிரசாந்த். அதனாலதான் மிருதுளானியோட அம்மா, எங்க மேரேஜை தடுத்தாங்களோன்னு ஒரு டவுட் இருக்கு. ஆனா, என் டேட்கிட்ட மிருதுளானிய பத்தி கேட்டேன். ஆனா, அவர் ஒண்ணும் சொல்லல… அப்புறம் டீடெய்லா பேசுறேன்னு சொன்னார்… ஆனா, என்கிட்ட இன்னும் இதுவரை அவர் பேசல…’’
‘‘உங்க அப்பா உன்கிட்ட அதப்பத்தி பேச மாட்டார்னு நினைக்கிறேன் நவீன். என் டிபார்ட்மென்ட் மூலமா என்கொயரி பண்ணேன். நீ நினைச்சது கரெக்ட் நவீன்…’’ என்றான் பிரசாந்த்.
‘‘என்ன சொல்றே பிரசாந்த்… அவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்றியா?’’
‘‘எஸ் நவீன். உங்க அப்பா வீட்டுக்கே ரிஜிஸ்தரார வரவைச்சு மேரேஜ் பண்ணியிருக்கார். இந்த ரிலேசன்சீப்னால ரேஷ்மாவ உனக்கு கட்டி வைக்க மிருதுளானி மறுத்திருக்கலாம்றது ஒரு காரணமா இருக்கலாம். ஆனா, அதுவே மெயின் ரீசனா எனக்கு படல… வேற ஏதோ பின்னால ஒரு காரணம் இருக்கு… நாளைக்கு எலக்‌ஷன் ரிசல்ட் டேட்… அதனால கொஞ்சம் வொர்க் பிரஷர்… நாம ரெண்டு நாள் கழிச்சு ப்ரீயா பேசலாமே நவீன்… டெபனெட்லி ஐயாம் ஹெல்ப் யூ டியர்… டோண்ட் ஒர்ரி…’’ என்றான் பிரசாந்த்.
‘‘ஓகே பிரசாந்த்…’’ என்று கூறி இணைப்பை துண்டித்தான்.
போனையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, ரேஷ்மாவின் நினைப்பு வர, அவளது புகைப்படங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
‘‘டார்லிங் நம்ம ரிலேசன் தப்பா…? அதுக்காகத்தான் உன்னை காணாம போக செய்துட்டாங்களா…? நீ உயிரோடத்தான் இருக்கியா… இல்லாட்டி…’’ நினைக்கவே துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணில் இருந்து தண்ணீர் தானாக வடிந்து கீழே விழுந்தது. அவனது கண்ணீர் செல்போன் திரையில் இருந்த ரேஷ்மாவின் மீது பட்டது.
அந்த நேரத்தில் ரேஷ்மாவின் உருவம் மறைந்து, ரவி காலிங் என்று வந்தது.
எடுத்து பேசினான்.
‘‘சொல்லு ரவி, ஏதாவது தகவல்?’’ என்றான்.
‘‘நவீன்… என் ஆளை அந்த மிருளானி வீட்டுக்கு போட்டிருந்தேன். அந்தம்மா தெனம் ஒவ்வொரு ஆள வேலையை விட்டு தூக்கிட்டு இருக்கு… இன்னைக்கு கார் டிரைவ வேலையவிட்டு தூக்கியிருக்காங்க… அவன் சிலம்பியிருக்கான். அதனால கொஞ்சம் பணத்தை குடுத்து செட்டில் பண்ணியிருக்காங்க… அவன் ரொம்ப நாளா அவங்கக் கூட இருந்தவனாம். அவனை அமுக்கினா, ஏதாவது விஷயம் கிடைக்கும்னு சொல்றான் நம்ம ஆளு. என்ன பண்ணலாம்…?’’ என்றான் ரவி.
‘‘சூப்பர் ரவி…’’ என்றான் நவீன்.
‘‘அந்த டிரைவர் பயலும் வண்ணாரப்பேட்டைக்காரன்தான். அதனால அவனை நம்ம ஆட்கள் ஈசியா அமுக்கிடுவாங்க… நீ சொன்னா… இன்னைக்கே தூக்கிடுவேன்…’’ என்றான் ரவி.
‘‘நோ… நோ… ரவி. அப்படியெல்லாம் அவசரப்படாதே… அவனோட குடும்பம்… அவன் எங்கெங்கே போறான்… ஹேபிட்ஸ்… பிரண்ட்ஸ் சர்க்கிள் இப்படி எல்லா டீடெய்லும் விசாரி… அவனை இப்போதைக்கு எதுவும் பண்ணாதே… நான் சொல்றேன்… அப்போ பார்த்துக்கலாம்…’’ என்றான் நவீன்.
‘‘சரிப்பா… நீ என்னப்பா எங்கள மாதிரி ஸ்கெட்ச் போடுற வேலை எல்லாம் இறங்கிட்டே… நீ லண்டன் போகலியா?’’ என்றான்.
‘‘ரவி… இது என் வாழ்க்கை மேட்டர். இத முடிச்சிட்டுத்தான் கிளம்புறதா உத்தேசம்… நீ என் ஸ்கூல் பிரண்ட். உன்னைப்பத்தி எனக்கு நல்லா தெரியுங்கிறதாலத்தான் உன்கிட்ட இந்த மேட்டர குடுத்தேன்…’’ என்றான் நவீன்.
‘‘நீ கவலைப்படாதே மச்சி… பிரண்ட்ஷீப்னா இந்த ரவி உயிரையே குடுப்பான். என் நண்பனுக்கு ஒண்ணுன்னா எனக்கும்தானே அது. அதுவும் நீ, சின்னப்புள்ளையில இருந்தே எனக்கு பணம் எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணவன். இப்பவும் சொல்ல, சொல்ல விடாம என் தம்பிய படிக்க வைக்கிறே… உனக்கு பண்ணாம வேறு யாருக்கு பண்ணப்போறேன் மச்சி… எப்போ வேணம்னாலும் கூப்பிடு… நான் இருக்கேன். அந்த டிரைவர் பயல நான் வாட்ச் பண்ணச் சொல்றேன்… வேற ஏதாவதுன்னா உன்னை கூப்பிடுறேன்… சரியா…?’’ என்றான் ரவி.
‘‘சரி ரவி… உன் அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்புறேன்’’ என்றான் நவீன்.
‘‘நவீனு… இந்த மாதிரி எல்லாம் என்னை அசிங்கப்படுத்தாதேப்பா… உனக்கு நான் ரொம்ப கடன் பட்டிருக்கேன்… பணம் எல்லாம் அனுப்பாதே… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… விடுப்பா…’’ என்றான்.
ரவியின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், மீண்டும் திரையில் இதழ்களை குவித்து முத்தம் கொடுக்க வந்த ரேஷ்மாவின் புகைப்படம் ஒளிர்ந்தது.
‘‘விடமாட்டேன் டார்லிங்… உன்னை கண்டுபிடிக்காம… விடமாட்டேன்…’’ என்று மனதில் கருவிக்கொண்டான் நவீன்.
(தொடரும் 18)

19
வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் நவீன். ஞாயிற்றுக்கிழமை என்பதால், வேலைக்காரர்கள் எல்லோருக்கும் லீவு கொடுத்திருந்தான்.
சன் டிவியில் மகராசி ஓடிக்கொண்டிருந்தது. பொழுது போகாததால், அதை பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்தான் என்பதைவிட, கண்கள் மட்டும் டிவியை பார்த்துக் கொண்டிருந்தன. மனக்கண் ரேஷ்மாவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
‘‘இந்த ரேஷ்மா மட்டும் இப்போ இருந்திருந்தா… எவ்வளவு நல்லா இருந்திருக்கும்… இந்த சண்டே லண்டன் என்ன அருமையா கழிஞ்சிருக்கும்…’’ என்று நவீனின் மனதில் எண்ணங்கள் சுழன்றோடின.
அப்போது, வாசலில் யாரோ வருவது போன்று இருந்தது. திரும்பி பார்த்தான். அதிர்ச்சியில் எழுந்தே நின்றுவிட்டான்.
ரேஷ்மாதான் வந்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னுடைய காலனியை கழற்றிக் கொண்டிருக்கும்போதே ஓடிச் சென்று அவளை தூக்கினான்.
‘‘பேபி… பேபி… என்ன இது…’’ என்று வலியை பொறுக்க முடியாமல் கத்தினாள் ரேஷ்மா.
அவளை கீழே இறக்கியவன், அப்படியே இரு கைகளாலும் அவளது கழுத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, நெற்றி, கன்னம், மூக்கு, கண்கள் என்ற மாறி, மாறி முத்தமிட்டான்.
அவனிடம் சிக்கித்திணறினாள் ரேஷ்மா.
ஓரளவுக்கு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், அவளை விட்டான் நவீன்.
‘‘பேபி… என்ன இது… இப்படி முகம் முழுக்க எச்சில் பண்ணிட்டே…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘நோ… டியர்… விட்டா… உன்னை இப்படியே கடிச்சு திண்ணு இருப்பேன்… எவ்வளவு நாள்ள்ள்… எங்கே போனே… என்ன ஆச்சு… ஏன் போன் எடுக்கல…?’’ என்றான்.
‘‘இரு… இருப்பா… இப்படி மொத்தமா கேட்டா… நான் எதுக்குன்னு பதில் சொல்வேன்…’’ என்றாள்.
இன்னமும் அவள் மீது இருந்த அன்பு குறையாமல் அப்படியே தூக்கிக் கொண்டு சோபாவுக்கு போனான். அவளை அப்படியே பொத்தென்று போட்டுவிட்டு, அவள் மீது பாய்ந்தான்.
‘‘சொல்லு டியர்… ஒவ்வொன்னா… சொல்லு… ஆனா… இனிமே நீ எங்கேயும் போகாதே… நாம உடனடியா லண்டன் கிளம்பலாம்… அங்கே போய் மேரேஜ் பண்ணிக்கலாம்… இந்த ஊரும் வேண்டாம்… இந்த உறவுகளும் வேண்டாம்… எனக்கு நீ, உனக்கு நான்… ஓகே…யா?’’ என்றான்.
‘‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பேபி… என்ன இருந்தாலும் இது நம்ம தாய்நாடு… என் அம்மா சரியில்லேன்றதுக்காக, நாட்டையே நம்ம கோவிச்சுக்கலாமா?’’ என்றாள்.
‘‘சரி என்ன நடந்தது சொல்லு…?’’ என்றான்.
‘‘அது ஒரு பெரிய கதைப்பா…’’ என்றபடி அவனது தலைமுடியை வருடினாள்.
‘‘இப்படி முடிய வருடாதே… எனக்கு மூடாகிடும் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… இருந்தாலும் இந்த நேரத்தில பரவாயில்லை…’’ என்று அவளது இதழ்களை சுவைத்தான்.
தன் முகத்தில் ஒட்டியிருந்த அவனது தலையை அப்படியே ஒற்றை விரலால் மேலே தூக்கியவள், ‘‘என்ன ஐயா… இன்னைக்கு செம மூடுல இருக்கிற  மாதிரி தெரியுது?’’
‘‘பின்னே இருக்காதா ஊருக்குப்போன பொண்டாட்டி திரும்பி வந்த மாதிரி… என் டார்லிங் பெரிய இடைவெளிக்கு பின்னாடி திரும்பி வந்திருக்கே… உன்னை சும்மா விட்டுடுவேனா… டார்லிங்…’’ என்றான்.
‘‘என் மேல அவ்வளவு பிரியமா பேபி…?’’ என்றாள்.
‘‘ஏண்டீ… இப்படி ஒரு கேள்விய கேட்கிற… இது பிரியமா… அன்பா… காதலான்னு தெரியாது… ஆனா, நீ பக்கத்தில இருந்தா… முதன் முதலா ஒரு பொண்ணு மேல லவ் வர்றப்போ, மனசு பூரா ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே… அது மாதிரியான சந்தோஷம் மனசு பூரா நெறைஞ்சுடுது… இதுக்குப்பேர்தான் காதல்னா… அதை சந்தோஷமா சொல்வேன்… எனக்கு நீ வேணும் டார்லிங்… எப்பவும், வாழ்நாள் முழுக்கவும் வேணும்…’’ என்றான்.
‘‘உனக்குத்தாண்டா… நான்… இத அந்த ஆண்டவனே வந்தாலும் மாத்த முடியாது…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘அதுக்கு நான் அனுமதிக்கணுமே…’’ என்று அங்கு வேறொரு ஆணின் குரல் கேட்டது.
திடுக்கிட்டு ரேஷ்மாவும், நவீனும் எழுந்து உட்கார்ந்தனர்.
வாசலில் பீட்டர் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். அருகில் மிருதுளானி, எள்ளும், கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.
இருவரும் சேர்ந்து உள்ளே வந்தனர்.
நவீன் ரேஷ்மாவின் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.
‘‘டேய் அவ கையை விடுடா…’’ என்றாள் மிருதுளானி.
ஆனால், நவீன் ரேஷ்மாவின் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான்.
‘‘டேய் அவ கையை விடுன்னு சொன்னேன்…’’ என்று மீண்டும் மிருதுளானி கூறினாள்.
நவீன் அதை கேட்பதாக இல்லை.
‘‘ரேஷ்மா நீ இப்போ என் கூட வரல… நவீனை சுட்டுக் கொல்றதுக்கு கூட தயங்க மாட்டோம்… வா… இங்கே…’’ என்றாள் மிருதுளானி.
ரேஷ்மாவிடம் பதற்றம் அதிகரித்தது.
‘‘பேபி… என் கையை விடு… அவங்க சொல்றத செஞ்சிடுவாங்க… நான் போறேன்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘நோ டியர்… என்ன ஆனாலும் இன்னைக்கு ஒரு கை பார்த்துடுவோம்… நீ இங்க இருந்து போகக்கூடாது…’’ என்றான்.
‘‘டேய் ஹீரோ… நான் 3 சொல்வேணாம்… அதுக்குள்ள நீ ரேஷ்மா கைய விட்டுடுவியாம்… இல்லாட்டி, முதல் குண்டு…’’ என்றான் பீட்டர்.
‘‘பரவாயில்லை… என் உயிரே போனாக்கூட ரேஷ்மாவ விடமாட்டேன்…’’ என்றான் நவீன்.
‘‘அவசரப்படுறியே ஹீரோ… உன்னை சுடப்போறேன்னு நான் சொல்லலியே… நீ கையை விடலேன்னா ரேஷ்மா கால்ல முதல் குண்டு பாயும்… அப்படியும் விடலேன்னா கையில… அப்புறம் நெஞ்சுல…’’ என்றான்.
இப்போது நவீன் பதற்றமானான். ஏனெனில், பீட்டரின் துப்பாக்கி ரேஷ்மாவை குறிபார்த்துக் கொண்டிருந்தது.
‘‘பேபி… விடு நான் போறேன்…’’ என்று அவனிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டாள் ரேஷ்மா.
அந்த சின்ன ஆசுவாச நேரத்தில், சடாரென்று படுத்துக் கொண்டு பீட்டரின் காலை தட்டிவிட முயன்றான் நவீன்.
அதை எதிர்பார்த்திருந்தானோ அல்லது சுதாரிப்பாக இருந்தானோ, பீட்டர் தனது துப்பாக்கியால் சுட்டான்.
‘‘டமால்…’’ என்ற சப்தத்துடன் குண்டு பாய்ந்தது.
(தொடரும் 19)

20
துப்பாக்கியில் இருந்து குண்டு டமால் என்ற சப்தத்துடன் பாய்ந்ததும், நவீன் துள்ளிக்குதித்தான். எழுந்து பார்த்தபோது, படுக்கையில் இருந்து கீழே விழுந்திருந்தான்.
(யோவ் ஹீரோ… இப்படி கனவு கண்டுக்கிட்டு இருந்தா, பமீலா, லாவண்யா, இலாஹி, செங்கை மனோ, சரணி ஆனந்த் கம்பெடுத்து அடிக்க வரமாட்டாங்களா… இந்த ரணகளத்திலும் உனக்கு லவ் சீன் தேவைப்படுதான்னு கேட்க மாட்டாங்க… சீக்கிரம் கதைக்குள்ள போய்யா… உன்னால… நானும் வாங்கிக்கட்டிக்கிற முடியாது…)
சே… கனவா என்று சலித்துக் கொண்டான் நவீன். காலண்டரை பார்த்தான் திங்கட்கிழமை என்று இருந்தது.
‘‘நைட் படம் ஏதோ ஒரு டிவி படம் பார்த்துவிட்டு தூங்கியதில், ரேஷ்மாவின் நினைப்பிலேயே அப்படியே தூங்கியிருப்பேன்போலும்…’’ என்று நினைத்துக் கொண்டான்.
இந்த மூன்று நாளில் நடந்த விஷயங்களை ஒரு முறை அசைப்போட்டு பார்த்தான். பிரசாந்த் கொடுத்த ஆலோசனையின்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர போலீசாருக்கு உத்தரவிடும்படி ஒரு மனுவை தாக்கல் செய்தாகிவிட்டது. அது இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. அதனால் அவசர, அவசரமாக எழுந்து தயாரானான்.
அவன் டிரஸ் போட்டுக் கொண்டிருந்தபோது, டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. பிரசாந்த் சொன்னபடியே எதிர்க்கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். அவர்கள் அன்று மாலை பதவியேற்பதாக செய்தி வாசிப்பாளர் பொற்கொடி பொதிகை செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு கிளம்பினான் நவீன்.
கோர்ட்டில் அவர்கள் எதிர்பார்த்தபடியே, ரேஷ்மா காணாமல் போனது குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுவே முதல் வெற்றியாக தெரிந்தது நவீனுக்கு.
ஆனால், விசாரணைக்காக வந்திருந்த இன்ஸ்பெக்டர், நவீனை முறைத்தார்.
அதைப்பற்றி கவலைப்படாமல், காருக்கு வந்து பிரசாந்துக்கு போன் செய்து தகவலை தெரிவித்தான்.
‘‘அடுத்த என்ன பண்ணலாம் பிரசாந்த்?’’ கேட்டான் நவீன்.
‘‘அந்த டிரைவர் வெற்றிய பத்தி சொன்னீயே… அவனைப்பத்தி ஏதாவது இன்ஸ்டிரஸ்ட் மேட்டர் நவீன்?’’
‘‘அவனுக்கு ஒய்ப் ரெண்டு பெண் குழந்தைங்க… பிரைமரிதான் படிக்கிறாங்க… அவன் சரியான கல்லுளி மங்கன். ஆனா, ரொம்ப தண்ணிய போட்டா மட்டும் ஏதாவது உளறிட்டு இருப்பானாம். அவனை கண்ட்ரோல் பண்ணவே முடியாதாம்… அதனால எப்பவுமே சரக்க வாங்கிட்டு வீ்ட்டுக்கு போய்டுவானாம்… மத்தபடி அவனைப்பத்தி சொல்றதுக்கு வேற ஒண்ணும் இல்ல பிரசாந்த்…’’
‘‘அங்கதான் எல்லா விஷயமும் இருக்கு நவீன்… அவனை இன்னைக்கு நாம மடக்கிறோம்… அப்புறம், அவங்க தெளிவா பிளான் பண்ணியிருக்கிற மாதிரி தெரியுது… ரேஷ்மாவோட நீ சென்னைக்கு வந்த அன்னைக்கு நைட்தான் அவ காணாம போனதா நீ சொன்னே… கரெக்ட்?’’ என்றான் பிரசாந்த்.
‘‘எஸ்… பிரசாந்த்…’’
‘‘அதுக்கு அப்புறம் 24 அவர்ஸ் கழிச்சு… யூஎஸ்.ல இருந்து, அவங்க அம்மா மிருதுளானிக்கு ரேஷ்மா நம்பர்ல இருந்து கால் வந்திருக்கு… அதே மாதிரி தொடர்ந்து மூணு நாளைக்கு அங்கிருந்து மிருதுளானிக்கு கால் வந்திருக்கு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘நீ என்ன சொல்ல வர்றே பிரசாந்த்… ரேஷ்மா உண்மையிலேயே யூஎஸ்.க்கு போய்ட்டதா சொல்றியா?’’
‘‘ஒரேயடியா மறுக்க முடியாது நவீன். ஆனா, ஏன் அவங்க பிளான் பண்ணி…ரேஷ்மாவோட போனை அங்க அனுப்பி யார்க்கிட்டேயாவது பேச வச்சிருக்கக்கூடாது?’’ என்றான் பிரசாந்த்.
‘‘குளப்புறே… பிரசாந்த்…’’ என்றான் நவீன்.
‘‘நவீன்… ரேஷ்மாவ காணோம்னு நீ சொல்லியிருக்க… அவங்க அம்மா, அவ யூஎஸ் போய்ட்டதா சொல்லியிருக்காங்க… அதுவும் போலி பாஸ்போர்ட்ல… ஆனா, நான் கன்பார்மா செக் பண்ணிட்டேன்… யூஎஸ்.க்கு ரேஷ்மா போகல… ஆனா… அவ செல்லுல இருந்து யூஎஸ் கால் வருது… அப்படின்னா, அவ செல்போன மட்டும் ஏன் யூஎஸ்.க்கு அனுப்பி இருக்கக்கூடாது?’’ என்றான் பிரசாந்த்.
‘‘அப்படின்னா ரேஷ்மா இந்தியாவிலதான் இருக்கான்னு சொல்லுறியா பிரசாந்த்…?’’
‘‘100 பெர்சன்ட் யூ ஆர் ரைட்… நான் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து எல்லா பிளைட் பேசன்ஜர்ஸ் லிஸ்ட்டையும் செக் பண்ண வச்சிட்டேன்… ரேஷ்மா வேற எந்த நாட்டுக்கு போகல… அப்படின்னா அவ இங்கேதானே இருக்கான்னு அர்த்தம்…’’
‘‘அப்போ அவளை எப்படி கண்டுபிடிக்கலாம் பிரசாந்த்…’’ என்றான் நவீன்.
‘‘அதுக்குத்தான் அந்த டிரைவரை இன்னைக்கு மடக்கிறோம்… அதுக்கான ஏற்பாட நீ பண்ணு… அவன் எந்த பார்ல சரக்கு வாங்குவான்னு சொன்னே?’’ கேட்டான் பிரசாந்த்.
‘‘வண்ணாரப்பேட்டை பிரியா ஒயின்ஸ்…’’ என்றான் நவீன்.
‘‘ஓகே… நைட் நான் அங்க வந்துடுறேன்… அவனை பார்லேயே மடக்க அவனோட திக்கெஸ்ட் பிரண்ட ஏற்பாடு பண்ணு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘அத நான் பார்த்துக்கிறேன்… நீ வா…’’ என்றான் நவீன்.
போனை அணைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு கிளம்ப காரை நோக்கி விரைந்தான்.
அந்த வழியாய வந்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர். ‘‘தம்பீ… பெரிய இடத்து புள்ளையா இருக்கீங்க… ஏன் இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் தலையிடுறீங்க… பேசாம உங்க வேலைய மட்டும் பாக்க வேண்டியதுதானே…’’ என்றார்.
‘‘உங்க பொண்டாட்டி காணாம போனா… போகட்டும்னு விட்டுடுவீங்களா சார்?’’ என்றான் நவீன்.
பதில் சொல்ல முடியாத அவர், மீண்டும் முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.
காருக்கு சென்றபடியே, ரவிக்கு போனை செய்து, பிரசாந்த் கூறியபடி, டிரைவரின் நண்பனை ஏற்பாடு செய்யும்படி கூறினான் நவீன்.
இரவு 9 மணி.
வண்ணாரப்பேட்டையிலேயே  மிகப்பெரியதான பிரபா ஒயின்ஸ் பாரில் பெரிய அளவில் கூட்டம் இல்லாவிட்டாலும், இங்கும், அங்கும் டேபிளில் கச்சேரி ஓடிக்கொண்டிருந்தது.
நான்கு பேர் அமரும் டேபிளில் பிரசாந்த், நவீன் உட்கார்ந்திருந்தனர்.
சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது.
திடீரென ரவி இணைப்பில் வந்தான். ‘‘நவீன் அவன் வர்றான்…’’ என்றான்.
காதில் மாட்டியிருந்த புளூடூத்தில், ‘‘ஓகே… அவன் பிரண்ட்டை அனுப்பு…’’ என்றான் நவீன்.
கையில், 1849 வாங்கிக் கொண்டு சங்கர் கடையில் இருந்து வெளியே வந்தான். எதிரே வந்த அவனது நண்பன் டிரைவர் வெற்றியின் தெரியாமல் மோதுவதுபோல் மோதினான்.
‘‘என்ன மாப்பிள ஆள் வர்றது கூட தெரியாம… அவ்வளவு வேகமாக போய்ட்டு இருக்கே…’’ என்றான் வெற்றி.
‘‘ஓ… வெற்றியா… வா… வெற்றி… இன்னைக்கு வெளிநாட்டில இருந்து என் பிரண்ட்ஸ் வந்திருக்கான்னு… எல்லாம் அவங்க செலவு… ஒஸ்தி சரகக்கில்ல… அதுதான் தலைக்கால் புரியல… அது சரி நீ என்னா…?’’ என்றான்.
‘‘உன் அளவுக்கு எனக்கு யாரும் பிரண்ட்ஸ் இல்லேப்பா… நமக்கு வழக்கமானதுதான்…’’ என்றான் வெற்றி.
‘‘மாப்பிள… நீ என் திக் பிரண்ட்… உன்னை விட்டுடுவேனா… வா உன்னையும் இன்ட்ரடியூஸ் பண்றேன்…’’ என்றான்.
‘‘அடப்போப்பா… அவங்க உன் பிரண்ட்ஸ்…’’ என்றான் சற்று சங்கோஜத்துடன் வெற்றி.
‘‘என் பிரண்ட்ஸ்… உன் பிரண்ட்ஸ்… உன் பிரண்ட்ஸ்… என் பிரண்ட்ஸ்… இப்போ வர்றியா… இல்லையா… அப்புறம் ஒஸ்தி சரக்கு கிடைக்காது… முடிச்சிட்டு பொண்ணுச்சாமிக்கு வேற போறோம்… ஒரு பிடி பிடிக்கலாம்… வாடா…’’ என்றவாறு ஒரு கையில் சரக்கு இன்னொரு கையில் அவனையும் பிடித்துக் கொண்டு,  பிரசாந்த், நவீன் டேபிளுக்கு அழைத்து சென்றான்.
கச்சேரி ஆரம்பமானது.
6வது ரவுண்ட் முடிஞ்சதும், சங்கர் வெளியே எழுந்து சென்றான்.
பிரசாந்த்தான் ஆரம்பித்தான்.
‘‘வெற்றி… நீங்க என்னப்பா… பெரிய பணக்காரங்கக்கிட்ட டிரைவரா இருக்கீங்க… உங்களுக்கு என்ன வசதிக்கு குறை…’’ என்றான் கையில் சரக்குடன்.
‘‘சே… அவங்க எல்லாம் மனுஷங்களாப்பா… என்னை வேலையை விட்டே தூக்கிட்டாங்கப்பா…’’ என்றான் வெற்றி.
‘‘அய்யய்யோ… சின்னக் குழந்தைங்க வேற இருக்குன்னு சொன்னீங்களே… பொழைப்புக்கு அடுத்து என்ன பண்ணப்போறீங்க….?’’ என்றான் நவீன்.
‘‘அது எப்படிப்பா அவங்களை விட்டுடுவேன்… அவங்க ரகசியம் ஒண்ணு எங்கிட்டே இருக்கில்ல… அதச்சொல்லியே பணம் கேட்டேன்… 5 லட்சம் குடுத்தாங்க இல்ல…’’ என்றான்.
‘‘சபாஷ் நண்பா… இந்த பணக்காரங்களை எல்லாம் இப்படித்தான் பண்ணணும்…’’ என்றான் பிரசாந்த்.
‘‘அப்புறம் இந்தப் பணம் போதுமா?’’ என்றான் நவீன்.
‘‘அது எப்படி பத்தும்… இப்பத்தான் மணலியில ஒரு வீடு வாங்க அந்த பணத்தை அட்வான்சா குடுத்திருக்கிறேன்… கொஞ்ச நாள் போன பின்னாடி… மறுபடியும் பணம் கேட்பேன்ல…’’ என்றான் வெற்றி.
‘‘ஏன்யா… அவங்க என்ன அலாவுதீன் விளக்குன்னு நினைச்சிட்டியா… நீ கேட்கிறப்போ எல்லாம் அவங்க பணம் குடுக்கிறதுக்கு?’’ என்றான் பிரசாந்த்.
‘‘200 கோடி மேட்டர்ப்பூ…’’ என்று வாய் குழறிபடியே கூறினான் வெற்றி.
திக்கித்து நின்றனர் பிரசாந்த்தும், வெற்றியும்.
(தொடரும் 20)

21
200 கோடி ரூபா மேட்டர் என்று டிரைவர் வெற்றி கூறியவுடன், ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும், விரைவிலேயே சுதாரித்துக் கொண்டான் பிரசாந்த்.
‘‘பெரிய ஆளுதான் வெற்றி நீங்க… 200 கோடி ரூபா மேட்டர்ன்னா ரொம்ப பெரிய மேட்டரா இருக்கும்போல…?’’ என்றான்.
‘‘நண்பா… நீங்க என்ன எல்லாத்தையும் என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… என்கிட்ட இருந்து உண்மைய எல்லாம் தெரிஞ்சுக்க பார்க்குறீங்களா...? நெவர்…. நான் சொல்ல மாட்டேன்…’’ என்று குழறினான் வெற்றி.
பிரசாந்த்தும், நவீனும் ஒரு கனம் சிறிய ஏமாற்றம் அடைந்தனர். எல்லாம் ஈசியாக கிடைக்கிறதே என்று நினைத்திருந்த அவர்களுக்கு, அடுத்து என்ன சொல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
ஆனால், வெற்றியே தொடர்ந்தான். ‘‘நண்பா நீங்க எல்லாம் என் புது பிரண்ட்ஸ். அதுவும் அறிமுகமான நாள்லேயே எனக்கு வொஸ்தி சரக்கு வாங்கி குடுத்திருக்கீங்க… உங்கக்கிட்ட நான் சொல்லியே ஆவேன்…’’ என்றான் வெற்றி.
நவீன், பிரசாந்த் முகத்தில் மீண்டும் ஒரு சின்ன புன்முறுவல் உதித்தது. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அன்னைக்கு என்ன நடந்ததுன்னா… என்று வெற்றி ஆரம்பித்தான்.
அன்று…
மிருதுளானியும், அபிஜித்தும் காரின் பின்சீட்டில்  உட்கார்ந்திருந்தனர்.
அரசல், புரசலாக இவர்களின் உறவு வெற்றிக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால், பெரிய இடத்து சமாச்சாரம் என்று அவன் எதையும் கண்டுக்கொள்ள மாட்டான். தான் உண்டு, ஸ்டீரியங் உண்டு என்று வேலையில் கவனமாக இருப்பான்.
அபிஜித் மெதுவாக கிசுகிசுத்தார்.
‘‘டிரைவர் நம்பகமானவன்தானே…?’’ என்றார்.
‘‘பயமில்லை… எதையும் வெளியே சொல்ல மாட்டான்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘என்ன சொல்றார் மினிஸ்டர்… உடனே ஆர்டர ஷாங்சன் பண்ணிட்டாரே…?’’ என்றார் அபிஜித்.
அந்த நேரத்தில்தான் ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள் என்பதை உணர்ந்த வெற்றி, அவர்கள் சொல்வதை கவனமாக கேட்க ஆரம்பித்தான். பார்வை சாலையில் இருந்தாலும், காது அவர்களின் பக்கம் கூராக இருந்தது.
‘‘மினிஸ்டர்… அவரோட மச்சினன் கணக்கில் 200 சியை உடனே போடச் சொல்றார். அதையும் நேரடியா போடாம, ஏதாவது ஒரு பாரீன் அக்கவுன்ட்ல இருந்து, மச்சினனோட சிங்கப்பூர் ஏசிபிசி வங்கி அக்கவுன்ட்டுக்கு மாத்த சொல்றார்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘என்ன பண்ணப்போறே… இதுக்கும் ஏதாவது பிளான் வச்சிருப்பீயே?’’ என்றார் அபிஜித்.
 ‘‘ஆமா டியர்… என் சிஸ்டர் ரேஷ்மா… யூஎஸ்.ல இருக்கா… அவ பெயர்ல ஏற்கனவே ஒரு ஏசிபிசி அக்கவுன்ட்ட ஓபன் பண்ணி நானே மெயின்டைன் பண்ணிட்டு இருக்கேன். அந்த அக்கவுன்ட்டுக்கு நம்ம பணத்தை மாத்திட்டேன். அதில இருந்து மினிஸ்டர் பரமசிவம் மச்சினன் அக்கவுன்ட்டுக்கு மாத்திட வேண்டியதுதான்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘வெளியிடங்கள்ல மினிஸ்டர் பேர எல்லாம் சொல்லாதே டியர்… எக்ஸ்னே சொல்லு… அதுதான் சேப்டி…’’ என்றார் அபிஜித்.
‘‘ஓகே… டியர்…’’ என்றபடி ஏதாவது ஒட்டுகிட்டு கேட்கிறானா என்று வெற்றியை சந்தேகத்துடன் பார்த்தாள். ஆனால், சாலையை மட்டும் நேரடியாக கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘‘மிச்சத்தை வீட்டுல போய் பேசலாம்…’’ என்றார் அபிஜித்.
‘‘ஓகே டியர்…’’ என்றபடி வார இதழ் ஒன்றை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள் மிருதுளானி.
‘‘இதுல என்ன இருக்கு வெற்றி… அவங்க மினிஸ்டருக்கு லஞ்சம் குடுத்திருக்காங்க… இது எல்லா பெரிய இடத்திலேயும் நடக்கிறதுதானே… இதை வச்சி எப்படி அவங்க மிரட்ட முடியும்?’’ என்று கேட்டான் பிரசாந்த்.
‘‘பாஸ் நான் ரொம்ப தெளிவானவன்… அவங்க பேச ஆரம்பிக்கிறப்போவே, நான் சுதாரிச்சுட்டேன்.  அதனால போன்ல ரெக்கார்டிங் போட்டு கப் ஹோல்டர்ல வச்சிட்டேன்… அதனால அவங்க பேசினது எல்லாம், அச்சர சுத்தமா பதிவாயிருக்கு தெரியுமா…? இப்போ சொல்லுங்க… இதை எடுத்துக்கிட்டு சீபிகீபிஐன்னு ஏதோ சொல்லுறாங்களே… அவங்கக்கிட்ட குடுத்தா… கோழிய அமுக்கிற மாதிரி அமுக்கிட மாட்டாங்க…?’’ என்று கோணிக் கொண்டே சிரித்தான் வெற்றி.
‘‘பாஸூ… நீங்க ரொம்ப பெரிய ஆளுதான்… கில்லாடி வேலை பார்த்திருக்கீங்க… அப்புறம் இதைச் சொல்லியா அவங்கக்கிட்ட பணம் கேட்டீங்க?’’ என்றான் பிரசாந்த்.
‘‘அட என்னா பாஸ் நீ வத்திக்குச்சிக்காரன் மாதிரி கேள்வியா கேட்டுட்டு இருக்கே… ம்...ம்ம்… இப்போ ஞாபகத்துக்கு வருது… அன்னைக்கு ஒரு நாள் நீங்கதானே மேடம் பங்களாவுக்கு அந்த பொண்ணோட வந்தீங்க…?’’ என்று நவீனைப் பார்த்து கேட்டான்.
‘‘வாவ்… உங்களுக்கு ரொம்ப ஞாபக சக்தி பாஸ்… அவங்க என்னோட லண்டன்ல ஒண்ணா வேலை பார்த்தாங்க… நானும் அவங்களும் சேர்ந்துதான் ஊருக்கு வந்தோம். அவங்களை வீட்டுல கொண்டுவந்து விடுறதுக்காக வந்தேன்… மத்தபடி அவங்களப்பத்தி எனக்கு பெரிய அளவில தெரியாது…’’ என்றான் நவீன்.
‘‘ஓ… ’’ என்று கூறிவிட்டு ஒரு ரவுண்ட் ஊத்து பாஸூ…’’ என்றான் வெற்றி.
நவீன் உடனடியாக கிளாசில் சரக்கை ஊத்தி அவனிடம் குடித்தான்.
‘‘நீங்க சாப்பிடலீயா பாஸூ…? ம்… நீங்க எல்லாம் பெரிய இடத்து ஆளுங்க… கொஞ்சமா குடிச்சு… சொகுசா இருப்பீங்க…’’ என்று நாசுக்கு சொல்லிவிட்டு, வாயில் ஊற்றிக் கொள்ள ஆரம்பித்தான். அடுத்து தட்டில் இருந்த சிக்ஸ்டிபைவை எடுத்து சாப்பிட்டபடி, ‘‘ம்…ம்ம்… எதுல விட்டேன்…?’’ என்றான் வெற்றி.
‘‘அவங்க பேசினதை ரெக்கார்ட் பண்ணிட்டீங்க…’’ என்றான் நவீன்.
‘‘நான் அவங்கக்கிட்ட… இதைத் சொல்லி எல்லாம் மிரட்டல பாஸ்… இது சின்ன பிட்டுதான். இன்னொரு பிரம்மாஸ்திரம் இருக்குல்ல…’’ என்றான் வெற்றி.
குழப்பத்துடன் அவனையே பார்த்தனர் நவீனும், பிரசாந்த்தும்.
‘‘ஒரு நாள்… வீட்டுக்கு உடனே வான்னு மேடம் கூப்பிட்டாங்க… நான் வேகமாக பங்களாவுக்கு போனேன்... அங்க ஏற்கனவே எங்க ஏரியாவச் சேர்ந்த ரெண்டு தடியனுங்க இருந்தாங்க… வேறொரு பெரிய மனுஷனும் இருந்தாரு…’’ என்றான் வெற்றி.
‘‘யாரு அபிஜித் சாரா…?’’ என்றான் பிரசாந்த்.
‘‘இல்ல… இது வேற ஆள்… ஒயிட் அண்ட் ஒயிட் போட்டுட்டு இருந்தார். அழுதுகிட்டு இருந்த மேடத்துக்கு ஆறுதல் சொல்லிட்டு இருந்தார்… என்னடா போல்ட்டான மேடம் அழுதுகிட்டு இருக்காங்களேன்னு பார்த்தா… அவங்க அறையில அந்த பொண்ணு நெத்தியில குண்டடிப்பட்டு செத்து கிடந்துச்சு… அதுதான்பா… உன்னோட வந்ததே அந்த பொண்ணு’’ என்றான் வெற்றி.
(தொடரும் 21)
22
வெற்றி சொன்னதும், நவீனும், பிரசாந்தும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர்.
வெற்றியின் சட்டை காலரை பிடித்து, ‘‘நீ நல்லா பார்த்தியா… அது அந்த என் பிரண்ட் தானா?’’ என் கண்கள் சிவக்க கேட்டான் நவீன்.
அவனது கையை தட்டிவிட்டபடி, ‘‘நீ என்னப்பா என்கிட்ட கோபப்படுறே? கொன்னது அவங்க… நான் இல்ல… நான் பார்த்ததை சொன்னேன்…’’ என்றான் வெற்றி.
பிரசாந்த், நவீனை அமைதிப்படுத்தினான். நவீன் டேபிளிலேயே கையை மடக்கிக் கொண்டு குமுற ஆரம்பித்தான்.
‘‘இவன் என்னப்பா… கூட வேலைப்பார்த்த பொண்ணு செத்ததுக்கு இப்படி அழுவுறான்… என்னம்மோ பொண்டாட்டி செத்துப்போன மாதிரி…’’ என்று மீண்டும் பாட்டில் இருந்த சரக்கை கிளாசில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்.
இப்போதைக்கு நவீனை தேற்ற முடியாது என்று நினைத்த பிரசாந்த், அவனை பின்னால் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்து, ‘‘அப்புறம் பாஸ்… ’’ என்று கேசுவலாக வெற்றியிடம் கேட்டான்.
‘‘அப்புறம் என்ன… அங்கே போய் என்னம்மா கூப்பிட்டீங்கன்னு கேட்டேன்… துப்பாக்கி எடுத்து அவளை மிரட்டிட்டு இருக்கிறப்போ ஏற்பட்ட கைகலப்புல செத்துப்போச்சுன்னும், அவளை புதைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறதாகவும், அதுக்காகத்தான் உதவத்தான் கூப்பிட்டேன்னும் சொன்னாங்க…’’
‘‘அதுக்கு உன்னை ஏன் கூப்பிட்டாங்க…? ஏன் மத்தவங்க இல்லையா?’’ என்றான் பிரசாந்த்.
‘‘பிரதர் நான் கொஞ்சம் அடிதடிக்கும் போவேன்… அதை மேடம் பார்த்திருக்காங்க… அதனாலத்தான் என்னையும் கூப்பிட்டிருக்காங்க…’’ என்றான் வெற்றி.
‘‘ஓ… நீங்க அந்தளவுக்கு பெரிய ஆளா?’’ என்று வியப்பதுபோல் கூறினான் பிரசாந்த்.
‘‘பின்னே… ஆனா எனக்கு ஒரு டவுட். யாராவது சொந்த தங்கச்சிய துப்பாக்கியால மிரட்டுவாங்களா… அப்படி மிரட்டனும்னா பெரிய விஷயமா இருக்கும்னு நினைச்சேன்… அதனால அங்க வந்திருந்த என் ஏரியாக்காரங்கக்கிட்ட தம் அடிக்கும்போது நைசா விஷயத்தை கேட்டேன்… அவங்கத்தான் முழு விஷயத்தை சொன்னாங்க….’’
‘‘அப்படியா… அவங்களுக்கு எப்படி தெரியும்?’’
‘‘எங்காட்கள்ல ஒருத்தன் சிசிடிவி வேலைக்காரன். அதனால வீட்டில இருந்த சிசிடிவில பதிவாகி இருந்த ஆதாரத்தை அழிப்பதற்காக, அதை எடுத்தப்போ எல்லாத்தையும் பார்த்திட்டாங்க… அதுலதான் அவங்களுக்கே முழு விஷயமும் தெரிஞ்சிருக்கு...’’ என்றான் வெற்றி.
‘‘கூட இருந்த ஆள் யாரு…?’’
‘‘அது மேடத்தோட ரெண்டாவது புருஷனாம். அவங்க பிரிஞ்சிட்டாலும், குடுக்கல், வாங்கல் இருந்திருக்கு… அதனால பொண்ணை கொன்ன உடனே, அவளை புதைக்க அந்தாளோட உதவிய மேடம் கேட்டிருக்காங்க… அவர் ரெண்டு பேரை கூட்டியாந்திருக்கார்… மேடம் தன்னோட பங்குல என்னை கூப்பிட்டிருக்காங்க… இதுல இன்னொரு விஷயம் என்னான்னா… அந்த பொண்ணு மேடத்தோட முதல் புருஷனுக்கு பொறந்ததாம்… என்ன கருமம் பிரதர்…’’ என்றான் வெற்றி.
‘‘சரி அன்னைக்கு நைட் என்ன நடந்துச்சாம்…?’’ என்றான் பிரசாந்த்.
‘‘என் ஏரியா ஆட்கள் என்ன சொன்னாங்கன்னா…’’ என்று ஆரம்பித்தான் வெற்றி.
அன்று இரவு.
ரேஷ்மா சற்று கவலையாகவே இருந்தாள். தன்னுடைய தாய் என்ன சொல்லப் போகிறாளோ என்று. ஏனெனில், காலையில் அவள் மிக கண்டிப்புடன் நவீனை மறந்துவிடு என்று சொல்லிப் போயிருந்தாள்.
இரவு வந்து பேசுவதாக கூறியிருந்தாள்.
அதனால் அவளது வருகைக்காக காத்திருந்தாள்.
சொன்னபடி இரவு 10.30 மணிக்கு திரும்பி வந்தாள். வந்தவள் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். வீட்டில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றிருந்தார்கள். வேலையாட்களை இரவில் வீட்டில் தங்க வைப்பதில்லை. அது மிருதுளானியின் பழக்கம். செக்யூரிட்டி மட்டும் கேட்டை பூட்டி வெளியில் உட்கார்ந்திருந்தான்.
ஓவனில் இருந்த இட்லிகளை சாப்பிட்டு, இரவு உடை மாற்றிக் கொண்டு அறைக்கு வந்தாள் மிருதுளானி.
அவளை எதிர்பார்த்து காத்திருந்த ரேஷ்மா, ‘‘சொல்லு மம்மி ஏன் நவீனை வேணாம்னு சொன்னே…?’’ என்று ஆரம்பித்தாள்.
‘‘ஏன்னா… அவன் உனக்கு சரிப்பட மாட்டான்’’ என்றாள் மிருதுளானி.
‘‘அது எப்படி முதல் நாள் சரின்னு சொல்றே… அடுத்த நாள் வேணாம்னு சொல்றே…? ரெண்டு நாள்ல அவன் எனக்கு சரிப்பட மாட்டான்னு உனக்கு எப்படி தெரியும்?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘அவன் பேச்ச எடுக்காதே… எனக்கு அறுவெறுப்பா இருக்கு… அவனை மறுந்துடுன்னா மறுந்துடு… அவ்வளவுதான் சொல்வேன்…’’
‘‘எப்படி நீ ரெண்டு கல்யாணம் பண்ணி, ஒவ்வொருத்தனா மறந்தியே அப்படியா…?’’ என்று கொதிப்பில் கேட்டாள் ரேஷ்மா.
‘‘ரேஷ்மா… நீ ரொம்ப பேசுறே…’’
‘‘பின்னே… எனக்கு பிடிச்சவனை, நீ வேணாம்னு சொல்லுறப்போ… அதுக்கு சரியான ரீசனை சொல்ல வேணாமா?’’
‘‘அதை உனக்கு விளக்கிச் சொல்லிட்டிருக்க முடியாது…’’ என்று மிருதுளானி கூறிக் கொண்டிருந்தபோதுதான், போன் ஒலித்தது.
எடுத்து பார்த்தாள். அபிஜித் என்று இருந்தது.
அட்டென்ட் செய்தாள்.
‘‘எஸ் அபிஜித், பணத்தை அல்ரெடி என் சிஸ்டர் அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டேன். பாங்கில சாப்ட்வேர் சேஞ்ச் பண்ணியிருக்காங்க… அதனால என் சிஸ்டரோட தம்ப் ஐடெண்ட்டி கேட்குது… நான் நைட்குள்ள மாத்தி விட்டுடுறேன்… நோ பிராப்ளம்’’ என்று கூறிவிட்டு போனை ஆப் செய்தாள் மிருதுளானி.
அவள் பேசி முடிக்கும்வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.
‘‘ஓ… இப்போ புது நாடகத்தை ஆரம்பிச்சுட்டியா… இப்போ நான் ரிலேட்டீவ் பொசிஷன்ல இருந்து, சிஸ்டருக்கு புரமோஷன் ஆகிட்ட மாதிரி தெரியுது?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ரேஷ்மா ரொம்ப ஓவரா பேசாதே… உன் நல்லதுக்குத்தானே பண்றேன்… உன் அக்கவுன்ட்டுல இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து நான் சொல்லுற அக்கவுன்ட்டுக்கு மாத்தணும்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘அந்த அக்கவுன்ட்டையே நீ தானே மெயின்டைன் பண்றே… அப்புறம் என்ன?’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ஆமா… இப்போ உன் தம்ப் இம்ப்ரஷன் ஐடென்ட்டி கேட்குது…’’ என்றாள் மிருதுளானி.
‘‘நான் பண்ண மாட்டேன்… நீ எங்க மேரேஜ்க்கு சம்மாதிக்கப்போ நான் எதுக்கு உனக்கு சப்போர்ட் பண்ணணும்… நானும் நவீனும் நாளைக்கே காஞ்சிபுரம் கோயில்ல கல்யாணம் பண்ணிட்டு லண்டன் கிளம்பப்போறோம்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ரேஷ்மா என்னை கோபப்படுத்தி பார்க்காதே… மொத்தல்ல உன்னோட தம்ப் இம்ப்ரஷன் வை… பேங்க் வெப்சைட் ஓபன் பண்ணியிருக்கேன் பாரு…’’ என்று டேப்பை நீட்டினாள்.
‘‘என்னால முடியாது… நான் சொன்னா சொன்னதுதான்…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘ரேஷ்மா…’’ என்று கத்தினாள் மிருதுளானி.
அவள் கையில் இப்போது சைலன்சர் பொருத்திருந்த துப்பாக்கியை வைத்திருந்தாள்.
‘‘நீ இப்போ கையெழுத்து போடலேன்னா…’’ என்று இழுத்தாள் மிருதுளானி.
‘‘என்ன போடலன்னா என்னை சுட்டுக் கொன்னுடுவியா?’’ என்றாள் ரேஷ்மா அசால்ட்டாக.
‘‘அப்படி எல்லாம் தப்புக் கணக்கு போடதே ரேஷ்மா… நான் என் லட்சியத்தை அடையணும்னா… எந்த எல்லைக்கும் போவேன். மொத்தல்ல உன்னை கொல்வேன். அப்புறம் நீ யாரை கல்யாணம் பண்ணணும் நினைச்சியோ அந்த நவீனையும் கொன்னுடுவேன்…’’ என்றாள் மிருதுளானி
‘‘மாம்…’’ என்று கத்தினாள்.
அதற்குள் மீண்டும் மிருதுளானியின் போன் ஒலித்தது.
இம்முறை அமைச்சர் பரமசிவத்திடம் இருந்து.
துப்பாக்கியுடன் இன்னொரு கையில் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு போனாள் மிருதுளானி.
அதற்குள் டேப்பை எடுத்து பார்த்தாள் ரேஷ்மா. அவளது கணக்கில் ரூ.200 கோடி இருந்ததை பார்த்து அதிர்ந்தாள்.
போன் பேசியபடி மீண்டும் உள்ளே வந்தாள் மிருதுளானி.
‘‘நோ பிராப்ளம் சார்… இன்னைக்கு நைட்டுக்குள்ள… உங்க மச்சினன் கணக்குக்கு பணம் போய்டும்… குட் நைட் சார். சுவீட் டிரீம்ஸ்…’’ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தாள் மிருதுளானி.
‘‘இப்போது தம்ப் வைக்கப்போறீயா… இல்லையா…?’’ என்று தன் கையில் இருந்த துப்பாக்கியை ரேஷ்மாவின் நெற்றிப் பொட்டில் வைத்தாள் மிருதுளானி.
‘‘ஓ… பெத்த பொண்ணையே கொல்லுற அளவுக்கு உன் பணவெறி அதிகரிச்சிடுச்சுல்லே…’’ என்றாள் ரேஷ்மா.
‘‘இப்போ வேற வழி தெரியல… எனக்கு உடனடியா பணத்தை டிரான்ஸ்பர் பண்ணியாகணும்… அதுக்கு நீ செத்தா தான் நடக்கும்னா… நான் அதுக்கும் தயாராயிட்டேன்…’’ என்று மிருதுளானி கூறுவதற்குள், சடாரென்று தன் நெற்றிப்பொட்டில் குறிபார்த்துக் கொண்டிருந்த துப்பாக்கியை மடக்கினாள் ரேஷ்மா.
ஆனால், மிருதுளானி பலமாக துப்பாக்கியை பிடித்துக் கொண்டிருந்ததால், எளிதில் அவள் கையில் இருந்து துப்பாக்கி வரவில்லை. இருவரும் அதை தங்கள் வசப்படுத்திக் கொள்ள போராடினர்.
ஒரு கட்டத்தில் துப்பாக்கியில் இருந்து குண்டு ‘டமால்’ என்று வெளியேறியது. சைலன்சர் பொருத்தியிருந்ததால், பெரிய அளவில் சத்தம் வெளியே வரவில்லை.
மிருதுளானி அதிர்ச்சி ஆகி பார்ப்பதற்குள், ரேஷ்மா நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து சரிந்தாள்.
(தொடரும் 22)

23
ரேஷ்மா நெற்றியில் குண்டு பாய்ந்து விழுந்ததும், பதறியடித்து அவளை உலுக்கினாள் மிருதுளானி.
துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, ‘‘ரேஷ்மா… ரேஷ்மா…’’ என்று முகத்தில் அறைந்தாள்.
ஆனால், ரேஷ்மாவின் ஆத்மா பிரிந்திருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல், தரையில் அமர்ந்து இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். மெல்ல நிமிர்ந்தவள் கண்ணில் டேப்லட் பட்டது.
ஓடிச்சென்று டேப்பை எடுத்து வந்து, ரேஷ்மாவின் கட்டை விரலை பதித்தாள். பாஸ்வேர்ட் என்று கேட்டது. பாஸ்வேர்ட் போட்டாள். ஆனால், ராங் என்று வந்தது. மாற்றி, மாற்றி போட்டுப்பார்த்தும் உள்ளே செல்ல முடியவில்லை. அதை அப்படியே டேபிளில் போட்டுவிட்டு, அபிஜித்தை போனில் அழைத்தாள்.
‘‘எஸ் மிருது… பணத்தை மாத்திட்டியா?’’ போனை எடுத்தவுடன் கேட்டார் அபிஜித்.
‘‘டியர் அதுல ஒரு பிராப்ளம்… என் சிஸ்டரோட நடந்த சண்டையில… ’’ என்று இழுத்தாள்.
‘‘சண்டையில… என்ன ஆச்சு?’’
‘‘நான் அவளை சுட்டுக் கொன்னுட்டேன்…’’
‘‘ஓ… நோ… அப்போ பணத்தை மாத்த முடியலையா?’’
‘‘டியர்… நான் மர்டர் பத்தி பேசிட்டு இருக்கேன்… நீங்க பணத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க…’’ என்றாள்.
‘‘உன் சிஸ்டரை கொன்னது சரி… அதை மறைக்கிறது பெரிய விஷயமில்ல… ஆனா… பணம்? நாம அதை மினிஸ்டருக்கு குடுக்காட்டி சிக்கலாகுமே?’’
‘‘நான் என் சிஸ்டரோட பிங்கர் பிரின்ட்டை வச்சு பார்த்தேன். ஆனா, பாஸ்வேர்ட் ராங்னு வருது… சம்திங் பிராப்ளம்… இவளைத்தான் உங்க அருமை மகன் காதலிச்சான். அதனாலத்தான் நீங்க நம்ம மேரேஜ் அன்னைக்கு போட்டோ காட்டினப்போ அதிர்ச்சி அடைந்தேன். அதுக்கு அப்புறம் தான் ஒரு நாள் உங்கக்கிட்ட விஷயத்தை சொன்னேன். பையன்கிட்ட வேற பொண்ணு பார்க்கச் சொல்லுங்கன்னு சொன்னேன்… நீங்க உங்க பையன்கிட்ட ஏதாவது சொன்னீங்களா? இன்னைக்கு காலையில அவன் வந்திருந்தான். ஆனா, உங்களப்பத்தி தெரியாத மாதிரி அனுப்பிட்டேன்’’
‘‘இல்ல… அவன் சின்ன பையன்… அவன்கிட்ட மெதுவா சொல்லி புரிய வைக்கிறேன்… இப்போ அவசரப்பட முடியாது… சரி இப்போ பணத்துக்கு என்ன பண்றது?’’
‘‘அதுக்கு வேற வழி பார்த்துக்கலாம்… இப்போதைக்கு என் சிஸ்டரோட பாடிய டிஸ்போஸ் பண்ணணும்… அத முடிச்சிட்டு நான் போன் பண்றேன்…’’ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தாள் மிருதுளானி.
எப்படி ரேஷ்மாவின் பாடியை மறைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள். விஜய் என்ற விஜயகுமாரான அவளது இரண்டாவது புருஷன் நினைவுக்கு வந்தான். இல்லீகல் வேலைகளில் கில்லாடி. அத்துடன் பெண்கள் சகவாசமும் அதிகம். அதனால்தானே அவளிடம் இருந்து விலகினாள்.
ஆனாலும், இப்போதைக்கு வேறு வழியில்லை. அவனிடம்தான் உதவி கேட்க முடியும்.
விஜய்யை போனில் அழைத்து விஷயத்தை கூறி உதவி கேட்டாள்.
‘‘சப்ப மேட்டர் டார்லிங்… இரு ஆளுங்களோட வர்றேன்…’’ என்றான் விஜய்.
உதவிக்கு இருக்கட்டுமே என்று வெற்றியையும் உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தாள் மிருதுளானி. பின்னர் சமயோஜிதமாக வெளியே சென்று செக்யூரிட்டியிடம், ‘‘ஒடம்புக்கு சரியில்லேன்னு சொன்னேல்ல… வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு… நாளைக்கு வந்தா போதும்…’’ என்று அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை ஒன்றை நீட்டினாள்.
அவன் விநோதமாக பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டே கும்பிட்டுவிட்டு கிளம்பினான்.
கேட்டை பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் மிருதுளானி.
அடுத்த அரைமணி நேரத்தில் விஜய் உட்பட எல்லோரும் வீட்டில் இருந்தனர்.
வாட்டசாட்டமாக இருந்த விஜய்தான் ஆரம்பித்தான். ‘‘டேய் சிவா… வீட்டில சிசிடிவி இருக்கு… மொதல்ல… அதுல பதிவாகி இருக்கிற காட்சிகளை அழி… அப்புறம் பாடியை நீங்க பாடிய தூக்கி காருல ஏத்துங்க…’’ என்று வெற்றி மற்றும் மற்றவர்களை பார்த்து கூறினான்.
சிவா என்று அழைக்கப்பட்ட குண்டன் தன்னுடன் வந்திருந்தவர்களில் தன் ஏரிய நபரான காளியை அழைத்துக் கொண்டு சென்றான். வெற்றியும், இன்னொரு நபரும் பாடியை காரில் ஏற்றும் வேலையில் ஈடுபட்டனர்.
எல்லா வேலையும் முடிந்த பின்னர், வெற்றியும் மற்றவர்களும் தம் அடிப்பதற்காக கார் பார்க்கிங் அருகே வந்தனர். அப்போது தான் ஏரியா ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தான் வெற்றி.
‘‘அப்போதான் அவங்க… எல்லாத்தையும் சொன்னாங்க…’’ என்றான் வெற்றி.
‘‘ஓ… நீங்க ரொம்ப பெரிய ஆளு பாஸ்… ஆளுக்கு எவ்வளவு குடுத்தாங்க… பாடிய எங்க புதைச்சீங்க…?’’ என்றான் பிரசாந்த்.
‘‘அதுதான் வண்டலூர் தாண்டி ஒரு காட்டுப்பகுதி வருமே… அங்கே கொண்டுப்போய் பொதைச்சிட்டோம்… எல்லாருக்கும்… ரெண்டு லஞ்சம் ரூபாய் குடுத்தாங்க…’’ என்றான் வெற்றி.
‘‘ஓ… பெரிய ஜாக்பாட்தான் அடிச்சிருக்கீங்க… இவ்வளவு நம்பிக்கையான ஆளான உங்களை ஏன் வேலையை விட்டு தூக்கினாங்க…?’’
‘‘அந்தம்மா… அபிஜித் வீட்டுக்கே போகப்போகுது போல… இப்போ புதுசா சேர்த்துக்கிட்ட ஆளு… என்ன கருமமோ… ஆனா… திடீர்னு வேலைய விட்டு போகச் சொன்னதுதான் பிரதர்…என்னால தாங்க முடியல…’’ என்றான் வெற்றி.
பிரசாந்த் தூரத்தில் நின்றிருந்த வெற்றியின் நண்பனை அழைத்தான்.
அவன் விரைந்து வந்தான்.
‘‘வா வெற்றி வூட்டுக்கு போகலாம்…’’ என்று அவனை கைத்தாங்கலாக தூக்கினான்.
‘‘தேங்க்யூ… பிரதர்… தேங்க்யூ…’’ என்று ஏகப்பட்ட நன்றிகளை வாய் குளறியபடியே கூறினான் வெற்றி.
அவனுக்கு விடை கொடுத்துவிட்டு, நவீனின் தோளில் கைவைத்தான் பிரசாந்த்.
‘‘பிரசாந்த் எவனையும் விடக்கூடாது… என் அப்பன் உட்பட… என் ரேஷ்மாவ என்னிடம் இருந்து பிரிச்ச, அவங்க எல்லாரையும் கொல்லணும்…’’ என்றான் நவீன்.
‘‘அவசரப்படாத நவீன். அவங்களை முறைப்படி சட்டத்துக்கு முன்னாடி ஆதாரத்தோட நிக்க வைப்போம்… யாரும் தப்ப முடியாது… அந்த மினிஸ்டருக்கு எதிரானவர்தான் இப்போ பவர்புல் மினிஸ்டர் ஆகியிருக்காரு… அவரு ஏற்கனவே இவரோட பைலை தோண்ட ஆரம்பிச்சுட்டாரு. நான் அல்ரெடி பரமசிவம், மிருதுளானிக்குள்ள நடந்த டீலிங் பத்தி ஒரு பைல் போட்டிருந்தேன். அது அவரோட கவனத்துக்கு போயிருக்கு… நாளைக்கு என்னை டெல்லிக்கு வரச் சொல்லியிருக்காங்க… நான் போய்ட்டு வந்துடுறேன்… நிச்சயம் கிரீன் சிக்னல் கிடைக்கும். அதுல… இவங்களை சிக்கவச்சி, வச்சு செய்யலாம்… கவலைப்படாதே…’’ என்றான் பிரசாந்த்.
கண்கள் சிவந்திருந்த நவீன், ‘‘கட்டாயம் செய்யணும்…’’ என்றான்.
(தொடரும் 23)

24
அந்த இரண்டு நாட்களும் நவீனுக்கு மிகக்கொடுமையாக சென்றன. செல்போனில் இருந்த ரேஷ்மாவின் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடன் கழித்த இனிமையான பொழுதுகளை நினைத்து கலங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக மூன்றாவது நாள் காலையிலேயே பிரசாந்த் வந்தான். ‘‘நவீன் கிரீன் சிக்னல் கிடைச்சிடுச்சு… மினிஸ்டர்கிட்ட ஆதாரங்களை எல்லாம் தெளிவா விளக்கிட்டேன்… அவர் என்ன சொல்றார்னா… பரமசிவத்தை பக்கா ஆதாரத்தோட மடக்கணும்… அதுக்கு மிருதுளானி அப்ரூவர் ஆகணும்னு சொன்னார் …’’
அழுது, அழுது சிவந்திருந்த கண்களுடன் இருந்த நவீன், அவனையே பார்த்தான்.
‘‘அதுக்கு ரேஷ்மா மர்டர் கேசை சிபிஐக்கு மாத்தணும்னு கேட்டேன்… உடனே ஆர்டர் போட்டுட்டார்… சோ… அந்த கேசை நான் இன்னைக்கு எடுத்துக்க போறேன்… வீட்டிலேயே அடைஞ்சுக் கிடக்காதே… நீயும்… என்னோட வா. அந்த ஸ்டேஷனுக்கு போய் இன்ஸ்பெக்டர்கிட்ட கேசை வாங்கிக்கிற போறேன்…’’
நவீன் தயாராகி அவனுடன் கிளம்பினான்.
இருவரும் அடுத்த அரைமணி நேரத்தில் எல்2 ஸ்டேஷனில் இருந்தனர்.
இன்ஸ்பெக்டர் துரைசாமி வீராவேசமா ஏதோ ஒரு அக்யூஸ்டிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பிரசாந்தும், நவீனும் உள்ளே சென்றனர். அதற்குள் போனில் யாரிடமோ பேசினான் பிரசாந்த்.
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
இன்ஸ்பெக்டரிடம், ‘‘சார்… ரேஷ்மா காணாம போன கேஸ்ல், ஏதாவது முன்னேற்றம் இருக்கா?’’ என்று கேட்டான் நவீன்.
‘‘யோவ் உனக்கு இதே வேலையா போச்சு… அந்தம்மாதான் அமெரிக்காவுக்கு போய்ட்டாங்கன்னு சொல்றேன்… திரும்ப, திரும்ப அதையே நோண்டிட்டு இருக்கே… நீ என்ன பெருச்சாளியா?’’ என்று கோபத்துடன் கேட்டார் துரைசாமி.
‘‘அவன் இல்ல… நீ தான் பெருச்சாளி… அதுவும் லஞ்சம் வாங்கி, வாங்கியே… பெருத்துப்போன பன்னி…’’ என்றான் பிரசாந்த்.
‘‘அடிங்கொய்யா…’’ என்றபடி அவனை அறையப்போனார் துரைச்சாமி.
படாரென அதை இடது கையால் தடுத்த பிரசாந்த், வலது கையால் அவரை ஓங்கி ஒரு அறைவிட்டான்.
அதற்கு வாசலில் ஒரு ஜீப் சைரன் சத்தத்துடன் வந்து நிற்க, நாலைந்து மப்டி அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
பிரசாந்த்தின் அறையினால் நிலைக்குலைந்து போயிருந்த துரைச்சாமி, வந்தவர்கள் யார் என்று பார்க்க, அவர்கள் விரைந்து வந்து சிபிஐ என்று அடையாள அட்டையை காட்டினார்கள். அதைத் தொடர்ந்து பிரசாந்த்தை காட்டி, எஸ்.பி. என்று அவரது காதில் கிசுகிசுத்தார்கள்.
வெலவெலத்து போனார் துரைச்சாமி. ‘‘சார்…’’ என்று சல்யூட் அடித்தார்.
‘‘துரைசாமி இந்த கேசை ஆரம்பத்திலேயே ஒழுங்கா கவனிச்சிருந்தா… இந்நேரம் கேசே முடிஞ்சுப் போயிருக்கும்… ஆனா நீங்க என்ன பண்ணீங்க… அவங்க குடுத்த நெக்லசை உங்க பொண்டாட்டி கழுத்துல போட்டுட்டு எப்ஐஆர்.ரை தூக்கி கெடப்பில போட்டுட்டீங்க. அதை கேட்டு வந்தவனையும் அலைகழிச்சீங்க… இப்போ சொல்லுங்க நீங்க ஊழல் பெருச்சாளியா இல்லையா?’’ என்றான் பிரசாந்த்.
‘‘சார்…’’ என்று மீண்டும் ஒற்றை வார்த்தையை உதிர்த்தார் துரைசாமி.
‘‘அந்த ரேஷ்மா கேஸ் சிபிஐக்கு மாறிடிச்சு… இதோ ஆர்டர்…’’ என்று அவரிடம் காட்டினான் பிரசாந்த். அதைத்தொடர்ந்து, ‘‘நீங்க என்ன பண்றீங்கன்னா… நீங்க பதிவு செஞ்ச எப்ஐஆர்.ரையும், மத்த டீடெய்ல்சையும் கொண்டு வர்றீங்க…’’ என்றான்.
துரைசாமி கண்ணை காட்ட, தலைமை போலீஸ்காரர் ரேஷ்மா கேஸ் பைலை கொண்டு வந்து பிரசாந்திடம் நீட்டினான்.
அதை அப்படியே தன்னுடைய இன்ஸ்பெக்டரிடம் கொடுத்த பிரசாந்த், ‘‘தனசேகர் அந்த எப்ஐஆர்.ரை எடுங்க’’ என்றான்.
அவர் எப்ஐஆர் காப்பியை எடுத்து நீட்டினார்.
அதை படித்து பார்த்த பிரசாந்த், ‘‘ஆக… மிருதுளானி காட்டின போன் கால்ஸ் டீடெய்ல்… அப்புறம் அமெரிக்காவில இருந்த அந்த நம்பர்ல இருந்து வந்த கால நீங்களே அட்டெண்ட் பண்ணி பேசி, ரேஷ்மா அமெரிக்காவிலேயே இருக்கிறதா உறுதியாகி இருக்கிறதா முடிவு பண்ணியிருக்கீங்க… அப்படித்தானே துரைசாமி…’’
‘‘சார்… மிருதுளானி, தன்னோட போன் நம்பருக்கு அமெரிக்காவில இருந்து வந்த கால் பத்தின டீடெய்ல்ஸ காட்டினாங்க… அதனாலத்தான் நம்பினேன்…’’ என்றார் துரைசாமி.
‘‘ஆனா… நீங்களே அமெரிக்காவில இருக்கிற ரேஷ்மாக்கிட்ட பேசினா எழுதியிருக்கீங்களே?’’
‘‘சார்… பெரிய இடம்… அமெரிக்காவில இருந்து வந்த கால் டீடெய்ல் காட்டுறாங்க… அதுக்குமேல நான் போன் பண்ணி பார்க்கட்டுமான்னு கேட்க முடியுமா?’’
‘‘முடியாது… ஏன்னா அதுக்கு முன்னாலேயே உங்க கைக்கு நெக்லஸ் வந்துடுச்சே…’’
தலைகுனிந்தார் துரைசாமி.
‘‘அந்த ரேஷ்மா என்ன ஆனான்னு தெரியுமா...?’’
‘‘இல்ல சார்…’’
‘‘அவ செத்துப்போய்ட்டா…’’
‘‘சார்…’’ என்று அதிர்ந்தார் துரைசாமி.
‘‘ஆக… ஒரு கொலை கேசுல நீங்க உடந்தையா இருந்திருக்கீங்க… அதனால யூ ஆர் அண்டர் அரஸ்ட்’’ என்றான் பிரசாந்த்.
இப்போ துரைசாமி மட்டுமல்ல, ஸ்டேஷனில் இருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
சிபிஐ இன்ஸ்பெக்டரை அழைத்த பிரசாந்த், ஒரு முகவரியை கொடுத்து அதில் இருக்கும் நபரை அள்ளிக் கொண்டு வருமாறு உத்தரவிட்டான்.
அதற்குள் டீ வரவே அனைவரும் அதை சாப்பிட ஆரம்பித்தனர்.
சில நிமிடங்களில் வெற்றியின் பின்காலரை பிடித்துக் கொண்டு வந்தனர் சிபிஐ அதிகாரிகள்.
உள்ளே நுழைந்த வெற்றி, ‘‘ஓ… நம்ம பிரதரு… பாருங்க பிரதர் இவங்க என்ன காரணம்னு சொல்லாமா என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க… ஒரு இந்திய குடிமகனை கைது செய்யணும்னா, வாரன்ட் வேணும் தெரியுமா?’’ என்று உச்சஸ்தாயில் கூறினான்.
படாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பிரசாந்த். ‘‘அது சிவில் கேசுக்குத்தாண்டா என் வென்று…’’ என்றான்.
‘‘என்னா பிரதர் நீயும் போலீஸ்காரன் மாதிரி என்னை அடிக்கிற…?’’ என்றான் வெற்றி.
மறுபடியும் இந்த கன்னத்தில் விழுந்தது. பிரசாந்த் மீண்டும் கண்ணை காட்டவே, அவனிடம் இருந்த செல்போனை எடுத்து, பிரசாந்திடம் நீட்டினார் சிபிஐ அதிகாரி ஒருவர்.
அதை எடுத்து பார்த்தான். ஏற்கனவே அவன் சொன்னதுபோலவே, மிருதுளானி – அபிஜித் பேசியவை துல்லியமாக பதிவாகி இருந்தது.
‘‘டேய் ரேஷ்மா மர்டர் நடந்த அன்னைக்கு உன்னோட இருந்தாங்களே, அவங்க வீட்டை எல்லாம் இவங்கக்கிட்ட காட்டு…’’ என்று அங்கிருந்த அதிகாரிகளை காட்டினான் பிரசாந்த்.
‘‘மொத்தம் 3 பேர்… எல்லாத்தையும் அள்ளிட்டு வாங்க…’’ என்றான் பிரசாந்த்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களும் அள்ளிக்கொண்டு வரப்பட்டனர்.
சிபிஐ இன்ஸ்பெக்டரிடம் கேட்டான் பிரசாந்த். ‘‘தனசேகர்… சிசிடிவி டெலிட் ரெக்கார்டரை ரெகவர் பண்ண முடியுமா?’’
‘‘எஸ் சார்… அதுக்கு நம்மக்கிட்ட சாப்ட்வேர் இருக்கு…’’
‘‘குட்… அப்போ இன்னைக்கு மத்தியானம் மிருதுளானி வீட்டுக்கு நம்ம ஆளை அனுப்பி, அந்த ரெக்கார்டரை தூக்குங்க… வீட்டு ஆளுங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி பண்ணுங்க… இவனுங்களை எல்லாம் தூக்கி உள்ளே போடுங்க…’’
‘‘அடப்பாவீகளா… வத்திக்குச்சிகாரனுங்களா… தண்ணி வாங்கிக் கொடுத்து என்கிட்ட எல்லாத்தையும் கரந்துட்டீங்களே…’’ என்று முனங்கியபடி லாக்கப்புக்குள் சென்றான் வெற்றி.
நவீனை வேறொரு காரில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன் காரில் அலுவலகத்துக்கு கிளம்பினான் பிரசாந்த்.
அவன் உத்தரவிட்டபடி, அன்று மதியமே நெட் ரிப்பேர் என்று கூறி, மிருதுளாளினியின் வீட்டுக்கு சென்ற சிபிஐ டெக்னீஷியன் ஒருவர், அங்கிருந்த ஹார்ட்டிஸ்க்கை அலேக்காக தூக்கி வந்திருந்தார்.
அதில் இருந்த காட்சிகள், மீண்டும் முழுமையாக கொண்டு வரப்பட்டன. அந்த காட்சிகளில் இருந்த விஜயகுமாரின் புகைப்படம் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டு, முகத்தை வைத்து அடையாளம் காணும் சாப்ட்வேர்  மூலம் அவனது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு, அவனும் கொத்தாக ஸ்டேஷனுக்கு தூக்கி வரப்பட்டிருந்தான்.
எல்லாம் பக்கவாக முடிந்த நிலையில், தன் படையுடன் மிருதுளானி வீட்டுக்கு கிளம்பினான் பிரசாந்த்.
ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்ததைபோல் இருந்தால் மிருதுளானி.
உள்ளே நுழைந்தவுடன், ‘‘சிபிஐ…’’ என்று தன் அடையாள அட்டைய தூக்கி காண்பித்தான் பிரசாந்த்.
‘‘எஸ்… நான் உங்களுக்கு எப்படி உதவலாம்…?’’ என்றாள் மிருதுளானி.
‘‘நாங்க உங்களை அரஸ்ட் பண்ண வந்திருக்கோம்…’’
‘‘அப்படியா… சாரி சார்… நான் முன்ஜாமீன் வாங்கி வச்சிருக்கேன்…’’ என்று நீதிமன்ற உத்தரவை காட்டினாள் மிருதுளானி.
அதை வாங்கி பார்த்தான் பிரசாந்த். அவன் முகத்தில் ஒரு சின்ன புன்னகை மலர்ந்தது.
‘‘எதிர்பார்த்தேன் மேடம்… ஆனா, சாரி… இது ரேஷ்மா கேஸ்ல, நீங்க வாங்கி வச்சிருக்க பெயில். நாங்க உங்களை அரெஸ்ட் பண்ண வந்தது, வெளிநாட்டு முதலீட்டுக்கு முறைகேடா அனுமதி வாங்கியிருக்க விவகாரத்தில…’’
ஒருகனம் பிரசாந்த் கூறியதை கேட்டு திகைத்து போனாள் மிருதுளானி.
‘‘நீங்க ரேஷ்மா கேஸ்லதானே அரஸ்ட் பண்ண வர்றதா எனக்கு தகவல் வந்தது…’’
‘‘நாங்க காலையில இருந்து வேலை பார்த்தது எல்லாம் அதுக்குத்தான். ஆனா, சிபிஐ ஆபிஸ்ல நடந்த வேலை எதுவும் உங்களுக்கு தெரியாதே… அங்க உங்களுக்கு ஆள் இருக்க மாட்டாங்களே… அதனால உங்களுக்கு தெரியாம போயிடுச்சு…’’
‘‘ஓ… நோ… நான் ஒரு போன் பண்ணணும்…’’
‘‘உங்களுக்கு 3 கால்ஸூக்கு வாய்ப்பு தர்றேன்… அதுக்கப்புறம் நாங்க கூட்டிட்டு போயிடுவோம்…’’
உடனடியாக தன் போனை எடுத்து, பரமசிவத்தின் பி.ஏ.வை தொடர்புக் கொண்டாள்.
நீண்ட ரிங்குக்கு பின்னால் எடுக்கப்பட்டது.
‘‘சார்… நான் மிருதுளானி பேசுறேன்…’’ என்று அவள் முடிப்பதற்குள், ‘‘ராங்நம்பர்…’’ என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தன்னுடைய நம்பர் ஏற்கனவே அவரிடம் இருந்தது. தான் பேசுவது அவருக்கு நன்றாகவே தெரியும். தான் கைதாகப்போவது அவருக்கும் தெரிந்திருக்கிறது.
அடுத்ததாக முன்னாள் உள்துறை செயலாளரை அழைத்தாள் அங்கும் அதே பதில்.
இனி யார், யாருக்கோ போன் போட்டுக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்று நேரடியாக பரமசிவத்துக்கே போன் அடித்தாள்.
போன் எடுத்தவுடேனேயே, ‘‘ராங்நம்பர்’’ என்று சொல்லப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அப்படியே பொத்தென்று சோபாவில் உட்கார்ந்தாள்.
‘‘எல்லாரும் ராங்நம்பர்னு சொல்லியிருப்பாங்களே மேடம்…?’’ என்றான் பிரசாந்த்.
அவனை திரும்பிப் பார்த்தாள் மிருதுளானி.
‘‘போகலாமா…?’’ என்று அவளது பதிலை எதிர்பார்க்காமல், கூலிங்கிளாசை எடுத்து ஸ்டைலாக மாட்டிக்கொண்டு காரை நோக்கி நடந்தான் பிரசாந்த்.
பின்னால் சோபாவில் இருந்த மிருதுளானியை இரண்டு பெண் காவலர்கள் கையை பிடித்துக் கொண்டு எழுச் செய்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும் 24)
25
மிருதுளானியை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றான் பிரசாந்த்.
அன்றிரவு சிபிஐ அலுவலகத்திலேயே உள்ள சிறையில் அடைக்கப்பட்டாள் மிருதுளானி.
அந்த இடைப்பட்ட நேரத்தில் பிரசாந்த் வெளியிட்ட உத்தரவின்பேரில், டெல்லியில் இருந்து எதுவும் தெரியவந்த அபிஜித் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
மிருதுளானியை தவிர மற்ற அனைவரும் ரேஷ்மா, காணாமல் போன வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மிருதுளானி மட்டும்தான் பிரசாந்தின் உத்தரவின்பேரில், முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாள்.
மறுநாள் காலை எட்டு மணிக்கே மிருதுளானியிடம் 9 மணிக்கு விசாரணைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாள்.
சரியாக ஒன்பது மணிக்கு அவள் விசாரணைக்கு அறைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஒரு டேபிள் முன்பு உட்கார வைக்கப்பட்டாள். அடுத்த சில நிமிடங்களில், அங்கே வந்தான் பிரசாந்த்.
‘‘மேடம் காபி சாப்பிடுறீங்களா...?’’ என்று கேட்டான்.
‘‘நான் காபி குடிக்கிறதில்லை...’’ என்றாள் மிருதுளானி.
‘‘ஓ...’’ என்றபடி, பக்கவாட்டில் இருந்த கண்ணாடி சுவரில் கைக்காட்டி ஒரு காபி என்றான்.
அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் வந்து காபியை வைத்துவிட்டு சென்றார்.
‘‘மேடம் ரேஷ்மா...’’ என்று காபியை குடித்தபடி ஆரம்பித்தான் பிரசாந்த்.
‘‘அது இந்த கேசுக்கு தேவையில்லாத ஒண்ணு...’’ என்றாள் மிருதுளானி.
‘‘நான் இன்னும் கேள்வியை முழுசாவே முடிக்கவில்லையே... அதுக்குள்ள நீங்களா வேற எதையோ கற்பனை பண்ணிக்கிட்டீங்கன்னா?’’ என்றான் பிரசாந்த்.
‘‘சரி கேளுங்க...’’
‘‘ரேஷ்மா உங்க மகள்தானே...’’
‘‘ஆமா... அதனால என்ன?’’
‘‘அப்புறம் ஏன் அவங்களை உங்க சிஸ்டர்னு எல்லார்க்கிட்டேயும் சொன்னீங்க?’’
‘‘அது என் பெர்ஷனல் விஷயம்... அப்புறம் நீங்க என்ன கைது செஞ்ச கேசுக்கும் ரேஷ்மாவுக்கு என்ன தொடர்பு இருக்கு? சும்மா... சும்மா... அவளைப்பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க?’’
‘‘பெரிய சம்பந்தம் இருக்கு மேடம்... அதனாலத்தானே அங்க இருந்து ஆரம்பிச்சிருக்கேன்... சரி எக்ஸ் மினிஸ்டர் பரமசிவத்துக்கு எதுக்காக 5 கோடி ரூபாய் குடுத்தீங்க?’’
‘‘வாட் நான்சென்ஸ்... நான் எதுக்கு அவருக்கு குடுக்கணும்?’’
‘‘அப்போ நீங்க குடுக்கலைன்னு சொல்றீங்களா?’’
‘‘கட்டாயமா...’’
‘‘அப்போ இது என்ன...?’’ என்று மிருதுளானி நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் வித்ட்ரா செய்யப்பட்டதற்கான வங்கி ஆதாரத்தை காட்டினான்.
‘‘ஒரு பெரிய நிறுவனம் நடத்துறவங்க... தினமும் பணம் எடுக்கிறது தப்பா?’’
‘‘ஒரு பெரிய நிறுவனம் தன் தேவைக்காக பணம் எடுக்கிறது எந்த விதத்திலும் தப்பில்லை. ஆனா, அதை ஒரு பெரிய மனிதருக்கு லஞ்சமா குடுக்கிறதுக்கு எடுத்தா அது தப்பில்லையா?’’
‘‘வாட் யூ மீன்...?’’
‘‘மீனும் இல்ல... கருவாடும் இல்ல... நீங்க உங்க மேனேஜர் மூலமா இந்த 5 கோடிய எக்ஸ் மினிஸ்டர் வீட்டுக்கு கொண்டு போய் லஞ்சமா குடுத்திருக்கீங்க... உங்க மேனேஜர் அவர் வீட்டுக்கு போன சிசிடிவி கேமரா காட்சிகள் இருக்கு... அப்புறம் முக்கியமா உங்க ஹஸ்பண்ட் தன்னுடைய டைரியிலேயே நீங்க லஞ்சம் குடுத்ததா எழுதி வச்சிருக்கார்....’’
‘‘என்ன சொல்றீங்க... யார் என் ஹஸ்பண்ட்?’’
‘‘ஓ... அதையும் நான் விளக்கி சொல்லணுமா? நீங்களும் அபிஜித்தும், ரிஜிஸ்தராரை வீட்டுக்கு வரவழைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே... அதோட சர்டிபிகேட் இது’’ என்று சான்றிதழை காட்டினான் பிரசாந்த்.
பிரசாந்த் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல மிருதுளானியின் முகம் வெளுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘‘இனி நீங்க தப்ப முடியாது. எல்லாத்திலேயும் வசமாக சிக்கியிருக்கீங்க... ரேஷ்மா கொலை உட்பட...’’ என்றான் பிரசாந்த்.
‘‘அந்த கொலைய நான் பண்ணல...’’ என்று கத்திய மிருதுளானி, அவசரப்பட்டுட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டாள்.
‘‘அப்போ அதை யார் பண்ணது?’’
‘‘இப்போ இந்த கேசுக்கு அது தேவையில்லாத ஒண்ணு... நீங்க ரூட் மாறி போறீங்க...’’ என்றாள் மிருதுளானி.
பிரசாந்த் கண்ணாடி சுவற்றை பார்த்து கைதட்டினான்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளே் வந்தார்.
‘‘தனசேகர் கொலை தண்டனைக்கு எவ்வளவு வருஷம்...?’’
‘‘சார்... 14 வருஷம் கிடைக்கும்... திட்டமிட்டு பண்ணதா தெரிஞ்சா... வாழ்நாள் சிறை கூட விதிக்க சான்ஸ் இருக்கு சார்...’’
‘‘அப்படியா கன்பார்ம்மா சொல்றீங்களா?’’
‘‘யெஸ் சார் சுயூர்...’’
‘‘ஓகே நீங்க கிளம்பலாம்...’’ என்று சொல்லிவிட்டு, ‘‘பார்த்தீங்களா மேடம்... உங்க வாழ்நாள் பூரா ஜெயில்லதான் இருக்கப்போறீங்க... அப்புறம் நான் பெயில் வாங்கியிருக்கேன்... அதப்பத்தி கேட்கக்கூடாதுன்னு சொல்ல ஆரம்பிச்சுடாதீங்க... உங்க பெயில் 3 நாளைக்குதான் செல்லுபடியாகும். இன்னைக்கு ஒரு நாள் ஏற்கனவே போயிடுச்சு.... இன்னும் ரெண்டு நாள்ல நாங்க அந்த பெயிலை ஒடைச்சி அதிலேயும் உங்களை கைது பண்ணிடுவோம்’’
மிருதுளானி அமைதியாக இருந்தாள்.
‘‘வழக்கமான அரசியல்வாதிகள் மாதிரி நீங்க இருந்தீங்கன்னா... சிபிஐ பத்தி உங்களுக்கு தெரியாது... வச்சு செஞ்சிடுவோம்... நீங்க போன் பண்ணப்பவே தெரிஞ்சிருக்குமே... நெருக்கமானவங்களே உங்களை கைவிட்டது... அப்புறம் உங்க எக்ஸ் நினைச்சாக்கூட இந்த வழக்கில இருந்து உங்களை காப்பாத்த முடியாது... ஆனா, தண்டனையை குறைக்க ஒரு வழியிருக்கு...’’ என்று நிறுத்தினான்.
‘‘என்ன வழி அது...?’’ என்று வேகமாக கேட்டாள் மிருதுளானி.
‘‘எக்ஸ் மினிஸ்டருக்கு எதிரா நீங்க அப்ரூவர் ஆகணும். என்னென்ன செஞ்சீங்க... எவ்வளவு குடுத்தீங்கன்னு சொன்னா... இந்த வழக்கில இருந்து தண்டனை குறையும். ரேஷ்மா வழக்கிலேயும் தெரியா கைப்பட்டு ஆக்சிடன்ட்ல துப்பாக்கி வெடிச்சதுன்னு மாத்தவும் வாய்ப்பிருக்கு...’’ என்றான்.
உடனடியாக பதில் கூறாமல் அமைதி காத்தாள் மிருதுளானி.
சில நிமிடங்கள் அப்படியே கரைந்தன.
‘‘சரி நான் அப்ரூவர் ஆகிறேன்...’’ என்றாள் மிருதுளானி.
‘‘தட்ஸ் குட்’’ என்று கைதட்டினான் பிரசாந்த்.
(தொடரும் 25)
26
விசாரணை அறையில் இருந்தபடி, பிரசாந்த், வெளியில் இருந்தவர்களுக்கு சைகை செய்தான்.
வெளியில் இருந்து உடனடியாக வீடியோ கேமராவுடன் தனசேகர் மற்றும் சில அதிகாரிகள் உள்ளே வந்தனர்.
அவர்கள் வீடியோவை ஆன் செய்ய, பரமசிவத்துக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது, யாரிடம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விலாவாரியாக விவரித்தாள் மிருதுளானி.
இறுதியில், ‘‘இதை வெளியில் சொன்னால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை என் முழு சுய நினைவுடன் அளித்த வாக்குமூலம்’’ என்று முடித்தாள் மிருதுளானி.
அதை பதிவு செய்துக் கொண்ட பிரசாந்த் குட் மேடம். ‘‘இப்போ நீங்க உங்க செல்லில போய் ரெஸ்ட் எடுக்கலாம்’’ என்றான்.
‘‘சார் ஒரு டவுட். ரேஷ்மா இறந்துட்டான்னு சொன்னீங்களே… அதை எப்படி கன்பார்ம் பண்ணீங்க… அது என் மகளோட பாடியே இல்லைன்னு நான் கோர்ட்டில பல்டி அடிச்சா?’’ என்றாள் மிருதுளானி.
‘‘குட் டவுட்… ஆனா, நாங்க சிபிஐ. ஆதாரம் இல்லாம கோர்ட்டில போய் நிக்க மாட்டோம். நீங்க டை அடிக்க ஒரு பியூட்டி பார்லர் போவீங்களே ஞாபகம் இருக்கா… நேத்து நீங்க அங்க போயிருந்தப்போ… உங்க பக்கத்து சீட்ல உட்கார்ந்திருந்த பொண்ணு உங்களுக்கு நிச்சயம் ஞாபகம் இருக்காது. அது எங்க ஆபிசர்தான். டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக உங்களோட முடியை எடுப்பதறகாக வந்திருந்தா… அதுலதான் புதைச்ச பாடி உங்க மகளோடதுன்னு கன்பாரம் ஆயிடிச்சு… அப்புறம் உங்க பர்ஸ்ட் ஹஸ்பண்ட்டை தேடி கண்டுபிடிச்சு, அவரோட டிஎன்ஏ.வையும் மேட்ச் பண்ணிட்டோம்… அப்புறம் உங்க டிரைவர் வெற்றி மற்றும் அந்த குண்டர்களோட வாக்குமூலம்… சோ நீங்க தப்பிக்க சான்சே இல்லை… ஆனா, உங்க மகளை கொன்னுட்டு அவ அமெரிக்காவுக்கு போய்ட்டதா காட்டுறதுக்காக, அவளோட சிம்மை யார் மூலமோ அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கிருந்து பேச வச்சதுதான் காமெடி… இந்தியாவுக்கும் அமெரிக்காவும் குற்றங்கள் தடுப்புல ஒப்பந்தம் இருக்கு… அதனால போன் வந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிச்சு… ஆளை செக் பண்ணிட்டோம்… அது ரேஷ்மா இல்லைன்னு…’’ என்றான் பிரசாந்த்.
‘‘யூ பிரில்லியன்ட்…’’ என்றாள் மிருதுளானி.
‘‘இல்லேன்னா நீங்க எல்லாம் சாதாரணமா கொலை பண்ணிட்டு போய்ட்டே இருப்பீங்களே...?’’
பிரசாந்த் சைகை காட்ட, மிருதுளானியை இரண்டு பெண் காவலர்கள் செல்லுக்கு அழைத்து சென்றனர்.
பிரசாந்த் தன் இருக்கைக்கு சென்று டெல்லியில் இருந்த மேலதிகாரியிடம் பேசினான்.
‘‘சார்… அவங்க அப்ரூவர் ஆயிட்டாங்க… நாளைக்கே கோர்ட்டுல ஆஜர்படுத்திடலாம்’’ என்றான்.
‘‘….’’
‘‘சார்… சார்… இது என் கடமைதானே சார். நீங்க ஊக்கம் குடுத்தீங்க… நான் செஞ்சு முடிச்சேன். எனக்கு புரமோஷன் கன்பார்ம் தானே சார்?’’ என்றான்.
‘‘…..’’
‘‘ஓகே சார்… ரொம்ப சந்தோஷம்…’’ என்று மகிழ்ச்சியுடன் போன் இணைப்பை துண்டித்தான்.
மறுநாள்.
சிறப்பு நீதிமன்றத்துக்கு மிருதுளானி, அபிஜித், விஜயகுமார் மற்றும் வெற்றி அன்கோவினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். மிருதுளானி, அபிஜித், விஜயகுமார் முதல் வரிசையில் இருந்த 5 பேர் அமரும் நீண்ட இருக்கையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் வெற்றி அன்கோவினர் உட்கார்ந்திருந்தனர்.
அன்று முன்ஜாமீன் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் பரமசிவமும் நீதிமன்றத்துக்கு வந்தார்.
ஆட்சியில் இல்லாததால் அவரை வாழ்த்தி கோஷம் போடுவதற்கு நீதிமன்றத்தில் ஒரு ஈ, காக்கை கூட இல்லை. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால், பத்திரிகையாளர்கள் மட்டும் ஏராளமாக திரண்டிருந்தனர்.
வாசலில் நின்றிருந்த பிரசாந்தை முறைத்த பரமசிவம், ‘‘தேர் எப்பவும் ஒரே தெருவுல நிக்காது. எங்க தெருவுக்கும் வரும். அப்போ நாங்களும் கூழ் காய்ச்சுவோம்… அப்போ பூசாரியில இருந்து பழம் குடுக்கிறவன் வரை எங்கக்கிட்ட தான் வரணும்…’’ என்றபடி நடந்தார்.
அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று வக்கீல்கள் அமரும் இடத்தில் அரசு வக்கீலுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான் பிரசாந்த்.
நீதிமன்றத்தில் நுழைந்த பரமசிவம், அமருவதற்காக இருக்கையை பார்த்தார். மிருதுளானி பக்கத்தில் இருந்த காலி இடத்தில் சென்று உட்கார்ந்துக் கொண்டார்.
அவருக்கு வணக்கம் தெரிவித்தாள் மிருதுளானி.  ஆனால், பெரிய அளவில் கண்டுக்கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டினார் பரமசிவம்.
அந்த நேரத்தில் மிருதுளானியின் பி.ஏ. அங்கு வந்தாள்.
அவள் பரமசிவத்துக்கு அருகில் இருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.
அமைச்சரின் பின்புறத்தில் இருந்து மிருதுளானியிடம், ‘‘ஒரே நாள்ல ரொம்ப டல்லாயிட்டீங்க மேடம்… உதடு எல்லாம் வெடித்து, பார்க்கவே சகிக்கல…’’ என்று கூறியவள் தன் பையில் இருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து, பரமசிவத்திடம் கொடுத்து, ‘‘சார் மேடம் கிட்ட பாஸ் பண்ணுங்களேன்…’’ என்றாள்.
பரமசிவம் அதை வாங்கி, பூ கொடுப்பதுபோல் மிருதுளானியிடம் கொடுத்தார்.
மிருதுளானி அமைச்சரிடம் இருந்த செல்போன் உரிமையுடன் வாங்கி, அதைப்பார்த்துக் கொண்டே லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டாள்.
அதன் வாசனையோ என்னவோ, மிருதுளானிக்கும், விஜயகுமாருக்கும் நடுவில் இருந்த அபிஜித்துக்கு இருமல் ஆரம்பித்தது. அவர் ஏற்கனவே ஆஸ்துமா பேஷன்ட். இதனால் தொடர் இருமலால் அவதிப்பட்டார்.
அதைப்பார்த்த மிருதுளானியின் பி.ஏ. தன் பையில் இருந்த அபிஜித்தின் உறிஞ்சும் மருந்து குப்பியை எடுத்து, ‘‘சார்… எங்க சேர்மன் ரொம்ப இருமுருரார்… தயவு செஞ்சு அவர்கிட்ட பாஸ் குடுங்க…’’ என்றாள்.
முறைத்துக் கொண்டே அதை வாங்கி அபிஜித்திடம் கொடுத்தார் பரமசிவம்.
‘சார்…’’ என்று மீண்டும் மிருதுளானியின் பி.ஏ. கூப்பிடவும், ‘‘இனிமே என்னால முடியாது… பேசாம நீ இங்க உட்காரு…’’ என்று எழுந்து அவருக்கு இடத்தை காட்டினார்.
‘‘சார் உங்களுக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டேன். சாரி சார்.. நான் வெளியே போயிடுறேன்’’ என்று அவள் எழுந்து சென்றுவிட்டாள். மீண்டும் பரமசிவம் உட்கார்ந்துக் கொண்டார்.
இன்னமும் நீதிபதி வராத நிலையில் பல்லை கடிக்க ஆரம்பித்தார் பரமசிவம்.
விஜயகுமார் எழுந்தான்.
வெளியே நின்றிருந்த போலீஸ்காரர், ‘‘இப்படி எல்லாம் வெளியே வரக்கூடாது. உள்ளே போய் உட்காருங்க…’’ என்றார்.
‘‘தலைவரே பாத்ரூம் போய்ட்டு ஒரு தம் போட்டுட்டு வந்துடுறேன்… வாய் சும்மா நம, நமன்னுது…’’ என்று பாத்ரூம் நோக்கி போனான்.
ஏற்கனவே நீதிமன்றத்துக்கு பலமுறை வந்துள்ளதால், அங்கு யாருக்கும் தெரியாமல் கைதிகளுக்காகவே ரகசியமாய் சிகரெட் விற்பனை நடப்பது அவனுக்கு தெரியும்.
அவன் எதிர்பார்த்ததுபோலவே, உள்ளே கறை படிந்த பற்களுடன் ஒருவன் பான்ட் பாக்கெட் வைத்துக் கொண்டு சிகரெட் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம், ‘‘தம்பீ ஒரு டிரிபிள் பை குடு…’’ என்றான்.
‘‘டிரிபிள் பைவ்னா ஒரு பாக்கெட்தான் குடுப்பேன்… 300 ரூவா…’’ என்றான்.
தன் சட்டை காலரில் மடித்து, சுருட்டி வைத்திருந்த 500 ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தான். சில்லரையும் சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். பாக்கெட்டை எடுத்து சட்டையின் உள்ளே வைத்துக் கொண்டான்.
பொறுக்க தம் அடிக்க ஆரம்பித்தான்.
‘‘கொய்யால… வர, வர இந்த டிரிபிள் பைவ் கூட கசக்குது…’’ என்று முணங்கிக் கொண்டே புகையை உள்ளே இழுத்தான்.
அவர் தம் அடித்துக் கொண்டிருந்தபோதே, வெற்றியும், மற்ற 3 தடியர்களும், இயற்கை உந்துதல் பெயரில் உள்ளே வந்தனர்.
‘‘டேய் தண்ணீ காணோம்… பார்த்துப் போங்கடா’’ என்றான் விஜயகுமார்.
‘‘அண்ணே நாங்க ரீசஸ்க்குத்தான் வந்தோம்’’ என்று கூறி தாங்கள் வந்த வேலையை செய்துக் கொண்டிருந்தபோதுதான், இரண்டு பேர் உள்ளே வந்து குவாட்டரை உடைத்து குடிக்க ஆரம்பித்தனர்.
அதைப்பார்த்த வெற்றிக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
‘‘தம்பீ… ஒண்ணுதான் இருக்கா… எங்கே வாங்கீனீங்க…?’’ என்றான்.
‘‘தலைவா இத என் நண்பன் வாங்கியாந்து குடுத்தான். இவனுக்கு ஒண்ணு எனக்கொன்னு…’’ என்றான்.
‘‘அட்ரா சக்க… தம்பீ… நீங்க ஒண்ணு அடிச்சிக்கோங்க… இன்னொன்ன எங்களுக்கு தாங்களேன். ரூவா தர்றேன்பா…’’ என்றான்.
‘‘டேய் வத்திக்குச்சிக்காரன் வந்துடுவான். இன்னொன்னு அடிக்க நேரமில்ல… பேசாம இவங்கக்கிட்ட குடுத்துடு…’’ என்றான் வந்தவர்களில் ஒருவன்.
‘‘சரிண்ணா… 500 ரூபா குடு…’’ என்றான் வெற்றியை பார்த்து மற்றொருவன்.
‘‘டேய் தம்பீ… 150 ரூபா தானேடா…’’ என்றான் வெற்றி.
‘‘அது கடையில… இது என்னா இடம்… வேணும்னா குடு… இல்லாட்டி நாங்களே அடிச்சிட்டு கௌம்புறோம்…’’ என்றான்.
வெற்றி, குண்டர்களில் ஒருவனை பார்க்க, அவன் தன் செருப்பின் பின்பகுதியில் சொருகி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
அவர்கள் குவாட்டரை கொடுத்துவிட்டு நகல, நால்வரும் சேர்ந்து அதை கொஞ்சம், கொஞ்சமாக குடித்தனர். ‘‘டேய்… ஐநூறு ரூபாய் எல்லாம் ரொம்ப, ரொம்ப அதிகம்டா…’’ என்றான் குண்டர்களில் ஒருவன்.
‘‘கஸ்மாலம்… ஜெயிலுக்கு போய்ட்டா இது கூட கிடைக்காது… இதுதான் கடைசி சரக்கா கூட இருக்கும்…மூடிட்டு கௌம்பு…’’ என்றான் வெற்றி.
ஐந்து பேரும் நீதிமன்றத்தில் மீண்டும் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தபோது, நீதிபதி வந்திருந்தார்.
முதல் வழக்காக பரமசிவத்தின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுப்பதாகவும், ஆனால் மேல்முறையீடுக்கு இரு வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து பரமசிவம் வெளியே வந்தார். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.
நீதிமன்றத்தில் அடுத்த வழக்காக மிருதுளானியின் வழக்கு விசாரணைக்கு வந்தது.
தவாலி மிருதுளானியின் பெயரை மூன்று முறை அழைத்தார்.
மிருதுளானி எழுந்து வராததால், பிரசாந்த் அவளை பார்த்தான். அவள் அபிஜித்தின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பி விடுமாறு போலீஸ்காரருக்கு சைகை காட்டினான் பிரசாந்த்.
போலீஸ்காரர் விரைந்து வந்து, ‘‘மிருதுளானியிடம் மேடம்… மேடம்…’’ என்று கூப்பிட்டார். ஆனால், அவள் எழுந்திருப்பதாக தெரியவில்லை. சந்தேகத்தால் மெதுவாக அவளது தாடையை பிடித்து தூக்கினார். அவளது வாயில் இருந்து ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது.
(தொடரும் 26)
27
‘‘சார்…’’ என்று போலீஸ்காரர் கத்திய கத்தலில் துள்ளிக்குதித்து ஓடி வந்தான் பிரசாந்த்.
இவ்வளவு கத்தலுக்கு இடையிலும், தலையை பின்னால் தொங்க போட்டுக் கொண்டிருந்த அபிஜித்தும், விஜயகுமாரும் கூட எழுந்திருக்கவில்லை.
விசாரணைக்காக வந்திருந்த ஒரு டாக்டர், ‘‘தள்ளுங்க நான் பார்க்கிறேன்…’’ என்று அவர்களின் நாடித்துடிப்பை சோதனை செய்தார். ‘‘மூணு பேருமே டெட்…’’ என்றார் கரகரத்த குரலில்.
பிரசாந்த் பல்லைக் கடித்தான்.
இவர்களுக்கு பின்னால் இருந்த தடியர்கள் 4 பேரின் தலை கூட பின்னால் தொங்கியிருந்ததால், சந்தேகத்தில் அவர்களையும் சோதனை செய்ய சொன்னான் பிரசாந்த்.
அவர்களின் நாடித்துடிப்பையும் பார்த்துவிட்டு, ‘‘இவங்களும் டெட்…’’ என்று கூறிவிட்டு நகர்ந்தார் டாக்டர்.
அப்போது, பிரசாந்தின் செல்போனில் அடுத்தடுத்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்ததுக்கு அடையாளமாக சிணுங், சிணுங் என்று மூன்று முறை ஒலித்தது.
எடுத்து பார்த்தான்.
மூன்று படங்கள் வந்திருந்தன. அவை ஒவ்வொன்றாக டவுன் லோட் ஆக ஆரம்பித்தன.
முதல் படத்தில் லிப்ஸ்டிக்கை பரமசிவம் மிருதுளானியிடம் கொடுக்கும் காட்சியும், இரண்டாவது படத்தில் உறிஞ்சும் மருந்து குப்பியை அபிஜித்திடம் கொடுக்கும் காட்சியும் இருந்தது. மூன்றாவது படத்தில் விஜயகுமார் சிகரெட் அடிப்பதுபோல் இருந்தது.
பிரசாந்துக்கு புரிய ஆரம்பித்தது.
துள்ளிக்குதித்து மீண்டும் வக்கீலிடம் சென்று காதில் கிசுகிசுத்தான். வாட்ஸ்அப் காட்சிகளையும் காட்டினான்.
நீதிபதியிடம் சென்ற வக்கீல், ‘‘யுவர் ஹானர்… எக்ஸ் மினிஸ்டரால தன் உயிருக்கு ஏற்கனவே ஆபத்து இருக்குன்னு ஏற்கனவே மிருதுளானி வாக்குமூலம் குடுத்திருக்காங்க… மேலும், அவங்களுக்கு லிப்ஸ்டிக்கும், அபிஜித்துக்கு குப்பியையும், விஜயகுமாருக்கு சிகரெட்டையும் அவரே சப்ளை செய்திருக்கார்னு நம்புறோம். அதற்கான படங்களை இங்கே யாரோ செல்போன் மூலமா படம் பிடிச்சிருக்காங்க… இப்போதைக்கு எங்கக்கிட்ட ஸ்ட்ராங் எவிடன்ஸ் இருக்கு. இதோ அந்த ஆதாரங்கள். இவற்றின் மூலம் தான் அவங்க கொல்லப்பட்டிருக்கலாம்னு நம்புறோம் யுவர் ஹானர்… அதனால பரமசிவத்தை கைது செய்ய நீங்க ஆர்டர் குடுத்தீங்கன்னா… அவர் நீதிமன்றத்தைவிட்டு வெளியே போறதுக்குள்ள கைது செஞ்சிடுவோம்’’ என்றார்.
ஆதாரங்களை வாங்கிப்பார்த்த நீதிபதி, ‘‘உங்க டவுட் கரெக்ட் தானா?’’ என்று  பிரசாந்த்திடம் கேட்டார்.
‘‘எஸ் யுவர் ஹானர்…’’ என்றான்.
‘‘ஓ…கே… அவரை கைது செஞ்சு ஆஜர்படுத்துங்க…’’ என்றார் நீதிபதி.
வெளியே, ‘‘என்னை சிபிஐ கைது செய்ய முயல்வது அரசியல்  சதி…’’ என்று வீராவேசமாக பேட்டி அளித்துக் கொண்டிருந்த பரமசிவத்திடம் சென்றான் பிரசாந்த்.
‘‘யூ ஆர் அண்டர் அரஸ்ட்’’ என்றான்.
அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்த அவர், ‘‘எதுக்காக…? நீதிமன்ற வளாகத்தில யாரையும் கைது பண்ண முடியாது தெரியுமா… எனக்குத்தான் ஜட்ஜ் ரெண்டு வாரம் டைம் குடுத்திருக்காரே…’’ என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.
‘‘நீதிமன்றத்திலேயே மிருதுளானி, அபிஜித், விஜயகுமார், குண்டர்கள் 4 பேரையும் கொன்னுருக்கீங்க… அதனாலத்தான் உங்களை அரஸ்ட் பண்றோம்…’’
‘‘என்னய்யா… சொல்றீங்க… அவங்களெல்லாம் குத்துக்கல்லாட்டம் கோர்ட்ல உட்கார்ந்து இருந்தாங்களே…’’
‘‘இப்போ அவங்க உயிரோட இல்ல… நீங்க குடுத்த லிப்ஸ்டிக், குப்பி மற்றும் யார் மூலமாகவோ குடுத்த சிகரெட்டால அவங்க நாலு பேரும் செத்துட்டாங்க…’’
‘‘என்னைய்யா சொல்லுறே… நான் ஒண்ணும் குடுக்கல… பக்கத்தில இருந்த பொண்ணு குடுத்தததான் நான் அவங்கக்கிட்ட குடுத்தேன்… ’’ என்று பூட்டப்பட்ட கைவிலங்குடன் பிரசாந்துடன் நடந்தார்.
‘‘அத கோர்ட்ல வந்து சொல்லுங்க…’’ என்று அவரை நீதிமன்றத்தின் உள்ளே அழைத்து சென்றான் பிரசாந்த்.
அடுத்த நாள் காலையில் அனைத்து பத்திரிகைகளிலும் மிருதுளானி மற்றும் 6 பேரின் கொலைதான் பெரிய அளவில் தலைப்பு செய்திகளாக வெளியாகி இருந்தது. கொலையாளியான முன்னாள் அமைச்சர் பரமசிவம் நீதிமன்றத்திலேயே கைது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரசாந்துக்கே மிக குழப்பமாக இருந்தது. நீதிமன்றத்திலேயே இத்தனை கொலை நடந்திருக்கிறது. அசால்ட்டா இருந்துட்டோமே … என்று நினைத்தான்.
அவன் நினைத்தது சரியாக இருந்தது. லிப்ஸ்டிக் மற்றும் குப்பியில் பயங்கர சயனைடு இருந்தது. விஜயகுமாரின் சிகரெட்டில் மிக சாமர்த்தியமாக, நுண்ணிய தார் உருண்டைகள் புகையிலையுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தன. புகைபிடிக்கும்போது, தார் உருகி நுரையீரலுக்கு சென்றுள்ளன. புகை சூடு வடிந்த பின்னர், நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துள்ளன. புது வகை வெப்பன்.
மற்ற நால்வரின் உடலிலும் ஆல்கஹால் இருந்துள்ளது. ஆனால், உடலில் நஞ்சு ஏறியுள்ளது. காரணம் என்ன என்று தெரியவில்லை. புதுவித நஞ்சாக உள்ளது என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் நடந்த 7 கொலைகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தான் பிரசாந்த். இந்த சம்பவத்தை நினைத்து, நினைத்து ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தான்.
‘‘சே… தானா திரண்டு வந்த வெண்ணையை கூட தக்க வைக்க முடியாம போய்ட்டோமே…’’ என்ற வீட்டில் அமர்ந்து, வெளிநாட்டு விஸ்கியை காலி செய்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் லேண்ட்லைன் ரிங்கடித்தது.
எழுந்து சென்று எடுத்து ‘‘ஹலோ…’’ என்றான் பிரசாந்த்.
‘‘என்ன மச்சி சோகத்தில தண்ணீ அடிச்சிட்டு இருக்கீயா?’’ என்றான் நவீன்.
அவனது குரலை கேட்டு, ‘‘ஆமாண்டா… அந்த பரமசிவம் பண்ண காரியத்தினால… இப்போ எனக்கு…’’ என்று புலம்பினான்.
‘‘மச்சி… அது பரமசிவம் பண்ணல… நான்தான் தெளிவா என் ஆள் மூலமா பண்ணேன். அதை ஜன்னல்ல இருந்து படம் எடுக்க வச்சு உனக்கு அனுப்பச் சொன்னவனும் நான்தான்’’
‘என்னடா   சொல்றே?’’
‘‘நீ டெல்லி போற வரைக்கும் என் பிரண்டாதான் இருந்தே… நானும் உன்னை நெனைச்சு ரொம்ப பெருமைப்பட்டேன்… ஆனா, டெல்லிக்கு போய்ட்டு வந்து நீ ரொம்ப மாறிட்டே… உன் புரமோஷனுக்காக மிருதுளானியை அப்ரூவர் ஆக்கி, கடைசியில அவகிட்டேயே 50 கோடி டீலிங் பேசி, ஆக்சிடென்ட்லதான் ரேஷ்மா செத்துப்போனான்ற என்ற அளவுக்கு திசை திருப்பவும் தயாராயிட்டே…’’
‘‘மச்சி… அப்படியெல்லாம் இல்லடா…’’
‘‘இரு… இரு… நான் இன்னும் முடிக்கல… முழுசா கேளு… உனக்கு தெரியுமா நண்பா… ரேஷ்மாவோட உண்மையான அப்பாவோட தம்பிதான் இன்ஸ்பெக்டர் தனசேகர். அவர்தான் நீ மாறின விஷயத்தையே எனக்கு போட்டுக் குடுத்தார்…’’
‘‘தனசேகர்… ’’ என்று மனதுக்குள் பொருமினான் பிரசாந்த்.
 ‘‘அது எப்படிடா… பணம்…பதவின்ன உடனேயே ஆளே மாறிடுறீங்க?’’
‘‘டேய்… இல்லடா…’’
‘‘உஷ்… மூச்சு விடக்கூடாது… என் ரேஷ்மாவ கொன்னவன், பொதைச்சவன்னு எவனும் உயிரோட இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இப்போ அவளோட சாவை அசிங்கப்படுத்த நினைச்சவனும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்…’’ என்றான்.
‘‘டேய் நவீன் என்ன சொல்றே… நான் யார் தெரியுமா சிபிஐ எஸ்.பி.டா…’’
‘‘என் அப்பனையே போட்டுட்டேன்… நீ எம்மாத்திரம்டா… நீ சாப்பிட்டியே… விஸ்கி… அதுல சயனைடு கலந்திருக்கு மாமு… கரெக்ட்டா சொல்லணும்னா… இன்னும் ரெண்டு நிமிஷத்தில நீ பரலோகம் போயிடுவே…’’
‘‘டேய்… டேய்…’’ என்று கத்தினான் பிரசாந்த்.
‘‘ஆமா… உனக்கு ஒண்ணு தெரியுமா… அந்த குண்டர்கள் நாலு பேர் செத்ததுக்கு காரணமான அதே நேச்சுரல் சயனைடு… அதாவது மச்சி… 50 கிராம் ஆப்பிள் விதைகளோட சுத்தமான எண்ணெய் அதில கலந்திருக்கு… இது நாகப்பாம்பு விஷத்துக்கு சமமானது… இன்னும் கொஞ்ச நேரத்தில நீ நரகத்துக்கு போய் சேரப்போறே… அப்புறம் இந்த கொலையும் ஆட்டோமேட்டிக்கா அந்த பரமசிவனைப்போய் சேரும்… ஏன்னா ஆப்பிள் விதை எண்ணெய் பாட்டில் அந்தாளோட பெர்ஷனல் ரூம்ல வச்சாச்சு… அவன் பணத்தாலதானே இவ்வளவு வினையும். அவனும் காலத்துக்கு ஜெயில்ல இருந்து சாவட்டும்’’ என்றான்.
‘‘டேய்… டேய்… காப்பாத்துடா…’’
‘‘நோ… வே… நீ அர்ஜூனனா இருந்த வரையில், நான் உனக்கு கிருஷ்ணனா இருந்தேன். நீ இரணியனா மாறிட்ட பின்னாடி… நான் நரசிம்மன்… போய் சேரு…’’ என்று போன் இணைப்பை துண்டித்தான்.
நான்கு நாட்களுக்கு பின்னர்.
லண்டன் விமான நிலையம்.
புல்லிங் டிராலியுடன் வெளியே வந்தான் நவீன்.
முதல் வேலையாக தன்னுடைய லண்டன் சிம்மை எடுத்து செல்போனில் பொருத்தினான்.
டிங் என்று எஸ்எம்எஸ் வந்ததுக்கான ஒலி கேட்டது.
எஸ்எம்எஸ்சை திறந்து பார்த்தான்.
‘‘ரேஷ்மாவின் கணக்கில் இருந்து உங்கள் கணக்குக்கு 2 கோடியே 15 லட்சத்து 5 ஆயிரத்து 376 பவுண்ட் (ரூ.200 கோடி) மாற்றப்பட்டுள்ளது’’ என்று இருந்தது.
தேதியை பார்த்தான் ரேஷ்மா இறந்த தினத்தில் இருந்தது.
தாயுடனான சண்டையின்போது, ரேஷ்மா டேப்லெட்டை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பணத்தை நவீன் கணக்குக்கு மாற்றிவிட்டு, பாஸ்வேர்டு மாற்றியதால்தான் அவளது தாயால் அதை மீண்டும் திறக்க முடியவில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.
பெருமூச்சு விட்டபடி விமான நிலையத்தின் வெளியே வந்தான் நவீன்.
வேகமாக வந்த தென்றல் அவனது முகத்தில் பட்டுத்தெறித்தது. ரேஷ்மாவே ஓடி வந்து அவனை கட்டிப்பிடிப்பதுபோல் உணர்ந்தான். மூச்சை இழுத்துப்பிடித்து அதை அனுபவித்தான்.
                                           தீதும் நன்றே.
(நட்புகளே கதை பிடிச்சிருக்கா… நாலு வரி விமர்ச்சனம் போட மறந்துடாதீங்க… அன்புடன் ஜே.எஸ்.கே.பாலகுமார்)
அடுத்த தொடர், ‘வச்சக்குறி தப்பாது’ என்ற பெயரில் நிஜமான விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு விரைவில் எழுத உள்ளேன். அதற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்.

No comments:

Post a Comment

Thanks